சிறகடிக்க ஆசை சீரியல் விஜயாவின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இந்த பிரபலம் தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடிகை அனிலா ஸ்ரீ குமரன் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அனிலாஸ்ரீ சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன்பே சின்னதம்பி, பாவம் கணேசன் என்ற ஒரு சில சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தவர் தான். இந்த நிலையில்தான் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலிலும் கதாநாயகனின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்துக் கொண்டிருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு ஜோடி சீசன் 10 நிகழ்ச்சிகளும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை காட்டி பலரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை நடிகை அனிலா ஸ்ரீ பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. அதிலும் இப்போது இந்த சீரியலில் காமெடி கலந்த வில்லத்தனத்தோடு தன்னுடைய நடிப்பை வெளிகாட்டி ரசிகர்கள் பலரையும் மிரட்டிக் கொண்டிருக்கும் நடிகை அனிலா ஸ்ரீ தான் இந்த சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவருடைய சொந்த ஊரு கேரளா தானாம். இவர் கேரளாவில் இருந்து தமிழில் முதலில் நடிக்க ஆரம்பித்தபோது அங்கு உன்னை ஏத்துப்பாங்களா? உன்னால் அங்கு நிலைச்சு நிற்க முடியுமானு இவரோட தோழிகளே, இவரிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். ஆனால் இப்போது தமிழக மக்களின் மனதில் மாமியாராகவும், அம்மாவாகவும் அனிலாஸ்ரீ நிலைத்து நிற்கிறார். அதிலும் முதன் முதலாக அனிலா ஸ்ரீக்கு சின்னதம்பி சீரியலில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து பாவம் கணேசன் என்ற சீரியலிலும் கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் பறையை வைத்து ஆடிய டான்ஸ் ரசிகர்களின் மனதில் அதிகமாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

தனக்கு பிடித்த மனோஜ் காக வீட்டில் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து கொண்டிருப்பதும் கடைசியில் முத்து விடம் அடிக்கடி மாட்டி தன்னுடைய திருட்டு முழியை காட்டி பலரையும் சிரிக்கவும் வைத்திருக்கிறது. இவர் எப்போது வீட்டில் மாட்டுவார் என்பதே ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அதேபோல ஏற்கனவே வீட்டை அடமானம் வைத்து மீனா விடம் மாட்டி இருந்தார்.
இப்போது மனோஜ் வேலைக்கு போகாமல் வேலைக்கு போய் கொண்டு இருப்பதாக வீட்டில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது அந்த ரகசியமும் உடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் நடிகை அனிலா ஸ்ரீ தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அது இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. அதுபோல ஜோடி சீசன் 10 நிகழ்ச்சியில் அனிலாஸ்ரீ பறையை வைத்து டான்ஸ் ஆடும் போது அவருக்கு அப்பாவாக அந்த டான்ஸில் நடித்தது அனிலா ஸ்ரீயின் கணவர் ஸ்ரீ குமார் தானாம். அதுபோல அனிதா ஸ்ரீக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு மகனும் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications