சிவகார்த்திகேயன் நச்: காலி பண்ண நினைக்காதீங்க, என்னை விட்டுடுங்க, என் வேலையைப் பார்த்துட்டு போறேன்
சென்னை: 'தாய்க்கிழவி' படத்தின் முன்னோட்ட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, தனது திரைப்பயணம், தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் மற்றும் சினிமாவில் தான் சந்திக்கும் சவால்கள் குறித்து மிகவும் உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் உரையாற்றினார்.. தன்னுடைய பேச்சில் நடுவே வழக்கமான காமெடியையும் கலந்து, சீரியஸான கருத்துகளையும் சேர்த்து நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பேசியிருப்பது, ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது..
சிவகார்த்திகேயன் விழாவில் பேசும்போது, "நான் ஒரு ஆசையோடு சினிமாவுக்கு வந்தவன், எனக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் இப்போது கிடைத்திருக்கின்றன.. இந்த வாழ்க்கையை நான் மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்ற விரும்புகிறேன்.. எனக்குக் கிடைத்த பணமும் புகழும் எனக்கு மட்டுமே போதுமானதாக இருந்தால் கடவுள் இவ்வளவு பெரிய உயரத்தைக் கொடுத்திருக்க தேவையில்லை..

நடிகர் சிவகார்த்திகேயன்
அது இன்னும் நாலு பேருக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே 'எஸ்கே புரோடக்சன்ஸ்' மூலம் நல்ல கதைகளை தயாரித்து வருகிறேன்.. 'கனா' முதல் 'கொட்டுக்காளி' வரை நாங்கள் எடுத்த முயற்சிகள் வெறும் வியாபாரத்திற்காக மட்டும் அல்ல.. 'குரங்கு பெடல்' போன்ற படங்கள் பள்ளிகளில் திரையிடப்படுவது எனக்கு ரொம்ப ஆத்ம திருப்தி அளிக்கிறது..
ஒரு நடிகராகத் நான் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் சினிமாவுக்கே முதலீடு செய்து, இன்னும் பல திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.
கால் ஆபரேஷன்
இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் எனக்கு நட்சத்திரங்களாகவே தெரிகிறார்கள்.. குறிப்பாக ராதிகா மேடம் இந்தப் படத்திற்காகத் தனது கால் ஆபரேஷனையும் தள்ளி வைத்துவிட்டு நடித்த அந்த அர்ப்பணிப்பை என்னால் மறக்க முடியாது..
இயக்குநர் சிவகுமாரின் நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது, அதனால்தான் அவரது அடுத்த படமான 'சேயோன்' படத்திலும் நானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளேன்.. சிங்கம்புலி அண்ணன், பாலசரவணன், ரேச்சல் என அனைவரும் தங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர்.. நிவாஸ் பிரசன்னாவின் இசையும் பின்னணியும் படத்திற்குப் பெரிய பலம்..

என்னை விட்டுடுங்க
நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி செய்யவோ இங்கு வரவில்லை.. எனக்குக் கிடைத்த வாய்ப்பை வைத்து நல்ல விஷயங்களைச் செய்ய நினைக்கிறேன், அதற்கு என்னை விட்டுவிடுங்கள் என்றுதான் நான் கேட்டுக்கொள்கிறேன்..
திருச்சியிலிருந்து வந்த என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்திய மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.. ஆனால் சினிமாவில் இருக்கும் ஒரு சிலர் மட்டும் சில தடைகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.. அந்தத் தடைகளை நீங்கள் நீக்கினால், இன்னும் பல திறமையான இயக்குநர்களை என்னால் அறிமுகப்படுத்த முடியும்..
நேர்மையான பேச்சு
நான் இதுவரை ஒரு ரீமேக் படம் கூட செய்யவில்லை, கதைகளை மட்டுமே நம்பி உழைக்கிறேன்.. வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நானே பொறுப்பேற்கிறேன்..
'தாய்க்கிழவி' படம் ஏற்கனவே எங்களுக்கு லாபத்தைக் கொடுத்துவிட்டது, இப்போது மக்களின் பாராட்டிற்காகக் காத்திருக்கிறோம்.. பிப்ரவரி 27ம் தேதி தியேட்டருக்கு வரும் இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. மீண்டும் சொல்கிறேன், நான் என் போக்கில் என் வேலையைச் செய்கிறேன், என்னை தயவுசெய்து விட்டுவிடுங்கள்.." என்று சிவகார்த்திகேயன் மிகவும் அழுத்தமாகத் தனது உரையை நிறைவு செய்தார்..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications