Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்னை இல்லம் 1000 பவுன் தங்க நகை புகார்.. சிவாஜி கணேசன் சொத்துக்கள் எங்கே? என்எஸ்கே கிரேட்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசனின், அன்னை இல்லத்தை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ததற்கு தடை விதிக்க கோரிய மேல் முறையீட்டு மனுவுக்கு, நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அன்னை இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், "சிவாஜி கணேசன் தேசம் கடந்த கலைஞன்.. எல்லா மொழியும கடந்த பிறவிக்கலைஞன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவரது வாரிசுகள் தந்தையின் பெயரை நிலைநிறுத்த தவறிவிட்டார்கள்.

Television Sivaji Ganesan Annai Illam

தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள்

சிவாஜியின் பெண் பிள்ளைகள் இருவரும், "எங்கள் சகோதரர்கள் எங்களுக்கு சொத்து கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று கோர்ட்டுக்கு போனார்கள்.. தன்னுடைய மகளை, சகோதரியின் மகனுக்கு தந்தார் பிரபு.. அந்த உறவு முறிந்துவிட்டதுமே, தகராறு வெடித்தது.. தங்க நகைகள், வெள்ளி பொருட்களை ராம்குமாரும், பிரபுவும் அபகரித்துக்கொண்டதாக சகோதரிகள் சொன்னார்கள்.

இப்போது ராம்குமாருக்கு கடன் தந்த நிறுவனம், நீதிமன்றம் சென்றதும் சிவாஜியின் அன்னை இல்லம் வீடு விவகாரம் வெடித்தது. பிரபுவுக்கு வசதி இருந்தும், தன்னுடைய அண்ணனை காப்பாற்றவில்லை. அண்ணனுக்கு உதவி செய்து, அன்னை இல்லம் வீட்டை மீட்டு, அதனை நினைவு இல்லமாக்கலாம். ஆனால், பிரபுவுக்கு மனமில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.

2 மகன்களின் பொறுப்பு

தற்போதைய சூழலில், சிவாஜியின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது, அவரது 2 மகன்களின் பொறுப்பாகும். சிவாஜியின் இத்தனை கால புகழ் மங்கிவிடவும் கூடாது.

என்எஸ் கிருஷ்ணன் தன்னுடைய ராயப்பேட்டை வீட்டை விற்க நேரிடும்போது, ஒரு மார்வாடி அந்த வீட்டினை விலைக்கு கேட்டார்.. அதேபோல சிவாஜி கணேசனும் அதே வீட்டை விலைக்கு கேட்டார்.. "ஒரு கலைஞனுக்கு மட்டுமே வீட்டை தருவேன், மார்வாடிக்கு தர மாட்டேன். கலைஞனிடம்தான் அந்த வீடு கடைசிவரை இருக்கும். கலைஞன் இறந்தாலும் அவரது வாரிசிடம் அந்த வீடு இருக்கும். என்று சொல்லி, சிவாஜிக்கே அந்த வீட்டை விற்றார்.

10 தலைமுறை சொத்து

இதுபோல எத்தனையோ சொத்துக்கள் சிவாஜிக்கு இருந்தன.. ரஜினியின் சொத்து மதிப்பே 3000 கோடி காட்டியிருக்கிறார்.. அப்படியானால், 5 ரஜினிகாந்த்துக்கு சமம் 1 சிவாஜி.. சிவாஜியின் சொத்துக்கள் பல கோடி இருந்தது.

10 தலைமுறை உட்கார்ந்து சாப்பிட அளவுக்கு பாடுபட்டு சொத்து சேர்த்தார். ஆனால், ராம்குமாரை திரைப்பட கலைஞன் இல்லை. அப்பாவின் நிழலில் வளர்ந்து, நிறைய ஊதாரி செலவுகள் செய்தவர். கடைசியில் வாரிசுகள் கடனாளிகளாகி ஆகிவிட்டார்கள்.. ரஜினிகாந்த் படம் நடித்து தந்து அந்த கடனை அடைக்க உதவி செய்தார்.. மறுபடியும் கடன் என்றால், இவர்கள் ஊதாரி வாழ்க்கை வாழ்கிறார்களோ எனற சந்தேகம்தான் எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.

500 கிலோ வெள்ளி

முன்னதாக, சிவாஜி கணேசனின் மகள்கள் நீதிமன்றக்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. அதில், "ராம்குமார், பிரபு இருவரும் பெரும்பாலான சொத்துகளை எங்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து எங்களை மோசடி செய்து விட்டனர். அந்த விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். சொத்துகளை பாகப்பிரிவினை செய்து வழங்க வேண்டும். 1,000 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்களை ராம்குமாரும், பிரபுவும் அபகரித்துக்கொண்டனர். எங்களது தந்தை சிவாஜி கணேசன் எழுதியதாக சொல்லும் உயில் போலியானது" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+