Sirai 2nd day Box Office: சிறை படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடி! விக்ரம் பிரபுவுக்கு குவியும் பாராட்டு
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான சிறை திரைப்படம் நல்ல பாராட்டு பெற்று வருகிறது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் இயக்குநராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.
முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபீஸில் சிறை படம் நல்ல வசூலை பதிவு செய்து வருகிறது. விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வெளியீட்டுக்குப் பிறகு பலத்தரப்பில் இருந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

கடந்த டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சிறை', முதல் நாளிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ரிலீசுக்கு முன்பாகவே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், வெளியீட்டுக்குப் பின் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் வசூலிலும் நேரடியாக பிரதிபலித்துள்ளன.
சிறை படத்தின் வசூல்
திரையுலக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, 'சிறை' திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.1 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளான டிசம்பர் 26ஆம் தேதியும் இதே அளவிலான வசூலை படம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இரண்டு நாட்களில் ரூ.2 கோடி வசூலை 'சிறை' எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
சிறிய முதல் நடுத்தர பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு, இந்த வசூல் திரையுலகில் கவனம் பெறும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக குடும்ப ரசிகர்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருவதால், வரும் நாட்களிலும் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மை கதை
ஆயுதப்படை போலீசாரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'சிறை', காவல்துறை சார்ந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. முன்பு 'டாணாக்காரன்' படத்தின் மூலம் போலீஸ் பயிற்சி மையத்தின் கசப்பான உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தமிழ் எழுதிய கதையை, இந்த முறை இயக்குநர் சுரேஷ் திரைக்கதையாக வடிவமைத்துள்ளார்.
படத்தில், ஆயுதப்படையில் ஏட்டாக பணிபுரியும் விக்ரம் பிரபு, ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ள அப்துல் ரவூப் என்ற கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் சூழலில் நடைபெறும் சம்பவங்களே கதையின் மையமாக அமைந்துள்ளன. அந்தப் பயணத்தின் போது நிகழும் திருப்பங்களும், சமூக ரீதியான கேள்விகளும் படத்தின் முக்கிய அம்சங்களாக பேசப்படுகின்றன.
பாராட்டுகளை குவிக்கும் விக்ரம் பிரபு
படத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள விக்ரம் பிரபுவின் நடிப்பு தனிச்சிறப்பாக பேசப்படுகிறது. 'டாணாக்காரன்', 'இறுகப்பற்று', 'லவ் மேரேஜ்' போன்ற படங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு தரமான கதையை தேர்வு செய்துள்ளதற்காக அவருக்கு ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
உயரும் எதிர்பார்ப்பு
தொடர்ந்து கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள், வாய் வழி பிரச்சாரம் மற்றும் சமூக வலைதளங்களில் உருவாகும் நல்ல கருத்துகள் காரணமாக, 'சிறை' படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஆண்டு இறுதியில் வெளியான ஒரு தரமான சமூக சிந்தனையுடன் கூடிய திரைப்படமாக 'சிறை' தற்போது ரசிகர்களிடையே வலுவான இடத்தை பிடித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications