சிறகடிக்க ஆசை: மீண்டும் மனோஜ் வீட்டுக்கு வந்த ரோகிணி.. விஜயாவின் பிளான் பயங்கரமாக இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறக்கடிக்க ஆசை சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ரோகிணி மீண்டும் விஜயா வீட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால் இந்த முறை விஜயா சரியான பிளான் போட்டு வைத்திருக்கிறார். அதில் ரோகிணி சிக்கினாரா? அல்லது விஜயாவுக்கு ஆப்பு வைக்க போகிறாரா? என்று விரிவாக பார்க்கலாம்.

மனோஜின் ஏமாற்று வேலை

ஏற்கனவே மனோஜ் ரோகிணியை விவாகரத்து செய்யாமலேயே மனவளர்ச்சி இல்லாத பெண்ணை 2வது கல்யாணம் பண்ணி இருக்கிறார். ஆனால் இந்த விஷயம் விஜயாவுக்கு தெரியாது. எப்படியாவது ஒரு பணக்கார பொண்ணை மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று தான் இப்போ வரைக்கும் பிளான் பண்ணிட்டு இருக்கிறார். முதல் முறை ரோகிணி பணக்கார மலேசியா பொண்ணுன்னு ஏமாந்தாச்சு இனியாவது ஒரு பணக்கார பொண்ணை பார்த்து மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று ரோகிணியை விவாகரத்து செய்ய சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai

இதனால் ஒருமுறை வீட்டிற்கு வந்து கையெழுத்து போட வந்த ரோகிணி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் அப்போதுதான் அவர் கர்ப்பமாக இருக்கிற விஷயமே அனைவருக்கும் வந்தது. ஆனால் இந்த குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை இதை அபார்ஷன் பண்ணி விடு என்று மனோஜ் சொல்லிக் கொண்டே இருப்பதால் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.

மீனா கொடுத்த ஆறுதல்

அந்த சமயத்தில்தான் மீனாவும் ஸ்ருதியும் இந்த குழந்தைக்கு நாங்க பொறுப்பு, நீங்க அபார்ஷன் பண்ண வேண்டாம். இப்படிப்பட்ட புருஷன் உங்களுக்கு வேண்டாம் அவர விவாகரத்து பண்ணிடுங்க என்று சொல்லி இருந்தனர். இந்த நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் ரோகிணி மீண்டும் விஜயா வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது மனோஜ் மனக்கோலத்தில் மாப்பிள்ளை போல இருக்கிறார். அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியாகுகிறார்.

நாளைக்கான எபிசோடு

ஆனாலும் விஜயா விடாமல் நீ விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு போன முறை மாதிரி இந்த முறையும் மயக்கம் போட்டு விழுந்திடாத என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபமான ரோகிணி வேகமாக அதில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் கையெழுத்து போட்டு கொடுத்து விவாகரத்து கொடுக்கப் போகிறாரா? அல்லது சும்மா வேற எதையும் அதில் எழுதி வைக்கப் போகிறாரா என்பது நாளைக்கான எபிசோடில் தான் தெரியும்.

அடுத்து என்ன நடக்கும்

ஆனால் ரோகிணி விவாகரத்து கொடுத்ததும் மனோஜ்க்கு பொண்ணு பார்க்க போவதற்காக தான் விஜயா கிளம்பி கொண்டு இருக்கிறார். இதனால் ரோகிணி விவாகரத்து கொடுத்தாலும் மனோஜ் ஏற்கனவே ஒரு கல்யாணம் பண்ணி வைத்திருப்பதால் இன்னொரு கல்யாணம் பண்ணுவதற்கு விஜயா ப்ளான் பண்ணினால் அது விஜயாவுக்கு தான் பிரச்சனையாகும். இப்போதைக்கு கதை போகிற போக்கை பார்த்தால் அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்திலேயே மனோஜ்க்கும் அந்த மன வளர்ச்சி இல்லாத பெண்ணுக்கும் நடந்த கல்யாண விஷயம் மொத்த குடும்பத்திற்கு தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+