Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவாஜி கணேசன் சட்டுனு அந்த முடிவு.. அதுவிடுங்க, ரூ.100 கோடி திருமணம்! ஜெயலலிதாவுக்கு தலைவலி: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவுக்கும் சிவாஜிக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தன.. கலவரம் நடந்து திமுக ஆட்சி கலைந்தபோது, முதல்வராக ஜெயலலிதா வந்திருக்க வேண்டியது, சிவாஜியால்தான் தடுக்கப்பட்டுவிட்டது.. 20 எம்எல்ஏக்களை சிவாஜி தன்னுடன் அழைத்து சென்றுவிட்டதை அதிமுகவே எதிர்பார்க்கவில்லை.. இதனால் ஜெயலலிதாவால் அப்போது முதல்வராக முடியவில்லை என்று டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் . அத்துடன் வளர்ப்பு மகன் திருமணம் குறித்தும் கூறியிருக்கிறார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், 1991-96 காலகட்டத்தில், கேரள நம்பூதிரியின் ஜோதிடத்தை ஜெயலலிதா அப்படியே முழுமையாக நம்பினார்.. பீச்சில் கட்டிடங்கள் எதுவுமே இருக்கக்கூடாது என்று அந்த ஜோதிடர்தான் சொன்னார்..

Television rs100 crore gold jewellery jayalalitha

உடனே பீச்சோரத்தில் இருந்த கண்ணகி சிலை, சீரணி அரங்கம் என அனைத்துமே அகற்றினார் ஜெயலலிதா.. குயின் மேரீஸ் கல்லூரியையும் சேர்த்தே இடிக்க சென்றார்.. உடனே கல்லூரி மாணவிகளுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை மு.க. ஸ்டாலின் நடத்தினார், சிறைக்கும் சென்றார்..

கண்ணகி சிலை

ஆனால், கண்ணகி கிலையை அகற்றியே ஆகவேண்டும் என்று ஜோதிடர் சொல்லவும், உடனே அந்த சிலை மியூசியத்தில் வைக்கப்பட்டது.. பிறகுதான் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மீண்டும் பழைய இடத்துக்கே வைக்கப்பட்டது.

இதற்கு பிறகு அந்த ஜோதிடர் ஜெயலலிதாவிடம், உங்களுக்கு தோஷம் ஒன்று கழிக்க வேண்டியிருக்கிறது.. கடற்கரையில் பிரம்மாண்டமான திருமணத்தை நடத்தினால் தோஷம் தீரும் என்று சொன்னார்.

பீச்சில் மின்னிய விளக்குகள்

அதனால்தான் அவ்வளவு திருமண மண்டபங்கள் இருந்தும்கூட, பெசன்ட் நகரில் பல கோடி ரூபாய் செலவில், மண்டபம் கட்டி திருமணம் நடந்தது.. இதற்கான ஊர்வலம் அடையாறு பெருமாள் கோயிலிலிருந்து சத்யா ஸ்டுடியோ வழியாக, மண்டபத்துக்கு செல்லும்வரை ஊர்வலம் ஏற்பாடானது.

தாம்பரத்துக்கு பக்கத்தில் ஊர்வலம் என்றால், பாண்டிச்சேரியிலேயே பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.. சாந்தோம் பஸ் ஸ்டாண்ட் எல்லாம் ஜெகஜோதியாக மின்னியது.

அந்த நேரத்தில்தான் வழக்கு போடப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது, மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது, திருமணத்துக்கு எடுக்கப்படும் மின்சாரத்துக்கு, கட்டணம் கட்டியாக வேண்டும் என்றெல்லாம் நீதிபதி ஜெகதீசன் தீர்ப்பு தந்தார்.. இதை ஜெயலலிதாவே எதிர்பார்க்கவில்லை..

ஆயிரக்கணக்கான நகைகள்

ஆயிரக்கணக்கான நகைகளை போட்டுக் கொண்டு இவர்கள் எல்லாரும் ஊர்வலத்தில் சாலையில் நடந்து வந்தார்கள்.. ஜெகஜோதியாக நடந்து வந்த போட்டோக்கள் எல்லாம் அன்றைய பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.. கல்யாண விருந்து, அத்தனை நாளும் அமர்க்களப்பட்டது.. நீதிபதி ஜெகதீசன் தந்த தீர்ப்பு காரணமாக, இதைவிட பிரம்மாண்டமாக நடந்திருக்க வேண்டியது, அடக்கி வாசிக்கப்பட்டது.

சசிகலாவின் அக்கா மகனை வளர்ப்பு மகனாக தேர்ந்தெடுத்து இந்த திருமணத்தை செய்தார்.. சசிகலாவுக்கு தூரத்து உறவுதான் சிவாஜி கணேசன் குடும்பம்.. சிவாஜியின் கணவர் வேணுகோபாலுக்கும், சசிகலா குடும்பத்தினர் உறவினரும்கூட.. அந்தவகையில் இந்த சம்பந்தம் எளிதாக முடிந்தது..

சிவாஜி கணேசன் - ஜெயலலிதா

இத்தனைக்கும் ஜெயலலிதாவுக்கும் சிவாஜிக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளன.. கலவரம் நடந்து திமுக ஆட்சி கலைந்தபோது, முதல்வராக ஜெயலலிதா வந்திருக்க வேண்டியது, சிவாஜியால்தான் தடுக்கப்பட்டுவிட்டது.. 20 எம்எல்ஏக்களை சிவாஜி தன்னுடன் அழைத்து சென்றுவிட்டதை அதிமுகவே எதிர்பார்க்கவில்லை.. இதனால் ஜெயலலிதாவால் அப்போது முதல்வராக முடியவில்லை.

ஜெயலலிதாவின் பெயர் அதிகளவில் கெட்டுப்போக இந்த திருமணம் மிக முக்கிய காரணமாக விளங்கியது.. இதற்கு பிறகு கும்பகோணம் மகாமகம் குளத்தில், சசிகலா, ஜெயலலிதா இருவரும் பங்கேற்றபோது, அந்த நெரிசலில் 100 பேர் இறந்துபோனார்கள்.. இதுவும் அவருக்கு அவப்பெயரை தந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+