தனுஷுடன் நடிக்க மறுத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. இதற்கு இதுதான் காரணமா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கோமதி பிரியா தனுஷ் நடித்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதற்கு என்ன காரணம் என்று அவர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் கதாநாயகியாக சினிமாவில் கொடி கட்டி பறந்து பிறகு அங்கு வாய்ப்பு குறைய தொடங்கிய பல நடிகைகள் சின்னத்திரை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள கால கட்டமே அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அதாவது சின்னத்திரையில் அறிமுகமாகும் சில நடிகைகள் சின்னத்திரை ரசிகர்கள் மூலமாக நன்கு பரீட்சையமாகி அதற்குப் பிறகு சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

சீரியலில் இருந்து சினிமா

அதிலும் தெய்வமகள் சீரியலில் சத்யாவாக பிரபலமடைந்த நடிகை வாணி போஜன் இப்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுபோல செய்தி வாசிப்பாளராகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மதுரை பொண்ணு

இப்படி பல நடிகைகளை உதாரணத்திற்கு சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தான் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியாவிற்கும் சினிமா வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கோமதி பிரியா மறுத்திருக்கிறார். அது பற்றி அவர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

விஜய் டிவி பிரபலம்

அதுபோல தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் அதிகமாக பிறமொழி நடிகைகள் நடித்து வருகிறார்கள். ஆனால் கோமதி பிரியா மதுரை பொண்ணு அவர் விஜய் டிவியில் ஆடியன்ஸாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். அதிலும் வேலைக்காரன், ஓவியா போன்ற சீரியலில் நடித்து வந்த கோமதி பிரியாவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல்தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.

Siragadikka aasai serial vijay tv

அசுரன் பட வாய்ப்பு

இந்த சீரியல் மூலமாக இவருக்கு பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் தெலுங்கு, மலையாள சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருந்தார். சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள வெர்ஷனில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் தனுஷின் சிறுவயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கம் வென்றதும் கோமதி பிரியா ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். பிறகு செலக்ட் ஆகி இருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அசுரன் திரைப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தமாக கோமதி பிரியா பகிர்ந்து இருக்கிறார்.

விலகலுக்கு காரணம்

அசுரன் திரைப்படத்தில் இவர் விலகிய பிறகு தான் நடிகை அம்மு அபிராமி அந்த கேரக்டரில் நடித்து இருந்தாராம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மலையாள சீரியலில் இருந்து சில கோமதி பிரியா திடீரென்று விலகிவிட்டார். அதற்கு காரணம் என்ன என்பதை கோமதி பிரியா வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் அந்த நேரத்தில் கோமதி பிரியா ஒரு பதிவு போட்டிருந்தார்.

கோமதி பிரியா போஸ்ட்

அதில், நம்முடைய உரிமைகள் எந்த இடத்தில் மறுக்கப்படுகிறதோ அங்கு நாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை நமக்கு என்று தன்மானம் இருக்கிறது. அதற்கு பங்கம் விளைவிக்கும் இடத்தை விட்டு நாம் விலகி விடுவது நமக்கு நல்லது தான் என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

உண்மை காரணம்

அதுபோல அந்த நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சிலர் கூறுகையில் கோமதி பிரியாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சில நாட்கள் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது என்றும் அதனால் தான் இன்னொரு நாளில் அதை நடித்து முடித்து தந்து விடுகிறேன் என்று சொன்ன பிறகும் கோமதி பிரியாவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்து விட்டார்கள். அதுவும் உடனுக்குடன் சீரியல் தரப்பினர்கள் அடுத்த நடிகையை தேர்வு செய்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது என்று கூறி இருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

வாழ்த்துக்கள் கோமதி பிரியா

இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் அசுரன் பட வாய்ப்பை கோமதி பிரியா மிஸ் பண்ணிவிட்டாரே என்று அவருடைய ரசிகர்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகிறார்கள். ஆனாலும் இவர் சீக்கிரமாக திரைப்படத்தில் கதாநாயகியாக வேண்டும் என்பது பலருடைய வாழ்த்துக்களாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+