Siragadikka aasai promo: ரோகிணியின் பிஏ ரகசியத்தை கண்டுபிடித்த மீனா.. மனோஜை அடித்து வெளுத்த முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 27ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ்க்கு மிரட்டல் கடிதம் எழுதியது முத்து தான் என்று மனோஜ் சொல்லிக் கொண்டிருக்க, விஜயா முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். ஆனால் ரோகினியின் பிஏ பற்றிய ரகசியங்களை மீனா துருவ தொடங்கி இருக்கிறார்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் நாளை இந்த சீரியலில் 500 ஆவது எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ஒரு வித்தியாசமான ட்விஸ்ட் இந்த சீரியலில் வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரோகிணி பற்றிய முக்கிய விஷயம் நாளை எபிசோடில் தெரிய வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே ரோகிணியின் பழைய பிஏ தினேஷ் மனோஜிக்கு கடிதம் எழுதி அவரை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் இரண்டு கடிதம் வந்த நிலையில் கடைசியாக உன்னை கோயிலில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என்று ஷோரூமுக்கு சாம்பிராணி போட வந்த நபர் சொல்லிவிட்டு போயிருக்கிறார். உடனே மனோஜ் தன்னுடைய பாடிகார்ட் பீம் பாய்யை கூட்டிக்கொண்டு கோயிலுக்கு வந்திருக்கிறார்.
அங்கு ரோகிணியின் பிஏ தினேஷ் சாமியார் கெட்டப்பில் இருக்கிறார். அதோடு எனக்கு உன்னுடைய மனைவியை பற்றியும் தெரியும், உன்னை பற்றியும் தெரியும். உனக்கு ஏற்கனவே கடிதம் எழுதியவர் என்னிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிட்டு இப்போதுதான் போனான் என்று சொல்ல, அந்த கடிதத்தை படித்து பார்த்த மனோஜ் என்னுடைய பெயரை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரஜினி நடித்த படத்தின் தலைப்பு தான் என்னுடைய பெயர் என்று க்ளூ கொடுக்கப்பட்டிருக்கிறது.
உடனே மனோஜ் கடிதம் எழுதி மிரட்டியது முத்து என்று தவறாக புரிந்து கொள்கிறார். அதோடு முத்து போட்டோவை தினேஷிடம் காட்ட, தினேஷ் ஏற்கனவே முத்துவின் காரில் போகும்போது அவரை அடித்து போலீஸில் பிடித்துக் கொடுத்ததை ஞாபகம் வைத்து இவன்தான் என்று முத்துவை மாட்டி விடுகிறார். இதனால் மனோஜ் வீட்டில் வந்து முத்து தான் என்னை மிரட்டுவதற்காக லெட்டர் எழுதியது. நான் நல்லா இருக்க கூடாது, நிம்மதியா இருக்க கூடாது என்று இவன் பிளான் போட்டு இருக்கிறான் என்று பிரச்சனை செய்கிறார்.
விஜயா இந்த சாக்கை வைத்து முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறார். அப்போது கோபமாக வீட்டிற்கு வந்த முத்து, ஓடுகாலி உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்குற என்று மனோஜை துரத்தி துரத்தி அடிக்கிறார். ஆரம்பத்தில் அந்தப் ப்ரோமோவில் பீம் பாய் அங்கு நின்று கொண்டிருக்கிறார் பிறகு காணவில்லை. அதனால் முத்து அவரை அடித்து ஓட விட்டு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் முத்துவிடம் மனோஜ் நீதானே எனக்கு லெட்டர் எழுதி என்னை மிரட்டுனது என்று மீண்டும் கேட்க, அப்போது மீனா எனக்கு உங்க அண்ணன் சொல்றதை வச்சு பார்க்கும்போது கடைசியா இவரிடம் லெட்டரை கொடுத்தவர்தான் இவருக்கு வரிசையாக லெட்டர் எழுதி மெரட்டி இருப்பார் என்று தோணுது என்று சொல்ல, மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர். இதை எதிர்பார்க்காத ரோகிணியும் அதிர்ச்சி ஆகிறார். இனி முத்து, மீனா, மனோஜ் சேர்ந்து ரோகிணியின் பிஏ தினேஷை தேடி போகும்போது உண்மைகள் வெளிவருமா? இல்லையா? என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications