அடுத்தடுத்து விஜய் டிவியை காலி செய்யும் பிரபலங்கள்.. சன் டிவியில் புது நிகழ்ச்சியில் பிரபலம் என்ட்ரி
சென்னை: சன் டிவியில் குழந்தைகளை வைத்து புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரியாலிட்டி ஷோக்கான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் யார் "அந்த அக்கா என்ற கேள்வியோடு" ஒரு உருவம் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் தான் தொகுப்பாளினியாக கலந்து கொள்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதே போல அடுத்தடுத்து போட்டி சேனல்களிலும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவது வாடிக்கை. அதிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வேறு எந்த நிகழ்ச்சியாலும் அடித்துக் கொள்ள முடியாது என்ற வகையில் நான்கு சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

மணிமேகலையின் விலகல்
ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு அந்த நிகழ்ச்சியை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறிவிட்டது. அதுபோல நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகி இருந்தார். பிறகு புது கூட்டணியில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. ஆனாலும் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மணிமேகலை பிரியங்காவோடு ஏற்பட்ட மனக்கசப்பால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
வதந்திக்கு பதிலடி
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த பல பிரபலங்களும் விலகி இருந்தனர். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியை நடத்தி வெற்றியும் கண்டனர். ஆரம்பத்தில் இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டூப்பு என்று சிலர் கலாய்த்து வந்தாலும் அந்த நிகழ்ச்சியை தொடங்கியதே இவர்கள்தான் என்று பலரும் அதற்கு பதிலடி கொடுத்து வந்தனர்.

சேனல் விட்டு சேனல் மாற்றம்
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பலர் இப்போது அடுத்தடுத்த சேனல்களுக்கு போய்க் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியை விட்டு விலகிய மணிமேகலைக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நிகழ்ச்சியில் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பே பாபா பாஸ்கர் நடுவராக இருக்கிறார்.
அடுத்தடுத்து விலகல்
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய கெமி டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருக்கிறார். இந்த வரிசையில் இப்போது சிவாங்கியும் இடம் பிடித்திருக்கிறார். சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாதியில் வெளியேற்றப்பட்டிருந்தாலும் குக் வித் கோமாளியில் தான் பிரபலம் கிடைத்தது.

தொகுப்பாளினியாகும் சிவாங்கி
அதை தொடர்ந்து சினிமாவிலும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சன் டிவியில் புதிய தொகுப்பாளராக அவர் கமிட்டாகி இருக்கிறார். அது குறித்த ப்ரோமோக்கள் வைரலாகி வருகிறது. மீடியா மெசன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நானும் ரௌடி தான் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அஸ்வந்துடன் சிவாங்கியும் தொகுபாளினியாக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்த வீடியோவை சிவாங்கி பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications