சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் பிரபு கிட்ட.. "அவர்" ஏன் மவுனமா இருக்கார்? அம்பானி சொத்து போல: பிரபலம்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நடிகர் சிவாஜி கணேசன், உயிருடன் இருந்தபோதே, அன்னை இல்லம் வீட்டை தனக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், இதற்கு தனது சகோதரரும், சகோதரிகளும் ஒப்புக் கொண்டதை அடுத்து தனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
Recent Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "வீடு ஜப்தி என்றால் நீதிமன்றத்தில் அது சம்பந்தமான ஆவணங்களை ஆய்வு செய்யாமல் இருக்க மாட்டார்கள்..

கடன் வாங்கும்போது, ராம்குமார் மகன் துஷ்யந்த் என்னென்ன ஆவணங்களை தந்தார்? அந்த ஆவணங்களுக்கு கடன் வழங்கப்பட்டதா? என்பதையெல்லாம் கோர்ட் ஆராயும்.
பிரபுவிடம் வீட்டு உயில்
ஜப்தி என்பது சாதாரண நிகழ்வு கிடையாது.. அது ஒரு குடும்பத்தின் மானம், கௌரவம் சம்பந்தப்பட்டது. சிவாஜி குடும்பம் என்றில்லை, எந்த வீடு ஜப்தி என்றாலும், அது அவர்களது கௌரவமும், மானமும் சம்பந்தப்பட்ட விஷயமாகும்.. எனவே, இது நிதானத்துடன் முடிவு எடுக்கப்பட வேண்டிய விஷயம்.. அன்னை இல்லம் தன்னுடையது என்ற உயிலையும், மனுவையும் பிரபு தாக்கல் செய்துள்ளதால், அதில் நீதிமன்றம் என்ன முடிவு செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேஷ்டும்.
துஷ்யந்த் தந்த ஆவணங்கள் என்ன
ஏற்கனவே பிரபு சகோதரிகள் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.. அதனால், துஷ்யந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் இனிமேல்தான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், இந்த விஷயத்தில் பிரபு, ராம்குமார் இருவருமே பேசுகிறார்களே தவிர துஷ்யந்த் தரப்பில் எதுவுமே இதுவரை பேசவில்லை. இது பார்வையாளர்களுக்கு தேவையற்ற சந்தேகங்களை, விவாதங்களை ஏற்படுத்தும்..
முழுக்க முழுக்க இது அவர்களது குடும்ப விஷயம் என்றாலும், சிவாஜியை நேசிப்பவர்களுக்கு, பிரபுவை நேசிப்பவர்களுக்கு இது விவாதப்பொருளாக மாறுவதை தவிர்க்க முடியவில்லை. நியாயமாக பார்த்தால், இதை விவாதமே செய்யக்கூடாது. ஆனாலும், சிவாஜி, பிரபு நேசிப்பவர்கள் கண்டிப்பாக பேசத்தான் செய்வார்கள். துஷ்யந்த் தன்னுடைய விளக்கத்தை தந்துவிட்டால், அந்த அளவுக்கு பேசுபொருளாக மாறாது..
பாகப்பிரிவினை - சொத்துப் பிரச்சனை
கடன் வாங்கினால், அந்த கடனை தந்தாக வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அன்னை இல்லம் பிரபு உடையது என்றால், துஷ்யந்த் என்ன ஆவணங்களை தந்து கடன் வாங்கினார்? என்பதுதான் கேள்வியே.
எப்போதுமே கூட்டுக்குடும்பங்களில், பெற்றோர்கள் இருக்கும்போதே, அனைவரும் சேர்ந்து இணக்கமான முறையில் பேசி, சொத்துக்களை பிரித்து, ஆவணங்களை சரியான முறையில் பதிவு செய்துவிடவேண்டும். பெற்றோர்களும் தங்களுக்கு ஒது பாகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இது பல சிக்கல்களை வருங்காலத்தில் தவிர்க்கும்.
அனில் அம்பானி - முகேஷ் அம்பானி
அனில் அம்பானிக்கும், முகேஷ் அம்பானிக்கும் இடையே சொத்து பிரச்சனை எழுந்தபோது, மன்மோகன் சிங், சோனியா காந்தி போன்ற விஐபிகள்தான் சமரசம் செய்து, பாகப்பிரிவினையை செய்து வைத்தார்கள்.. ஒருகாலகட்டத்தில் அனில் அம்பானி தொழிலில் நஷ்டம் அடைந்தார்.. அப்போது பல சொத்துகள் அவரது கையை விட்டு போனபோது, முகேஷ் அம்பானி தன்னுடைய தம்பிக்காக கை கொடுத்து உதவினார்.
அதுபோல, சிவாஜி குடும்பத்திலும், அவர்களுக்குள்ளே இணக்கமாக பேசி, யாராவது ஒருவர் முன்வந்து கடனை அடைத்துவிட்டு, பிறகு குடும்பத்துக்குள்ளேயே அந்த கடனை அடைத்துக் கொள்ளலாம். அதாவது வெளிக்கடனை முதலில் தந்துவிட்டு, குடும்ப கடனை பிறகு அவர்களுக்குள் தீர்த்து கொள்ளலாம் என்பது என்னுடைய பார்வை.. ஆனால் ஒன்று, சிவாஜி கணேசனின் புகழ், கௌரவம், முன்பு எந்த சொத்துக்களும் பெரிய விஷயமே கிடையாது!" என்று தெரிவித்துள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications