சிறகடிக்க ஆசை: மனோஜுக்கு விழுந்த அடி.. பார்வதி கண்டுபிடித்த உண்மை.. மீனாவை புரிந்து கொள்ளும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 26ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் ஷோரூமுக்கு வந்த நபரால் மனோஜுக்கு புது பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் மீனா சொன்ன உண்மைகளை விஜயாவும் புரிந்து கொள்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதியிடம் மீனா கொலு வைக்கும் முறைகளை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அதை பார்த்து ஸ்ருதி உங்களுக்கு பூ கட்டுவதற்கு தான் தெரியும் என்று நினைத்தேன். ஆனால் உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. ஆன்ட்டிதான் உங்களை திட்டிக்கிட்டே இருக்காங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலையும் விஜயாவும் வருகின்றனர்.

உடனே என்ன ஆன்ட்டி பாக்ஸ்ல வச்சிருக்காங்க என்று ஸ்ருதி தெரியாதது போல கேட்க, அதற்கு விஜயா இவங்க கொலு வைக்கப் போறாங்களாம் என்று சொல்கிறார். அதற்கு உங்களுக்கு ரொம்ப கைண்ட் ஹார்ட் ஆன்ட்டி உங்கள நல்லா யூஸ் பண்ணி இருக்காங்க என்று சொல்ல உடனே முத்து இருமல் வந்தது போல பண்ணுகிறார். ஸ்ருதி பேசியதை கேட்டு சந்தோஷப்படும் விஜயா நான் சொன்னா எங்க கேக்குறாங்க, ஏதோ குடும்பத்துக்கு நல்லதுன்னு சொன்னாங்க அதனால ஒத்துக்கிட்டேன் என்று சொல்கிறார்.
அண்ணாமலை பொம்மை எல்லாம் வாங்கிட்டீங்களா? என்று கேட்க, ஓரளவுக்கு வாங்கியாச்சு மாமா அதான் எடுத்து வச்சு பாத்துட்டு இருக்கிறோம் என்று மீனா சொல்ல, விஜயா சமைக்கிற வேலைய பாரு இதையே பாத்துட்டு இருக்காத என்று சொல்ல சமைச்சுட்டேன் அத்தை என்று மீனா சொன்னதும், முத்து ஒரு பொம்மையை எடுத்து பிரிக்க அது ஒரு போஸ் கொடுப்பதை பார்த்து மீனா டான்ஸ் கிளாஸில் அந்த இருவரும் இப்படித்தான் கட்டி பிடித்துக் கொண்டு இருநதாங்க அந்த என்று சொல்கிறார்.

ஆனால் விஜயா அவங்க சிருங்கார ரசம் பண்ணாங்க என்று சொல்கிறார்.அதற்கு மனோஜ் இவர்களுக்கு அதெல்லாம் எங்க தெரிய போகுது? பரதத்தை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் என்று நக்கலாக பேச முத்து அந்தப் போஸை நீங்க பண்ணி காட்டுங்க என்று விஜயாவிடம் கேட்கிறார். அப்போது தெரிந்துவிடும் யார் சொன்னது உண்மை என்று சொன்னதும் முதலில் மறுக்கும் விஜயா பிறகு அண்ணாமலையுடன் சேர்ந்து அந்த போஸை செய்கிறார்.
ஆனால் விஜயா செய்வதற்கும் டான்ஸ் கிளாஸில் அவர்கள் இருவரும் கட்டிப் பிடித்து நின்றதற்கும் சம்பந்தமில்லை என்று மீனா சொல்ல இதற்கு அண்ணாமலை மீனா சொல்றதில் என்ன தப்பு இருக்கு, அவங்க வீட்டு பசங்களை உன்னை நம்பி தான் அனுப்புறாங்க. ஏதாவது தப்புன்னா உன் தலையை தான் உருட்டுவாங்க என்று சொல்ல விஜயா அதெல்லாம் இல்ல இவ சாப்பாடு எடுத்துட்டு வர்றதுக்கு சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு இப்படி எல்லாம் பேசுறா இனிமே நீ சாப்பாடு எடுத்துட்டு வராத என்று கோபமாக திட்டி விட்டு கிளம்புகிறார்.

மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் சோகமாக உட்கார்ந்து இருக்க, ரோகிணி என்ன ஆச்சு என்று கேட்க, ஒரு 75 ஆயிரம் தேவைப்படுகிறது கையில இருந்ததெல்லாம் ரொட்டேஷனுக்கு சரியா போச்சு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஒரு கஸ்டமர் வருகிறார். அவர் எல்லா பொருட்களையும் வாங்குவதாக லிஸ்ட் போடுகிறார். அதை பார்த்து மனோஜ் ரொம்ப சந்தோசப்பட்டு எப்படியும் 17 லட்சத்துக்கு வரும் நமக்கும் 3 லட்சம் ப்ராஃபிட் கிடைக்கும் என்று சந்தோஷப்படுகிறார்.
ஆனால் அந்த நபர் பாலக்காட்டில் தன்னுடைய மச்சினன் தனக்காக லாட்டரி டிக்கெட் வாங்கி இருப்பதாகவும் அது நாளைக்கு தனக்கு விழுந்திடும் என்று ஜோசியர் சொல்லியிருப்பதாகவும் சொல்ல கோபமான மனோஜ் அவரை அடிக்கப் போகிறார். அந்த நபரும் மனோஜை அடிக்க மனோஜின் பாடிகார்டு வந்து அந்த நபரை வெளியே தூக்கி கொண்டு போடுகிறார். பிறகு சாம்பிராணி போடும் நபர் உள்ளே வந்து உங்களை ஒரு நபர் தனியாக சந்திக்கணும் என்று சொன்னார் நீங்கள் அந்த ஆலமரத்துக்கு வரணுமாம் என்று சொல்லிவிட்டு போகிறார்.
இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார். மறுபக்கத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கும்போது அந்த இரண்டு காதலர்கள் மட்டும் டான்ஸ் ஆடிக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்து சில்மிஷம் செய்து கொண்டிருப்பதை பார்த்து பார்வதியும் அவர்களை கண்காணித்து முகம் சுளிக்கிறார். அப்போது அவர்களின் நடவடிக்கையை விஜயாவும் பார்த்து அதிர்ச்சியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications