மதுரை முத்து பற்றிய ரகசியத்தை உடைத்த “சிறகடிக்க ஆசை” செல்வம்.. யாருக்கும் தெரியாதது அம்பலமானது!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிகர் பழனியப்பன் நடித்து வரும் நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் டிவி பிரபலமான மதுரை முத்து தன் மூலமாக நடிகர் பாபா லக்ஷ்மணனுக்கு செய்த உதவி குறித்து பழனியப்பன் பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலர் தங்களுடைய திறமையின் காரணமாக ஒரு சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கி விடுகிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் வந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பழனியப்பன் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் நண்பன் செல்வமாக நடித்து வருகிறார்.

இவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதுபோல தன்னுடைய நண்பர்கள் மற்றும் தனக்கு பிடித்த பிரபலங்கள் பலருடைய நினைவுகள் குறித்தும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பாபா லட்சுமணனுக்கு விஜய் டிவி பிரபலம் ஒருவர் செய்த உதவி குறித்து பதிவு வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் பாபா லட்சுமணனுக்கு மதுரை முத்து 5000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வாங்க உதவியது குறித்து மதுரை முத்துவிற்கு நன்றி தெரிவித்து போஸ்ட் போட்டு இருக்கிறார். ஏற்கனவே மதுரை முத்து சில தினங்களுக்கு முன்பு ஆதரவற்ற இல்லங்களுக்கு மளிகை சாமான்கள் மற்றும் அடிப்படை பொருட்களை வாங்கி கொடுத்திருந்தார். அதுபோல தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கும் உதவிகளை செய்து வரும் மதுரை முத்து இப்போது நடிகர் பாபா லட்சுமணனுக்கு ரகசியமாக செய்த உதவியை நடிகர் பழனியப்பன் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
இது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது. மதுரை முத்துவின் ஆரம்ப காலம் மிகவும் கஷ்டமாக இருந்தாலும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று பல போராட்டங்களை தாண்டி கவுண்டர் காமெடி மூலமாகவே இன்று பிரபலமாக இருக்கிறார். அதனாலேயே விஜய் டிவியில் பலவிதமான கெட்டப் போட்டு புது புது நிகழ்ச்சிகளிலும் மதுரை முத்து கலந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தான் இவருடைய ஹோம் டூர் வீடியோ வெளியானது. அப்போது கூட மதுரை முத்து இவ்வளவு வசதியாக இருக்கிறார் ஆனால் கஷ்டப்படும் யாருக்கும் அவர் உதவி செய்யவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். ஆனால் தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்திலும் மதுரை முத்து ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் தெருவில் வசிப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications