சிறகடிக்க ஆசை: உடைந்தது உண்மை.. முத்துவை சிக்க வைக்க ரோகிணி செய்த சூழ்ச்சி.. காப்பாற்றிய மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 30ம் தேதிக்கான எபிசோடில் முத்துவை சிக்க வைப்பதற்காக வித்யாவை வைத்து ரோகிணி புது முயற்சி எடுக்க, அது கடைசி நேரத்தில் மீனாவால் தடைப்பட்டு போகிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணியும் வித்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இந்த முத்து தினேஷ் பற்றிய ரகசியங்களை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அவனுக்கு பிரச்சனை இல்லை என்பதால் தான் அவன் என்னுடைய பிரச்சனையில் தலையிடுகிறான்.

siragadikka aasai serial vijay tv

அவனுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்றால் சத்யா திருடிய வீடியோவை முத்து போனிலிருந்து எடுத்து சோசியல் மீடியாவில் போஸ்ட் போடணும் என்று சொல்ல, அதை எப்படி செய்யப் போற என்று வித்யா கேட்க உன்னை வைத்து தான் அதை செய்யப்போகிறேன் என்று சொல்ல முதலில் வித்யா மறுக்கிறார். முத்துவிடம் மாட்டினால் அவ்வளவு தான் என்று வித்யா பயப்படுகிறார்.

ரோகிணி எனக்கு தெரியாது நீ தான் கண்டிப்பா எனக்காக அந்த வீடியோவை முத்து போனில் இருந்து எடுத்து தரணும் என்று ஒரு ஐடியா கொடுக்கிறார். அடுத்த கட்டத்தில் முத்து மனோஜ் சொன்ன கோவிலுக்கு வந்து அந்த சாமியார் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துவிற்கு தெரிந்த நபர் ஒருவர் வந்து என்ன நீ கோவிலுக்கு வந்திருக்க, நீ சாமி கும்பிட மாட்டியே என்று கேட்க, அதற்கு இல்லை இங்க ஒரு சாமியார் சுத்திட்டு இருக்காரு சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க,

siragadikka aasai serial vijay tv

இந்த சாமியாரா பாரு.. இவன் போலி சாமியாருன்னு இப்பதான் மக்கள் அவன அடிச்சு போலீஸ் ஸ்டேஷனில் பிடித்துக் கொடுத்தாங்க என்று ஒரு வீடியோவை காட்ட அதில் ரோகிணியின் பழைய பிஏ தினேஷ் இருப்பதை பார்த்து இவன் ஏற்கனவே நம்ம காரில் வந்தவன்தானே என்று முத்து யோசித்து கொண்டு இருக்கிறார். பிறகு முத்து காரில் சவாரிக்கு போய்க்கொண்டிருக்க வித்யா தான் முத்துவை சவாரிக்கு கூப்பிட்டு இருக்கிறார்.

காரில் எறிய வித்யா ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று சொல்ல முத்து அந்த இடத்திற்கு போய்க்கொண்டிருக்கிறார். அப்போது எப்படி இவன்கிட்ட போனை கேக்குறது கேட்டா தருவானா என்று கொஞ்ச நேரம் யோசித்து கொண்டு இருக்கிறார். பிறகு அந்த நேரத்தில் ஒரு போன் வருகிறது அது சரியாக கேட்காதது போல வித்யா பாசாங்கு செய்து கொண்டு அந்த போனை ஆப் செய்து விடுகிறார். பிறகு எனக்கு செல்லில் சார்ஜ் இல்ல உங்க போனை கொஞ்சம் தரீங்களா என்று முத்துவுடன் கேட்க முத்து சரி என்று கொடுக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அந்த ஃபோனில் வீடியோவை வித்யா தேடி சத்யா வீடியோவை பார்த்து விடுகிறார். அந்த நேரத்தில் மீனா போன் செய்ததும் இது என்னுடைய பொண்டாட்டி தான். அவளுக்குத்தான் இந்த ரிங்டோன் வச்சிருக்கேன். போனை குடு என்று வாங்கி மீனா விட போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா சமைத்ததை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார், கூடவே என்னோடு காரில் வருவது யாரு தெரியுமா? என்று முத்து கேட்க, உங்க கூட காரில் யார் வராங்கன்னு எனக்கு எப்ப நீங்க தெரியும் என்று மீனா சொல்ல, பார்லர் அம்மா பிரண்டு வித்யா தான் வராங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதோடு மனோஜ்க்கு லெட்டர் குடுத்து மிரட்டி கொண்டு இருந்தவன் யார் என்று நான் கண்டுபிடிச்சிட்டேன் என்று மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வித்யா சொன்ன இடம் வந்துவிட வித்யா இறங்கி விடுகிறார். உடனே ரோகிணிக்கு போன் போட்டு வீடியோ எடுக்க முடியல, மீனா போன் பண்ணி கெடுத்துட்டாங்க, ஆனா முத்துவும் மீனாவும் நல்ல காதலர்களாக இருக்காங்க அவங்க பேசிட்டு இருக்குறத பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதைக் கேட்டு ரோகிணி கோவப்படுகிறார். அப்போது நான் உனக்கு இன்னொரு அதிர்ச்சி சொல்கிறேன் என்று தினேஷை யார் என்று முத்து கண்டுபிடித்து விட்டான் என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அண்ணாமலை மீனா செய்த சமையலை பாராட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி எதுவும் சாப்பிடாமல் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து விஜயா என்ன ஆச்சு ஏன் இப்படி சாப்பாடு கொண்டு யோசிச்சிட்டு இருக்க என்று கேட்க ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார்.

அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்து மனோஜை லெட்டர் கொடுத்து மெரட்டிட்டு இருந்தது யாருன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அது யாருங்க என்று மீனா கேட்ட மனோஜ் கல்யாணம் கோவிலில் நடக்கும் போது ஒருத்தன் என் காரில் வந்தால் வரும்போது பொண்ணுங்களை பத்தி தப்பு தப்பா பேசிட்டு வந்தான்.

அவனை காரை விட்டு இறக்கி அடிச்சேன். அவன் ஓடி போகும் போது ஒரு காரில் அடிபட்டு கோமாவுக்கு போய்விட்டான். அதற்கு பிறகு ரெண்டு மாசத்துக்கு முன்பு ஒரு பாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக வந்தான். அப்போது அவனை பிடிச்சு நான் தான் போலீசில் கொடுத்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, ராஸ்கல் பொய் சொல்லி இருக்கான் என்று மனசுக்குள் தினேஷை தீட்டிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+