ஹேர் ஸ்டைலை மு.க. முத்துக்கு மாற்றிய திமுக.. சிவகார்த்திகேயனை "வளைத்த" விஐபி.. கலைஞர் பாணி: பிரபலம்
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.. அவரிடம் பணம் பெற்ற நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதில், சினிமா பி.ஆர்.ஓ.,க்கள் இரண்டு பேரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ஜனநாயகன் Vs பராசக்தி என்று சொல்வதே தவறு.. ஜனநாயகன் என்பது முழுக்க முழுக்க அரசியல் நெறியுள்ள வசனங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே, ஜனநாயகன் படம் வெளியாகும்போது, அதற்கு போட்டியாக ஒரு படம் இருக்க வேண்டும் என்று திமுக தரப்பில் விரும்புகிறார்கள்..

எம்ஜிஆர் முக முத்து
திமுகவுக்கு ஒரு வரலாறு உள்ளது.. முக முத்துவை இப்படித்தான் கொம்பு சீவி விட்டார்கள்.. ஹேர்ஸ்டைலை மாற்றி, எம்ஜிஆர் மாதிரியே அவரை நடிக்க வைத்தார்கள்.. அதேபோல வண்டிக்காரன் மகள் என்ற படத்துக்கு கலைஞர்தான் கதை வசனம் எழுதினார்.. அதில் எம்ஜிஆருக்கு எதிராக, ஜெய்சங்கரை களமிறக்கினார்கள்.. அதாவது சினிமாவில் எம்ஜிஆருக்கு இணையாக ஒருவரை கொண்டு வரும் முயற்சிதான் இதெல்லாம்..
ஒருகட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யும்போது, ரஜினியை கொண்டு வந்து மேடையில் உட்கார வைத்தார்கள்.. அதிமுகவுக்கு எதிராகவும் பேச வைத்தார்கள்.. பிறகு அஜித்தை ரெடி பண்ண பார்த்தார்கள்.. ஆனால், ஒரே மேடையில் கதையை முடித்துவிட்டார் அஜித்.. அப்போது முதல் 2010-ல் இருந்து எந்த அரசியல் மேடைக்கும் அஜித் வருவதில்லை.
சிவகார்த்திகேயன்
இப்போது விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயனை ரெடி செய்கிறார்கள், இப்படி காலம் காலமாக திமுக செய்யக்கூடிய யுக்தியாகும்.. உடனே பாஜக தன்னுடைய அரசியலை இதில் செய்கிறது.. படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் யார்? என்று குடைய துவங்கியிருக்கிறது.
ஏவிஎம் எடுத்த பராசக்தி என்ற டைட்டிலைதான் சிவகார்த்திகேயன் படத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது. முறைப்படி இந்த டைட்டிலை படத்யாரிப்பு நிறுவனம் ஏவிஎம்மிடமிருந்து வாங்கி விட்டாலும், பராசக்தி என்றதுமே, கலைஞர் இங்கே கனெக்ட் ஆகிறார்.. திராவிட இயக்க பகுத்தறிவு, மொழிப்போர் தியாகிகளை பற்றி பேசக்கூடிய படம் இதுவாகும்.. சுருக்கமாக சொல்லப்போனால் ஜனநாயகன் போலவே பராசக்தியும் அரசியல் பேசும் படம்..
துப்பாக்கி தந்த விஜய்
எனக்கு பிறகு நீதான் என்று சிவகார்த்திகேயனிடம் "துப்பாக்கியை" தந்துவிட்டபிறகு, இப்போது நடந்து வரும் செயல்பாடுகளுக்கு விஜய்யால் எதுவுமே பேச முடியாது... சிவகார்த்திகேயனை குறை சொல்லவும் முடியாது.. காரணம், இதன் பின்னணியில் முழுமையாக உள்ளது திமுக..
படம் தயாரிப்பது டான் பிக்சர்ஸ்.. யாரிந்த ஆகாஷ் பாஸ்கர்? என்றெல்லாம அமலாக்கத்துறைக்கு பிறகுதான், பின்னணி வெளியே தெரிகிறது.. ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவு என்றால், அவர் வெளிநாட்டுக்கு போய்விட்டார் என்று அர்த்தமல்ல.. நாளைக்கே டெல்லிக்கு ஆகாஷ் பாஸ்கரன் சென்றுவந்தால், இந்த ரெய்டு எல்லாம் காணாமல் போய்விடும்.
அமலாக்கத்துறையால், அதர்வா, ஜிவி பிரகாஷ் போன்றோரும் சிக்குவார்கள் என்று சொல்வதெல்லாம் தவறான செய்தியாகும்..
விசாரணை செய்தால் தங்களது சம்பளத்தை சொல்வார்கள்.. அவ்வளவுதான்.. இதில் எந்த சிக்கலும் வராது.. ஆக, இந்த ரெயிடு பரபரப்பு எல்லாமே இந்த படம் தள்ளிப்போக வேண்டும் என்பதால்தான்.. எனவே இது சிவகார்த்திகேயனுக்கு எதிரானதில்லை.. அவர் நடிக்கும் பராசக்தி படம் ஜனநாயகன் படத்துக்கு எதிராக இருக்க வேண்டும் என்பதுதான்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications