விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியல் (Siragadikka Aasai serial today episode) மீண்டும் பழைய வேகத்தை பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. குடும்ப சண்டை, காமெடி, பழிவாங்கும் திட்டம், எதிர்பாராத ட்விஸ்ட் என இன்றைய எபிசோடு ரசிகர்களுக்கு முழு என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமைந்தது. குறிப்பாக விஜயா சந்தித்த அவமானம், மனோஜின் காமெடி கலந்த ஏமாற்றம், ஸ்ருதியை குறிவைத்த நீத்து-இந்த மூன்று சம்பவங்களும் எபிசோடை சூடேற்றின.

முத்துவால் மீட்கப்பட்ட பெண்
முந்தைய எபிசோடில் முத்துவின் காரில் இருந்து தப்பித்து ஓடிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எங்கே போனார் என்ற சஸ்பென்ஸுக்கு இன்றைய எபிசோடில் பதில் கிடைத்தது.
அந்த பெண் நேராக மனோஜின் ஷோரூமுக்கே சென்று விட்டார். அங்கே பெரிய கஸ்டமர் வந்துவிட்டார் என சந்தோஷப்பட்ட மனோஜ், அவருக்கு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுத்து செம்ம கவனிப்பு கொடுத்தார்.
அதற்கும் மேலாக, "4 பிரிட்ஜ்... 10 டிவி வேண்டும்" என்று அவர் ஆர்டர் போட்டதும் மனோஜ் சந்தோஷத்தில் மிதந்தார். ஆனால் பில் போட போன அந்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் ஜூஸை குடித்து விட்டு எஸ்கேப்! இறுதியில் முத்து தேடி தேடி அவரைக் கண்டுபிடித்து, பாதுகாப்பாக அவரது அம்மாவிடம் ஒப்படைத்தது கொஞ்சம் நிம்மதி கொடுத்தது.
மனோஜுக்கு மீண்டும் ஆப்பு
ஏற்கனவே பலமுறை ஏமாந்த மனோஜ், இப்போதும் அதே பாணியில் சிக்கிக்கொண்டார். பெரிய டீல் கிடைத்துவிட்டது என நினைத்த நேரத்தில், ஒரே ஜூஸ் செலவோடு கஸ்டமர் காணாமல் போனது ரசிகர்களை சிரிக்க வைத்தது.

ரோகிணியின் புதிய கண்டிஷன்
இதற்கிடையில் கடைக்கு வந்த ரோகிணி, மனோஜிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். "உங்க அம்மா என்னை அவமானப்படுத்தியது இன்னும் மறக்க முடியல. நீ என்ன பண்ணுவியோ தெரியாது... உங்க அம்மாவை என்னிடம் மன்னிப்பு கேட்க வைக்கணும்" என்று கண்டிஷன் போட்டார்.
மனோஜ் வழக்கம்போல் சமாளிக்க முயன்றாலும், ரோகிணி இந்த முறை குளிரவில்லை. இது அடுத்த நாட்களில் வீட்டுக்குள் இன்னொரு பெரிய மோதலை கிளப்பும் போல தெரிகிறது.

விஜயாவுக்கு காத்திருந்த பெரிய அவமானம்
இன்றைய எபிசோடின் ஹைலைட் இதுதான். தான் வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் இன்டர்வியூக்கு சென்ற விஜயா, தன்னுடைய அனுபவத்துக்கு பெரிய சம்பளம் கிடைக்கும் என்று கனவு கண்டார். ஆனால் உள்ளே சென்றதும் காத்திருந்த ட்விஸ்ட் அவரையே அதிர்ச்சியடைய வைத்தது.
இண்டர்வியூ எடுப்பவர் யார் தெரியுமா?
இன்டர்வியூ எடுப்பவர் மீனா என்பதை பார்த்த விஜயாவின் முகபாவனை ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதிலும், "இங்க சம்பளம் கிடையாது அத்தை... டீயும் பிஸ்கட்டும் தான் தருவோம்" என்று மீனா சொன்னதும் விஜயாவுக்கு செம்ம ஆப்பு. இதுவரை மீனாவை கீழே பார்த்த விஜயாவுக்கே இப்போது இப்படியொரு நிலைமை வந்திருப்பது கதைக்கு நல்ல திருப்பமாக அமைந்தது.

ஸ்ருதியை குறிவைத்த நீத்து
இறுதியில் எபிசோட்டை சூடேற்றிய சம்பவம் நீத்து களமிறங்கியது. முகத்தை மறைத்து ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்குள் வந்த நீத்து, வெளியில் அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் பழிவாங்கும் திட்டத்தோடு இருந்தார். "இந்த ஹோட்டலால தான் ரவி உன் பக்கம் இருக்கான்... இதை மூட வைக்கிறேன்... ரவியையும் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்று மனதிற்குள் பேசிக்கொண்ட காட்சி, அடுத்த எபிசோடுகளுக்கான பெரிய கிளூவாக மாறியது.
அந்த நேரத்தில் ரவி நேராக ஸ்ருதியிடம் சென்று பாசமாக உணவு ஊட்டி விடுவது, அதை பார்த்து நீத்து கொதிப்பது-செம்ம சீரியல் மோமென்ட்.
அடுத்து என்ன?
விஜயா இந்த அவமானத்தை அமைதியாக ஏற்றுக்கொள்வாரா? ரோகிணி போட்ட கண்டிஷன் வீட்டை கலக்குமா? நீத்து உண்மையிலேயே ஸ்ருதியின் பிசினஸை டார்கெட் செய்யப் போகிறாரா?.. இந்த கேள்விகளோடு இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடு முடிந்தது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்













Click it and Unblock the Notifications