சிறகடிக்க ஆசை வெற்றி - வைஷ்ணவி ஜோடி சொன்ன அந்த ‘குட் நியூஸ்’! ரசிகர்கள் வாழ்த்து மழையில் புது ஆரம்பம்
சென்னை: சின்னத்திரை உலகில் தற்போது 'ஹாட் டாபிக்' ஜோடி என்றால் அது வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி தான். 'சிறகடிக்க ஆசை' சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான முத்து என்கிற வெற்றி வசந்தும், அவரது காதல் மனைவி வைஷ்ணவியும் இணைந்து ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் முதலில் ஒரு விஷயத்தை நினைத்து ஆச்சரியப்பட்டாலும், உண்மை விவரம் தெரிந்ததும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

போராட்டங்களுக்குக் கிடைத்த 'சிறகடிக்க ஆசை' வெற்றி!
எந்தவொரு கலைஞனுக்கும் சினிமா அல்லது சின்னத்திரை வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. வெற்றி வசந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரம்பத்தில் சிறு சிறு ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் எனத் தனது திறமையை நிரூபிக்கப் போராடியவர் இவர். இவரது கடின உழைப்பிற்குப் பரிசாகக் கிடைத்ததுதான் விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல். இன்று 'முத்து' என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.
சின்னத்திரை காதல் ஜோடிகளின் சங்கமம்:
வெற்றி வசந்தும், 'ராஜா ராணி', 'பொன்னி' உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமான வைஷ்ணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்ட, சமீபத்தில் தான் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ரீல் ஜோடிகளை விட ரியல் ஜோடியாக இவர்களுக்குச் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
அது 'அந்த' குட் நியூஸ் இல்ல.. இது 'வேற' குட் நியூஸ்!
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இந்த ஜோடி ஒரு 'குட் நியூஸ்' சொல்லப்போவதாக அறிவித்ததும், ரசிகர்கள் பலரும் 'வைஷ்ணவி கர்ப்பமாக இருக்கிறாரா?' என்று தான் முதலில் யோசித்தனர். ஆனால், விஷயம் அதுவல்ல. வைஷ்ணவி தனது புதிய தொழில் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
ஆம், வைஷ்ணவி 'She e o' என்ற பெயரில் புதிய காஸ்டியூம் டிசைன் (Costume Design) ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்த தகவலைத் தனது கணவர் வெற்றி வசந்துடன் இணைந்து அவர் வெளியிட்டுள்ளார்.
குவியும் வாழ்த்துகள்!
நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற வைஷ்ணவியின் கனவிற்கு வெற்றி வசந்த் முழு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்த புதிய தொழில் வெற்றியடைய சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications