சிறகடிக்க ஆசை: ரோகிணியை நம்ப மறுத்த மனோஜ்.. கிரிஷ் பற்றி அதிர்ச்சி கொடுத்த மீனா.. விஜயா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில், முதல் முறையாக ரோகிணி போடும் நாடகத்தை மனோஜ் நம்ப மறுக்கிறார். அதுபோல முத்து மற்றும் மீனா மொத்த குடும்பத்தின் முன்பு மீண்டும் க்ரிஷ் பற்றி பேச ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கொசுவலை அடிக்க வந்த நபரிடம் முத்து வீட்டு வாசலில் நின்றபடி மீனா சமாதானம் ஆகிவிட்டாளா? என்று கேட்க, அதற்கு அந்த நபர் இல்லை மேலும் கோபம் ஆனது போல இருக்கிறது என்று சொல்ல சரி நானே சமாதானம் செய்து கொள்கிறேன் என்று அந்த நபரை அனுப்பி வைத்துவிட்டு ஒரு கம்பில் வெள்ளை கொடியை கட்டிக்கொண்டு வீட்டிற்குள் வருகிறார்.

அந்த நேரத்தில் கையில் விளக்குமாறை வைத்து இருக்கும் மீனா நான் உங்களுக்கு பேய் மாதிரி இருக்கிறேனா? என்று சொல்ல அதற்கு முத்து இப்படி ஏதாவது சொன்னால்தான் வரும் கஸ்டமர்ஸ் சந்தோஷப்படுவாங்க. நம்மை மீண்டும் சவாரிக்கு கூப்பிடுவாங்க என்று சமாளிக்க பிறகு மீனா சமாதானமாகிவிடுவார். பிறகு தான் வாங்கிட்டு வந்த அல்வாவை கட்டிலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.( அல்வாவுக்கு ஃபேமஸ் இதுவரைக்கும் சத்யராஜ் ஆக இருந்தாலும் இந்த சீரியலில் இப்போது மீனாவை சமாதானப்படுத்துவதற்காக ஒவ்வொரு முறையும் அல்வா வாங்கி கொடுத்து முத்துவும் அல்வாவுக்கு பேமஸ் ஆக மாறிக்கொண்டிருக்கிறார்).
அதைத் தொடர்ந்து ரோகிணி வீட்டிற்குள் பயத்தோடு வர கோபமாக மனோஜ் காத்திருக்கிறார். எங்க போயிட்டு வர என்று மனோஜ் கத்த... நான் உனக்கு கருங்காலி மாலை வாங்குவதற்காக போனேன் என்று ரோகிணி சொல்ல அதை மனோஜ் நம்ப மறுக்கிறார். அதற்கு அழுது கொண்டே நீயே அந்த சாமியாரிடம் பேசு என்று ரோகிணி ஃபோன் போட மனோஜ் அடுத்தவங்க சொல்லி தான் உன்னை நம்பணும்னு இல்லை என்று பிறகு சமாதானம் ஆகிவிடுகிறார்.

அதைத் தொடர்ந்து ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு உன்னால்தான் இவ்வளவு பிரச்சனை இப்போ எப்படியோ சமாளிச்சிருக்கேன் என்று திட்டுகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் எல்லோரும் சாப்பிட இருக்கும்போது ரோகிணி வாங்கிட்டு வந்த கருங்காலி மாலையை வைத்து பூஜை செய்து அதை மனோஜ் போட்டுக்கொள்ள வழக்கம் போல முத்து அதையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாட்டி நான்கு வேர்கடலை மூட்டை அனுப்பி வைத்திருக்க அதற்கு விஜயா உங்க அம்மா ஏன் இப்படி செய்கிறாங்க... இந்த கடலையை இவ்வளவு அனுப்புறதுக்கு பதிலா இதை விற்று காசு அனுப்பி இருக்கலாம்.. இல்லன்னா நாம வேணும்னா இதை கடையில் கொடுத்து விற்றிடலாமா என்று கேட்க அதற்கு அண்ணாமலை திட்டுகிறார்.
அதோடு அம்மா எல்லாருக்கும் கொடுக்கிறதுக்காக அனுப்பி இருக்காங்க என்று சொல்ல எல்லோரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கடலை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா எனக்கும் கொஞ்சம் கடலை வேண்டும் என்று சொல்ல அதற்கு விஜயா உனக்கு யாருக்கு கொடுக்கணும் என்று கேட்க அதற்கு மீனா கிரிஷ் வீட்டிற்கு கொஞ்சம் கொடுக்கணும். கிருஷ்க்கு கடலை ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு முத்து ஆமா கிரிஷை பார்த்து ரொம்ப நாள் ஆகிட்டு. போய் பாத்துட்டு வரணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications