வெள்ளித்தட்டில் காசுடன் வேலூருக்கு போன சிவாஜி கணேசன்.. சூரக்கோட்டையில் வேட்டியுடன் கிடாவெட்டு.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை, எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன், 'சிவாஜி கணேசன்' என்ற நூலை சில வருடங்களுக்கு முன்பு எழுதினார்.. தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருதுமோகன், அன்னை இல்லம் வீடு குறித்தும், சிவாஜி கணேசனின் வேட்டையாடுதல், பொங்கல், தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்..

Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருது மோகன், "நடிகர் திலகம் சிவாஜிக்கு மீன் மிகவும் பிடித்த உணவாகும்.. முதல் மரியாதையில் மீன் சாப்பிடுவதைபோலதான், நிஜமாகவே சிவாஜி மீன் சாப்பிடுவார்.. தினமும் சிவாஜி வீட்டில் மீன் உணவு இருக்கும்..

Television Sivaji Ganesan Vellore

விரால் மீன்கள்

சிவாஜிக்கு விரால் மீன் மிகவும் பிடிக்கும். இதற்கெனவே பிரத்யேகமாக கொண்டு வருவார்கள். அதேபோல மதுரை அயிரை மீன் என்றால் பிடிக்கும். இதற்கெனவே மதுரையிலிருந்து ஃபிளைட்டில் அயிரை மீனை கொடுத்தனுப்பும் ஆட்களும் இருந்தனர்..

நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் வந்து 50வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, விழா கொண்டாடப்பட்டது. அப்போது கமலுக்கு சிவாஜி வீட்டில் விருந்து தரப்பட்டது.. அந்த டைனிங் டேபிள் யானை தந்தத்தால் செய்யப்பட்டது.. 20 பேர் அந்த டேபிளில் உட்கார முடியும்.. அன்றைய தினம் உணவு பரிமாறியது சிவாஜி வீட்டு பெண்கள், பையன்கள், பேரப்பிள்ளைகள்தான்" என்று தெரிவித்துள்ளார்.

சிவாஜி வீட்டுக்கு வராத பிரதம மந்திரியே கிடையாது.. ஆனால் யாரிடமும் எந்த உதவியும் கேட்டதே கிடையாது..

நடிகர் திலகம் தீபாவளி

தீபாவளி அன்று அன்னை இல்லத்தில் படுவிசேஷமாக இருக்கும்.. ஸ்வீட் வகைகளே தினுசு தினுசாக இருக்கும்.. வெடி வெடிப்பதும் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும்.. பொங்கல் தினத்தன்று விடிகாலையில் வேலூருக்கு கிளம்பிவிடுவார் சிவாஜி கணேசன்.. தனக்கு முதன்முதலில் பராசக்தியில் நடிக்க வாய்ப்பு தந்த

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் வீட்டுக்கு சென்று, ஒரு தட்டு நிறைய வெள்ளி காசுகளை வைத்து தருவார் சிவாஜி கணேசன்,.. பட்டு சேலை, வேட்டி, இனிப்புகளை வைத்து தந்துவிட்டு வருவார். மறுநாள் காலையில் 10 கார்களில் சூரக்கோட்டைக்கு கிளம்பிவிடுவார் சிவாஜி கணேசன்.. இவர் பொங்கலுக்கு அங்கு வருவார் என்பதால் ரசிகர்களும் சூரக்கோட்டையில் குவிந்துவிடுவார்கள்..

சூரக்கோட்டை சிவாஜி

சூரக்கோட்டைக்கு சிவாஜி வந்துவிட்டாலே கிடா வெட்டுதான்.. ரசிகர்கள், ஊர் மக்கள் உட்பட அனைவருக்குமே கிடா வெட்டி சாப்பாடு போடுவார். எப்போது சூரக்கோட்டை போனாலும் பட்டிக்காடா, பட்டணமா ஸ்டைலில் வேட்டியில்தான் இருப்பார் நடிகர் திலகம். மக்களோடு மக்களாக ஜாலியாக பேசி, பண்ணைகளை சுத்திப்பார்ப்பார்.

வேட்டையாடுதல் சிவாஜிக்கு பிடித்தமான ஒன்று.. இதனால் மான்கறியும் விரும்பி சாப்பிட்டார்.. ஆனால், இனிமேல் விலங்குகளை வேட்டையாடக்கூடாது என்று அரசு தடை உத்தரவு போடவும், வேட்டையாடுதலை நிறுத்தி விட்டார்.. சிவாஜி கணேசன் வீட்டிலுள்ள அனைத்து துப்பாகிகளுக்கும் லைசென்ஸை பிரபு, இன்றுவரை போலீஸில் தந்து புதுப்பித்து வைத்திருக்கிறார்.. துப்பாக்கிகளே நிறைய இருக்கும்.. அதுவே ஒரு கண்காட்சி வைக்கலாம்..

கக்குவான் இருமல் - கருங்குயில் ரத்தம்

சிவாஜிகணேசனுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தார்.. அவருக்கு கக்குவான் இருமல் பாதிப்பு இருந்தது.. அதற்கு, கருங்குயில் ரத்தம் தந்தால், இருமல் நோய் குறையும் என்று ஒருவர் சொல்லவும், இதற்காகவே பெரம்பலூர் காட்டில் முதன்முதலாக ஏர்-கன் வாங்கி சுட ஆரம்பித்தாரு.. பிறகுதான் வேட்டையாடுதலில் ஆர்வம் அதிகமாகிவிட்டது..

சேலத்தில் ஆர்மரி முத்து என்பவர் உள்ளார்.. அவர் வெடிமருந்துகளை ஏஜென்சி எடுத்திருந்தார்.. வேட்டையை பழக வேண்டுமானால், வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் கவுண்டரிடம்தான் பயில வேண்டும். ஆறேகால் அடி உயரத்தில் இருப்பார் முத்துமாணிக்கம் கவுண்டர்..

வேட்டையாடுதல் ஆர்வம்

சினிமாக்காரர்கள் யாருடனும் பழக்கக்கூடாது என்பது முத்துமாரியம்மன் கவுண்டர் குடும்பத்திலுள்ள கட்டுப்பாடாகும்,.. ஆனால், இது தெரியாமல் முத்துமாரியம்மன் கவுண்டரை பார்க்க சிவாஜி கிளம்பி வந்துவிட்டார்.. பிறகு வேட்டையாடுதலில் சிவாஜிக்கு உள்ள ஆர்வத்தை பார்த்து, அதன்பிறகே அவருக்கு நட்பானார்கள்..

இதற்கு பிறகு இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர். சிவாஜிக்கென்று ஒரு நண்பர் என்றால் அது முத்துமாணிக்கம்தான்.. இருவரும் பேச ஆரம்பித்தால் காலை முதல் இரவு வரை பேசுவார்கள்..!!" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+