CWCக்கு இனி வரமாட்டேன்,சிவாங்கி வெளியிட்ட பதிவு..இதுதான் காரணமா? பலரிடம் கேட்டு எடுத்த முடிவாம்
சென்னை: குக் வித் கோமாளி பற்றி சிவாங்கி வெளியிட்ட பதிவு தற்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சிவாங்கியிடம் ஒரு ரசிகர் அடுத்த சீசனில் நீங்க கோமாளியாக வருவீங்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இனி அப்படி முடியாது இந்த சீசனில் மட்டும்தான் நான் கலந்து கொள்வேன் என்று கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சிவாங்கியும் ஒருவர்.
சிவாங்கி இதுவரைக்கும் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து விட்டு இந்த சீசனில் தான் குக்காக மாறி இருக்கிறார். இது சிவாங்கியின் ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொள்வதற்காக சிவாங்கி அதிகமாக மெனக்கெட்டு கொள்வதும், அதற்காக சமையல் கிளாஸ் எல்லாம் சென்று வருவதாகவும் அவர் கூறி இருந்தார்.

சமூக வலைதளத்தில் பல நெகட்டிவ்வர்ஸ் சிவாங்கியை அடிக்கடி ட்ரோல் செய்து கலாய்த்து வருகிறார்கள். இதுவரைக்கும் கோமாளியாக சமையல் தெரியாமல் இருந்து விட்டு எப்படி இப்ப மட்டும் குக்காக சமையல் செய்ய முடியும்? சிவாங்கி தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர். இது விஜய் டிவி எடுத்த முடிவு. சிவாங்கியை வெற்றி பெற வைப்பதற்காக தான் பல போட்டியாளர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்றெல்லாம் பல வதந்திகள் பரவி வருகிறது.
அதற்கு சிவாங்கி பதிலடிம் கொடுத்திருந்தார் ஆனாலும் அது ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் தற்போது சிவாங்கி தன்னுடைய ரசிகர்களோடு பாண்டிங் அதிகப்படுத்தி கொள்வதற்காக ரசிகர்கள் இடம் கேள்வி கேட்க சொல்லி அதற்கு பதில் கொடுத்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு ரசிகர் இனி நீங்க அடுத்த சீசனிலும் வருவீங்களா என்று கேட்க அது கண்டிப்பாக நடக்காது நான் இனி தொடர்ந்து இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
ஒரு சீசனில் குக்காக கலந்து கொண்டவர்கள் அடுத்த சீசனில் குக்காக கலந்து கொள்ள முடியாது அந்த மாதிரி தான் சிவாங்கியும் இப்போது சொல்லி இருப்பாராக இருக்கும். நான் இந்த சீசனில் குக்காக கலந்து கொள்வதற்கு பல பேரிடம் விசாரித்து விட்டு தான் கலந்து கொண்டேன். இதில் என்னுடைய சிறப்புகளை நான் கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதைத்தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் அடுத்த சீசனில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று சிவாங்கி சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதுவரைக்கும் கோமாளியாக மூன்று சீசனங்களில் கலகலப்பாக நிகழ்ச்சிகளை கொண்டு போய்க் கொண்டிருந்தவர்களில் சிவாங்கியும் ஒருவர். ஆனால் இந்த சீசனில் குக்காக மாட்டிக் கொண்டு விட்டார்கள் என்று சிலர் கருத்து கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் கோமாளியாக இருக்கும் போது கூட அடிக்கடி பாட்டு படித்துக் கொண்டு இருப்பார். ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்வதே இல்லையே என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications