சிறகடிக்க ஆசை: மனோஜிடம் வசமாக சிக்கிய ரோகிணி.. வித்யா உளறிய வார்த்தை.. விஜயாவை ஏத்திவிட்ட ஸ்ருதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணி தன்னுடைய அம்மாவை பார்த்துவிட்டு வித்யாவோடு இருப்பதாக மனோஜிடம் பொய் சொல்லி இருந்த நிலையில் வசமாக சிக்கி இருக்கிறார். அதே நேரத்தில் விஜயா வீட்டில் கோபத்தில் இருக்கிறார் அதை பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து ஒருவரை காரில் கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருக்கும் போது வரும் வழியில் சவாரிக்கு வந்த நபருக்கு ஒரு போன் வருகிறது. அதை அவர் பேசியதும் முத்துவிடம் இன்னும் எவ்வளவு நேரத்தில் போய்விடலாம் என்று கேட்க, அதற்கு முத்து பத்து நிமிஷத்துல போயிடலாம் என்று சொல்கிறார்.

அதோடு என்ன விஷயம் என்று முத்து விசாரித்ததும் தான் பொண்ணு பார்க்க போவதாக சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது, கல்யாணம் பண்ணலாமா? வேணாமா? என்று முத்துவிடம் அந்த நபர் கேட்டதும் முத்து பண்ணுங்க என்றும் சொல்கிறார், பிறகு வேண்டாம் என்றும் சொல்கிறார். இதனால் கூட வந்த நபர் குழப்பம் அடைகிறார். அதற்கு முத்து பொண்ணுங்க மகாலட்சுமி மாதிரியே இருப்பாங்க ஆனா பேய் மாதிரியும் பண்ணுவாங்க என்று சொல்கிறார்.
அந்த நபர் உங்களுடைய மனைவி எப்படி என்று கேட்க என்னுடைய மனைவி பாதி மகாலட்சுமி பாதி பேய் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் முத்துக்கு ஒரு போன் வந்ததும் அவர் வண்டியை திருப்ப எதிர்பக்கத்தில் வந்த ஸ்கூட்டி மீது மோதி விடுகிறார். முத்து காரில் இருந்து யார் என்று இறங்கி வந்து பார்க்க அது மீனா. அப்போது முத்து மற்றும் மீனா இருவரும் நடு ரோட்டில் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
அந்த நேரத்தில் போலீஸ் வந்து ஏன்டா அவங்க மேல இடிச்ச என்று முத்துவை கேட்க அதற்கு மீனம் அவரை வாடா போடான்னு சொல்லுறீங்க நாங்க வந்து உங்ககிட்ட உதவி கேட்டோமா? நாங்களே பாத்துக்கிறோம் என்று மீனா போலீசை சமாளித்து அனுப்பி விடுகிறார்கள். பிறகு மீனாவிடம் அடிபட்டுச்சா மீனா? என்று முத்து கேட்க, அதற்கு இப்ப வந்து கேளுங்க என்று மீனா திட்டுகிறார்.

அந்த நேரத்தில் காரில் இருந்த நபர் சார் இதுதான் உங்க வைஃபா நீங்க சொன்ன மாதிரி பேய் ஆட்டம் தான் ஆடுறாங்க என்று சொன்னதும் முத்து ஏன் பிரதர் இப்ப போட்டு கொடுத்துட்டீங்களே என்று சொல்கிறார். அதை கேட்டு மீனா கோபப்படுகிறார். மறுபக்கத்தில் ரோகிணி அம்மா ஹாஸ்பிடலில் இருக்க அவங்க கூட இருக்க ஒரு ஆளை ரோகிணி ரெடி பண்ணி விடுகிறார்.
அந்த நேரத்தில் மனோஜ் போன் பண்ணி எங்க இருக்க என்று விசாரிக்க, அதற்கு ரோகிணி நான் வித்யாவுடன் வெளியே வந்திருக்கிறேன் என்று சொல்ல அந்த நேரத்தில் வித்தியா வந்திருக்கிறார். மனோஜ் கூட தான் இருக்கியா? என்று மறுபடியும் கேட்க, ஆமாம் என்று சொல்லிவிட்டு ரோகிணி போனை வைத்ததும் வித்யாவிற்க்கு போன் போட்டு சொல்ல, வித்யா நான் ஷோரூம்ல தான் இருக்கேன் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கோபமாக மனோஜ் வித்யாவிடம் வந்து ரோகிணி உன்கூட தான் இருக்கிறேன் என்று சொன்னால் என்று கேட்க, அதற்கு வித்தியா என்கூட இருக்கிறேன் என்று சொன்னாலும் காலையில் என்னதான் பார்க்க வந்தாள்.... என்று இழுத்துக் கொண்டு இருக்க அதற்கு மனோஜ் சரி நீ இங்கே வந்துட்ட ஆனா அவ இன்னும் வரலையே எங்க போனா என்று கேட்க அதற்கு வித்யா எனக்கு கொஞ்சம் அவசரமா வேலை இருக்கு நான் போயிட்டு வரேன் என்று கிளம்பி ஓடிவிடுகிறார்.
மனோஜ் இதையெல்லாம் பார்த்து சந்தேகத்தோடு நிற்கிறார். மறுபக்கத்தில் மீனா வீட்டில் இருக்கும் போது ஒரு நபர் வந்து முதலாளியம்மா என்று கூப்பிட, வீட்டுக்குள் இருந்த விஜயா வந்து நான்தான் இந்த வீட்டில் முதலாளியம்மா நீங்க யார தேடுறீங்க என்று கேட்க, அதற்கு அந்த நபர் நாங்க மீனா முதலாளி அம்மாவை கூப்பிடுகிறேன் என்று சொல்ல விஜயா நீ இப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரிகிறியா என்று மீனாவை திட்டுகிறார்.

அதற்கு மீனா நீங்க யாரு என்று வந்த அந்த நபரிடம் விசாரிக்க அவர் கட்டிலுக்கு கொசுவலை அடிக்க வந்ததாக சொல்கிறார். முதலில் மீனா வேண்டாம் என்றாலும் பிறகு முத்து தான் அனுப்பி வைத்தார் என்று தெரிந்து சரி என்று விட்டு விடுகிறார். ஆனால் விஜயா கோபத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி வீட்டிற்கு வந்து ஏற்கனவே இந்த வீட்டில் இந்த இடத்தில் கட்டில் இருக்கிறது தொல்லையாக இருக்கு. இதுல இவங்க இந்த நெட் வேற போட்டா அங்க தூசி எல்லாம் அதில் போய் அடஞ்சிடும்.. வீட்டுக்கு ஒரு ஆள் இருக்க வேண்டாமா? என்று விஜயாவை ஏத்தி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications