சிறகடிக்க ஆசை: ரோகிணியிடம் அம்மா பற்றி டாக்டர் சொன்ன வார்த்தை.. ஸ்ருதி போனில் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 3ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணியின் அம்மா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவருடைய உடல் நிலையை பற்றி டாக்டர் சொன்னதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் ஸ்ருதி தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டு இருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை முத்துவிடம் நீங்க எதுக்காக இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று கேட்க, அதற்கு முத்து அம்மா சந்தோஷப்படணும் என்பதற்காக தான் நான், ரவி, ஸ்ருதி, மீனா எல்லாரும் சண்டை போட்ட மாதிரி நடிச்சிட்டு இருந்தோம் என்று ரூமிற்குள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ஜாலியாக ஒருவருக்கு ஒருவர் வெளியே திட்டுவது போன்று கேட்கும்படி இவர்கள் சண்டை போட்டதை பற்றி முத்து சொல்கிறார்.

அதைக் கேட்டு அண்ணாமலை எல்லா வீட்டிலும் பிள்ளைங்க அம்மா அப்பாவுக்கு பயந்து ஒற்றுமையாக இருக்கிற மாதிரி நடிப்பாங்க. ஆனா இங்க நிஜத்தில் ஒற்றுமையாய் இருக்கிற பிள்ளைங்க அம்மாவுக்கு பயந்து சண்டை போட்ட மாதிரி நடிச்சிட்டு இருக்கிறீங்க. உங்க அம்மா என்னைக்கு தான் திருந்துவான்னு தெரியல என்று அண்ணாமலை அலுத்துக் கொள்கிறார்.
அதற்கு முத்து நாங்க இப்போ சண்டை போடாம இருக்கோம்ணு அம்மாவுக்கு தெரிஞ்சா அம்மா மீண்டும் ஸ்ருதியின் அம்மாவிடம் ஏதாவது பேசுவாங்க. அந்த அம்மா மீனாவை திட்ட எனக்கு கோபம் வந்துவிடும். அதனால் நாங்கள் சண்டை போடுற மாதிரி நடிச்சு அம்மாவை சந்தோஷமா வச்சுக்க போறோம் அவ்வளவுதான் என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்த கட்டத்தில் ரோகிணியின் அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது டாக்டர் வந்து ரோகிணியின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி அம்மாவின் உடல்நிலை குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்க, அதற்கு அவங்களோட பொண்ணு வரட்டும் அவங்க கிட்ட பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்.

அந்த நேரத்தில் ரோகிணி ஹாஸ்பிடலுக்கு வருகிறார். அவர்களிடம் டாக்டர் உங்க அம்மாவுக்கு சின்னதா ஹார்ட் அட்டாக் வந்து இருக்கிறது அவங்க மனசில் ஏதோ ஒரு கவலையே நினைச்சு வருந்திக்கிட்டே இருக்குறாங்க. ரொம்ப வீக்கா இருக்கிறாங்க. அவங்க கூடவே இருந்து நீங்க பாத்துக்கலாமே என்று சொல்ல, அதற்கு ரோகிணி நான் சென்னையில் வேலை பார்த்துட்டு இருக்கிறேன் என்று சொல்ல,
அப்போ சென்னைக்கு அவங்களையும் கூட்டிட்டு போயிருங்க. இவங்க பக்கத்தில் இப்ப ஒருத்தவங்க கண்டிப்பா இருக்கணும் என்று டாக்டர் சொல்ல, அதற்கு சரி என்று ரோகிணி சொல்லிவிட்டு அம்மாவிடம் ஏம்மா நீ எதையோ நினைச்சு பீல் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்றாங்க என்று கேட்க, அதற்கு ஆமா நீ விருப்பப்பட்டு ஏத்துக்கிட்ட வாழ்க்கை உனக்கு நிலைக்குமா இல்லையா என்று எனக்கு ஒரே கவலையா இருக்கு.
அதோடு எனக்கு பிறகு க்ரிஷை யார் பாத்துக்குவாங்கனு பயமா இருக்கு என்று சொல்ல, அதற்கு ரோகிணி அதன் நான் இருக்கேன் நான் பாத்துக்குறேன் உன்னையும் நல்லா பார்த்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதி தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு நம்ம சொந்தக்காரங்க ஒருத்தங்க சைக்கலாஜிஸ்ட் ஆக இருக்காங்களே அவங்க எங்க கிளினிக் வச்சிருக்காங்க என்று கேட்கிறார்.

அதற்கு ஸ்ருதியின் அம்மா சென்னையில்தான் என்று சொன்னதும் அப்போ அங்க போய் நீ முதலில் உன்னை செக் பண்ணு. நீ எதற்காக மீனாவை போய் திட்டுனா என்று கேட்ட, அதற்கு ஸ்ருதியின் அம்மா உன்னை பற்றி உங்க மாமியார்தான் என்னிடம் கோபப்பட்டாங்க. அதனால்தான் நான் மீனாவிடம் போய் பேசினேன் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி அவங்க திட்டுனா நீ மீனாவை திட்டுவியா? உனக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா என்று திட்டுகிறார்.இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications