மதராஸியில் சிவகார்த்திகேயன் குதிக்கும் போது, அசம்பாவிதம்! விரல் துண்டாக போயிடுச்சு! -ஏஆர் முருகதாஸ்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பல சுவாரசியமான தகவல்களுடன் நடைபெற்றது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு
சிவகார்த்திகேயனின் திரைப்பயணம், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' என்ற ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில் தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக உருவெடுத்த அவர், பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறி, தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு, அவர் நடித்த 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', மற்றும் 'டாக்டர்' போன்ற படங்கள் அவரை ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்த்தின.
விஜய்யின் பரிசு:
கடந்த காலங்களில், சிவகார்த்திகேயன் சில நிதிப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளைச் சந்தித்திருந்தாலும், அவரது கடின உழைப்பு அவரைத் தொடர்ந்து முன்னேற வைத்தது. சமீபத்தில், நடிகர் விஜய்யின் 'GOAT' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, விஜய் சிவகார்த்திகேயனுக்கு ஒரு விலை உயர்ந்த வாட்சைப் பரிசாக அளித்து, தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.
மதராஸி: முருகதாஸ் மேஜிக்
'மதராஸி' இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பு மிகவும் பெரியது என்று பாராட்டினார். "இந்த படத்துக்கு அனிருத்னு இன்னொரு ஹீரோ இருக்காரு. நான் லோவாக ஃபீல் பண்ணும்போது, விக்ரம் படத்தோட பிஜிஎம்-தான் கேட்பேன். விஜய் சார்கூட வேலை பார்க்கும்போது, அவர்கிட்ட இருந்து டயலாக் வேற மாதிரி கிடைக்கும், அதே மாதிரிதான் அனிருத்" என்று அவர் கூறினார். மேலும், "நிறைய படங்கள் உங்களோட இசையால வெற்றி பெற்றிருக்கு. இந்த படத்துக்கு உங்க இசை பெரிய மகுடமாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.
துணை நடிகர்களின் பங்களிப்பு
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ருக்மிணி மற்றும் பிஜு மேனன் பற்றியும் முருகதாஸ் பேசினார். "மாலதி கதாபாத்திரத்துக்கு ருக்மிணி உயிர் கொடுத்திருக்காங்க. அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்த பிறகுதான் பிஜு மேனன் இந்த படத்துக்குள் வந்தார். அவரது அற்புதமான கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் கொடுத்திருக்கார்" என்று பாராட்டினார்.
முருகதாஸ் தன்னுடைய உதவி இயக்குனர்களின் கடின உழைப்பைப் பற்றிப் பேசும்போது, "என்னுடைய உதவியாளர்களில் 12 பேர் இப்போது இயக்குநர்களாக இருக்காங்க. ஒரு டீம்ல நிறைய பேர் விளையாடுவாங்க, ஆனால் கப் வாங்குறது ஒருவர்தான். அப்படி எனக்குப் பின்னாடி பலரும் இந்த படத்துக்காக உழைச்சிருக்காங்க" என்று பெருமிதத்துடன் கூறினார்.

உயிருக்கு போராடிய ஒளிப்பதிவாளர்!
படப்பிடிப்பில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தையும் முருகதாஸ் பகிர்ந்து கொண்டார். "இலங்கையில் படப்பிடிப்பை நடத்தியபோது, பயங்கரமான புயல் வீசியது. அப்போது, ஒரு காட்சிக்காக உயரமான இடத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும்போது, அவரைவிட உயரமாக நின்றிருந்த ஒளிப்பதிவாளர், புயல் காற்றால் ட்ரோன் கேமரா யார் மீதும் மோதிவிடக் கூடாது என்று ஓடிப் போய் அதைப் பிடித்தார். அப்போது பிளேடு அவரது கையில் பட்டு விரல் தனியாக வந்துவிட்டது. நாங்கள் ஓடிப் போய் அவரது விரலைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தோம். விரலைச் சேர்த்த பிறகு, அடுத்த நாளே அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார்" என்று பேசினார்.
இந்தச் சம்பவம், மதராஸி படக்குழுவினர் தங்கள் உழைப்பை எந்த அளவுக்கு அர்ப்பணித்துள்ளார்கள் என்பதை உணர்த்துவதாக இருந்தது. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம், சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் ஆகிய இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications