எலிமினேஷனை விடுங்க!.. சிவாங்கிக்கு எப்போது திருமணம்.. எப்படிப்பட்ட கணவர் வேண்டும் தெரியுமா?
சென்னை: தனக்கு வாய்க்கும் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி தெரிவித்துள்ளார். 2கே கிட்ஸ் நோட் பண்ணுங்கப்பா!
விஜய் டிவியில் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் இப்போது நடக்கிறது. இதில் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக வந்தவர் சிவாங்கி.

இவர் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் ரன்னர் அப்பாக வந்தார். இவருடைய தாய் பின்னி கிருஷ்ணகுமார் ஒரு பாடகி. இவர் படையப்பா படத்தில் வந்த மின்சார பூவே பாடலை பாடியிருந்தார். அது போல் அவருடைய தந்தை கிருஷ்ணகுமாரும் பாடகர். இசையமைப்பாளரும் கூட!
சிவாங்கிக்கு குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் , காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்னொரு படம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இவர் தற்போது குக் வித் கோமாளியில் குக்காக வந்தாலும் அவர் இதுவரை அசைவ உணவுகளை தொட்டதே இல்லை என நெட்டிசன்கள் விவாதிக்கிறார்கள்.
போட்டி என்றால் அனைவருக்கும் ஒரே சட்டம்தானே. டிஆர்பி ரேட்டிங்கிற்காக அதென்ன சிவாங்கிக்கு இப்படி ஒரு சலுகை வழங்கப்படுகிறது. அவர் நான் வெஜ் சாப்பிடாதவர். அப்படியென்றால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக் கூடாதே என்கிறார்கள். இவரை விட திறமையாக சமைத்தவர்கள் எல்லாம் எலிமினேஷனில் சென்றுவிட்டார்கள்.
அப்படியிருக்கும்போது சரியாக சமைக்காத சிவாங்கியை நடுவர்களும், விஜய் டிவியும் காப்பாற்றி வருவது ஏன் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் கூட அவருக்கு பாவற்காய் சமைக்க தெரியவில்லை என்பதால் தான் இம்மியூனிட்டி சுற்றில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால் நடுவர்களோ கோபமடைந்து அதெல்லாம் முடியாது, நீ பாகற்காயை வைத்து சமைத்துத்தான் ஆக வேண்டும் என்றனர்.
சிவாங்கியும் சமைத்தார். அதன் பின்னர் அவர் நன்றாக சமைத்ததாக கூறி அவரை இம்மியூனிட்டி ரவுண்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால் அந்த ரவுண்டில் ஷகிலாதான் வென்றார். தொடர்ந்து சிவாங்கி எலிமினேஷனில் இருந்து தப்பி வருகிறார். இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால் போட்டி சற்று கடினமாக மாறியுள்ளது. இன்றைய தினம் குக் வித் கோமாளி எபிசோடில் ஐஸ் கோலா செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டது.
அதை செய்ய தெரியாமல் சிவாங்கி திணறினார். இந்த டாஸ்க்கின் போது சிவாங்கி திருமணம் மற்றும் குழந்தையை பற்றி பேசி கொண்டிருந்தார். இன்னும் 5 ஆண்டுகளில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கோமாளி மோனிஷா சொல்ல, நானும் அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என சொன்ன சிவாங்கி, ஆமா எனக்கு குழந்தை பிறந்தால் அதை எப்படி வச்சி மேய்க்கிறது என கேள்வி எழுப்பினார்.

அத்துடன் எனக்கு வரும் புருஷன் அமைதியாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும் என சிவாங்கி கூறியிருந்தார். இதை பார்த்த 2கே கிட்ஸ் சிவாங்கி, நான் அமைதியானவர், நல்லவர் என கமென்ட் போட்டு வருகிறார்கள். மேலும் சிலர் குழந்தையை எப்படி வச்சி மேய்க்கிறது என கேட்டதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் வரம், அதை போய் இத்தனை கிண்டலாக பேசலாமா, நிழலின் அருமை வெயிலில் செல்வோருக்குத்தான் தெரியும். அது போல் குழந்தையின் அருமை குழந்தைக்காக ஆண்டுக்கணக்கில் தவம் இருப்போருக்குத்தான் தெரியும் என கண்டித்து கமென்ட் போட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications