சிறகடிக்க ஆசை: முத்து சின்ன வயசுல ஜெயிலுக்கு போன காரணம் இதுதான்.. வெற்றி வசந்த் உடைத்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மீது திருட்டு பழியை போட்டதற்காக முத்து ஸ்ருதியின் அப்பாவை அடித்திருக்கிறார். அதனால் ஸ்ருதி வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதனால் விஜயா கோபமாக முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கொண்டிருக்கிறார்.

இப்படியாக கதை போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் முத்து சின்ன வயதில் எதற்காக ஜெயிலுக்கு போனார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. அது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த் பேசி இருக்கிறார்.

Siragadikka aasai serial why Muthu went to jail at such a young age

அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனால் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் இன்னும் சில ரகசியங்கள் உடைபடாமல் இருக்கிறது. அதில் முத்து சின்ன வயதில் எதற்காக ஜெயிலுக்கு போனார் என்று கேள்வி சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் அதிகமாக கேட்கப்பட்டது.

அதுவும் பொங்கல் ஃபங்ஷனை கிராமத்தில் கொண்டாட போயிருந்த நேரத்தில் முத்து தன்னுடைய அப்பாவிடம்," இதே பொங்கல் நாளில் தானே அப்பா நீயும் அம்மாவும் என்னை கொண்டு வந்து இங்கே விட்டுட்டு போனீங்க. நான் செய்யாத தப்புக்காக பழியை சுமந்தேன்... அப்போ என்ன நடந்துச்சுனா.." என்று உண்மையை சொல்ல வர அதற்கு அண்ணாமலை "இப்போ எல்லோரும் குடும்பமா சந்தோஷமா இருக்கோம். இந்த நேரத்தில் நீ எதையும் சொல்லாதே" என்று தடுத்திருப்பார்.

அந்த நேரத்தில் முத்து மனோஜை பார்த்து முறைத்துக் கொண்டு இருப்பார். ஆனால் விஜயா இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நம்பாத மாதிரியே ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். இப்படியாக அந்த நேரத்தில் காட்சிகள் இருந்ததும் முத்து அப்படி என்ன தப்பு பண்ணிட்டு யாருக்காக ஜெயிலுக்கு போயிருந்தார் என்று தான் எல்லோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் தனக்கு எப்படி இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி பேசி இருக்கிறார். அதில், தனக்கு தெரிந்த ஒரு நபர் போன் போட்டு நாளைக்கு ஆடிஷன் இருக்கிறது நீ வந்துரு என்று சொன்னார். அதற்கு நான் சரி, என்ன கேரக்டர் என்று சொல்லுங்க நான் அதற்கு தகுந்த மாதிரி டிரஸ் எடுத்துட்டு வரேன் என்று சொன்னேன். அதற்கு அவர் விஜய் டிவியில் பிரேம் டைமில் ஒளிபரப்பாக போகும் சீரியல், அதை குமரன் தான் இயக்கப் போகிறார். அதில் நீ நடிக்க விருப்பம் இருக்கா? இல்லையா? என்று கேட்க,

அதற்கு நான் காலையில் எத்தனை மணிக்கு அங்கு இருக்கணும் என்று கேட்டேன். அவர் எட்டரைக்கு என்று சொன்னார். நான் எட்டு இருபதுக்கே வந்து விடுவேன் என்று சொன்னேன். ஆனால் அடுத்த நாள் காலையில் எட்டு மணிக்கு அங்கே போய் விட்டேன். பிறகு ஆடிசன் ரூமுக்குள் போனதும் எனக்கு பயம் வந்துவிட்டது. காரணம் அங்கிருந்தவர்கள் எல்லோருமே ஜம்முன்னு ஹைட் வெயிட் எல்லாம் இருந்தார்கள். அதை பார்த்ததும் கதாநாயகன் என்று சொல்றாங்க அப்போ இவங்களில் ஒருவரை தான் தேர்ந்தெடுப்பாங்க.

நமக்கு எல்லாம் எப்படியும் வாய்ப்பு கிடைக்காது என்று தான் நினைத்தேன். ஆனால் கடைசியில் நான் தேர்வாகிவிட்டேன் அதற்குப் பிறகு என்னிடம் எந்த கதையும் சொல்லவில்லை. இரண்டு நாள் சூட்டிங் போய் விட்டது. அவர் சொன்னதை நானும் அப்படியே நடிப்பேன். ஆனாலும் எனக்குள்ள ஒரு குழப்பம் இருந்தது. இது என்னனா, இந்த சீரியலில் என்ன கதைன்னு தெரியல, கதாநாயகன் என்று சொல்றாங்க ஆனா கதாநாயகன் குடும்பம் எப்படி என்ன என்று எதுவும் தெரியவில்லையே என்று மனதிற்குள்ளே உறுத்தி கொண்டு இருந்தது.

அதை நான் இயக்குனரிடம் கேட்டேன். பிறகு அவர் என்னிடம் சொன்னது, நீ தான் இந்த சீரியலின் கதாநாயகன். இந்த சீரியலில் கதாநாயகன் கார் ஓட்டுற டிரைவர். அவர் சின்ன வயசில் ஒரு "ஆக்சிடெண்ட்" நடந்ததால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போய் விடுகிறார். அதற்கு பிறகு அவருடைய அம்மா பாசம் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அப்பா ரொம்பவே பாசமாக இருக்கிறார். ஒரு அண்ணன் ஒரு தம்பி இருக்கிறாங்க என்று கதையை சொன்னார் என்று அந்த பேட்டியில் வெற்றி வசந்த் பேசி இருக்கிறார்.

முத்துவை விஜயாவும் அண்ணாமலையும் பாட்டி வீட்டில் கிராமத்தில் கொண்டு விட்ட பிறகு விடுமுறைக்கு மனோஜ் அங்கே வந்து இருக்கும்போது மனோஜ் யாரையோ குளத்துக்குள் தள்ளிவிடுவார். ஆனால் அந்த பழியை வழக்கம்போல முத்து மீது போட்டுவிட முத்து அந்த பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு போய் இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுதான் இனி வரும் கதையா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரியவரும்.

ஆனால் நடப்பதை பார்த்தால் இப்படியும் இருக்கலாம் என்றுதான் தோணுகிறது. ஏற்கனவே இந்த முறையும் ரோகிணி அப்பா விஷயத்தில் மாட்டாமல் தப்பித்து இருக்கிறார். அதனால் ரோகிணி இனி விஜயாவிடம் மாட்டும் கதை பெரிய அளவில் ஹைப் ஏற்படுத்தும். அதுபோல முத்து ஜெயிலுக்கு போன ரகசியமும் வெளியே தெரிகிற எபிசோடு பெரிய அளவில் ஹை வோல்டேஜாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+