விஜயின் சர்க்கார் திரைப்படத்தில் சிறகடிக்க ஆசை “முத்து”வா? இத்தனை வேலை செஞ்சிருக்காரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வெற்றி வசந்த் தான் சர்க்கார் திரைப்படத்தில் செய்த வேலை குறித்து பேசிய பேட்டி தான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிகமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.
பொதுவாக ஒரு சீரியலின் கதை மக்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியதும் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த மாதிரி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் சின்னத்திரை விஜய் சேதுபதி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். அதிலும் இவருடைய நிஜப்பெயர் வெற்றி வசந்த் என்பதை விடவும் முத்து என்ற பெயரில் தான் இவர் பலருக்கும் பரிச்சயமாக இருக்கிறார். வெற்றி வசந்தின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அதிலும் முத்து கேரக்டர் பலருடைய சாயலாக இருப்பதால் ஆண்கள் கூட இந்த கேரக்டரை விரும்ப தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வெற்றி வசந்த் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதற்கு முன்பு நான் நிறைய வேலைகள் செய்திருக்கிறேன். அதன்படி அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்திருக்கிறேன். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், youtube டைரக்ஷன் செட் அசிஸ்டன்ட் ஆகவும் இருந்திருக்கிறேன்.
அதுபோல சர்க்கார் திரைப்படத்தில் கூட எஸ்கார்ட் டீம்ல ஒரு 15 நாள் ஒர்க் பண்ணி இருக்கிறேன். சிவா அண்ணா படத்துல செக்யூரிட்டியா இருந்திருக்கிறேன். இப்படி பல வேலைகளை செய்து இருக்கிறேன். நான் நடிகனாக வேண்டும் என்று முயற்சிகள் செய்து கொண்டிருந்தபோது எனக்கு அண்ணன் ஒருவர் மூலமாகத்தான் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆடிஷனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அதிலும் இந்த சீரியலில் குமரன் இயக்கும் சீரியல் கதாநாயகனாக ஆடிஷன் நடக்கிறது என்றதும் அப்போ நமக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஆடிஷனில் கலந்து கொண்டதும் நீங்கள் எப்போ இருந்து நடிக்க வரீங்க என்று குமரன் சார் கேட்டதும் எனக்கு அந்த நிமிடம் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நான் இப்ப இருந்தே வரேன் சார் என்று உடனே சொல்லி விட்டேன்.
இந்த சீரியலில் நடிப்பவர்களும் சரி சீரியல் டீமும் சரி எல்லோருமே ஒரு குடும்பம் போல தான் இருக்கிறார்கள். அதனாலேயே எனக்கு இந்த சீரியலில் நடிக்கிறோம் என்பது தோன்றவில்லை என்று அந்த பேட்டியில் வெற்றி வசந்த் பேசியிருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலில் கவரிங் நகை விஷயத்தில் மனோஜ் மற்றும் விஜயா மாட்டுவார்களா? அல்லது அந்த பழி முத்து மற்றும் மீனா மீது விழப்போகிறதா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதுபோல வீட்டில் இருந்து வெளியே போன முத்து வீட்டிற்குள் வராததால் மீனா முத்துவை நினைத்து பயந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தில் கே ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி இருக்கும் நிலையில் முத்து தான் இவர்கள் இருவரையும் பாட்டியின் பிறந்தநாள் பங்க்ஷன்க்கு கூட்டிட்டு வரப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்போடும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications