சிறகடிக்க ஆசை: ஸ்ருதியால் பிரச்சனை வரும்னு எதிர்பார்த்த ரோகிணி.. ஆனால் மாடியில் இப்படி ஒரு ஆட்டமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கேரக்டரில் நடிகை பிரீத்தா நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியலில் ரூம் பிரச்சனை வந்திருக்கிறது. வீட்டில் மூன்று ரூம்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் உடல் நிலை சரியில்லாத அண்ணாமலையும் அவருடைய மனைவி விஜயாவும் இருக்கின்றனர். மீதமுள்ள இரண்டு ரூமில் ரோகிணி மற்றும் மனோஜ் ஒரு ரூமிலும் ஸ்ருதி மற்றும் ரவி மற்றொரு ரூமிலும் இருந்து கொள்ள முத்து மற்றும் மீனா மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த பாட்டி அண்ணாமலை இருக்கும் ரூம் போக மீதமுள்ள இரண்டு ரூமில் வாரம் ஒருவர் தூங்கிக் கொள்ள வேண்டும் என்று புது ரூல்ஸ் போட்டு இருக்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகிணி ஹாலில் தூங்கி இருக்கின்றனர். இதனால் மனோஜ் இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று விஜயா ஒரு பக்கம் பிளான் போட்டுக் கொண்டிருக்க ரோகிணி இன்னொரு பக்கத்தில் வேறு விதமாக பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது இந்த ஒரு வாரம் நாம வெளியே படுத்து விட்டால் அடுத்த வாரம் ஸ்ருதி மற்றும் ரவி வெளியே படுக்கும்போது ஸ்ருதி கண்டிப்பாக பிரச்சனை பண்ணுவார்... ஏனென்றால் ஸ்ருதி பணக்கார வீட்டில் வசதியாக வாழ்ந்த பொண்ணு. அவளால் ஏசி இல்லாமல் வெளியே தூங்க முடியாது.

அவள் பிரச்சனை பண்ணி வீட்டில் ரூம் பிரச்சனைக்கு முடிவு வரும் என்று ரோகிணி முடிவோடு இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதியாக நடிக்கும் பிரீத்தா, அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற "அச்சச்சோ அச்சச்சோ" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் ஸ்ருதியால் பிரச்சனை வரும் என்று எதிர்பார்ப்பு இருக்கும் ரோகிணிக்கு இந்த முறையும் பல்ப்புதான் கிடைக்குமா?
ஸ்ருதி மாடியில் என்ஜாய் பண்ணி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். இதனால் இதுபோன்று ஜாலியான எபிசோடுகள் தான் இனி வரப்போகிறதா? என்று கேள்விகள் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஸ்ருதி தனக்கு ரூம் இருக்கும்போது மாடியில் டென்ட் போட்டு ரவியுடன் தூங்கி இருந்தார். இந்த நிலையில் இப்போது அதேபோல ஜாலியாக மீண்டும் மாடியில் டெண்டில் செட்டில் ஆக போகிறாரா? அல்லது தனக்கு தனியாக வேண்டும் என்று பிரச்சனை செய்யப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சும்மாவே இந்த ஸ்ருதி கேரக்டரை மட்டும் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருக்கிறது. ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு சண்டை போடுகிறார். சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை இவ்வளவுதானா என்று ஜாலியாக எடுத்துக்கொண்டு போய்விடுகிறார். இதனால் அடுத்த வாரம் பூகம்பம் வெடிக்குமா? அல்லது ரோகிணிக்கு பல்பு கிடைக்குமா? என்று அடுத்த ப்ரோமோவில் தெரியவரும்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications