சிவகார்த்திகேயன் எடுத்த சூப்பர் முடிவு.. டக்னு மகிழ்ச்சியில் துள்ளும் விஜய் ரசிகர்கள்.. பராசக்தி செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன், விஜய்யுடன் மோதுகிறாரா? என்று இணையத்தில் கேள்விகள் வலம்வருகின்றன.. வரும் 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் "ஜனநாயகன்" படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், "சிவகார்த்திகேயனின் பராசக்தி" பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்படுகிறது. விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் பொங்கலுக்கு வெளியாவதாக தெரிகிறது. இதுகுறித்துதான், மூத்த பத்திரிகையாளர் விகே சுந்தர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

கோட் படத்தில், "துப்பாக்கியை பிடிங்க சிவா" என்று விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்திருந்தார்.. அக்காட்சியின் மூலம் அவர் தான் அடுத்து என்று விஜய் கூறுவதாக பலரும் தெரிவித்தார்கள். இப்போது விஜய் படத்துக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன் படமே வெளியாவதா? என்று இணையத்தில் கேள்விகள் கிளம்பி வருகிறது.

Television Sivakarthikeyan Parasakthi

சிவகார்த்திகேயன் - விஜய்

இந்நிலையில், Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு சினிமா பத்திரிகையாளர், VK Sundar பேசும்போது, "கடந்த வருடம் கோட் படம் வெளியான அதே நாளில் சிவகார்த்திகேயனின் மதராசி படம் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், அது உறுதிப்படுத்தப்படாத செய்தியாகும்.. நான் இதுசம்பந்தமாக சிவகார்த்திகேயன் தரப்பில் பேசியபோது, அப்படி எந்த உறுதியான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை, தொடர்ந்து விவாதம் நடப்பதாக சொல்கிறார்கள். ஆனால், படம் நன்றாக வந்துள்ளதாக தெரிகிறது.

பராசக்தி ரிலீஸ் எப்போது

அமரன் பட அறுவடை போல, இன்னொரு சக்ஸஸ் தர வேண்டும் என்று சிவகார்த்திகேயன் விரும்புகிறார்.. அதனால் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய நினைக்கிறாராம். ஆனால், பராசக்தி படத்துக்கு முன்பு, மதராசி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பாளர் தரப்பில் யோசனை சொல்வதாக தெரிகிறது.

இந்த பேச்சுவார்த்தைதான் ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.. வரும் புதன்கிழமை இறுதிக்கட்டபேச்சுவார்த்தை நடக்க உள்ளது.. அன்றையதினம் தான், முதலில் ரிலீஸாவது பராசக்தியா? மதராசியா? என்று தெரியவரும்.

அமரன் படம் அறுவடை

எப்போதுமே ஒரு படத்தின் வெற்றியை தந்தால், அதை முறியடிக்கக்கூடிய வகையில் அடுத்த படம் இருக்க வேண்டும் அந்தவகையில், அமரன் போலவே பராசக்தி படமும், இந்தி எதிர்ப்பு என்ற உண்மை சம்பவத்தை வைத்து தயாராகிறது.. எனவேதான், அமரன் படத்துக்கு அடுத்ததாக பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் விரும்புகிறார்.

பராசக்தி படத்தை ஏற்கனவே நடிகர் சூர்யா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. தனுஷூம் அதில் நடிக்காமல்.. இப்படி தனுஷ், சூர்யா இருவருமே ஒதுக்கிவிட்ட படத்தில் சிவகார்த்திகேயேன் நடிக்க சம்மதித்தார்.. இதற்கு காரணம், பராசக்தி படத்தின் மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கைதான்.. இது வழக்கமான முருகதாஸ் படமாகவும், அரசியல் பேசும் படமாகவும் இருக்கும்.

சென்ட்டிமென்ட்

ஆனால், கடந்த கோட் படம் வெளியான அதே நாளில் இந்த படத்தை வெளியிட நினைக்கிறார்கள். இதற்கு என்ன சென்ட்டிமென்ட் காரணம் என்று தெரியவில்லை. கோட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.. அதை தொடர்புபடுத்தி ஏதாவது சீன் வைத்திருக்கிறார்களா? என்றும் தெரியவில்லை.

அதேபோல, ஜன நாயகன் படமும், பராசக்தி படமும் ஒன்றாக ரிலீஸ் செய்யப்படுவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. கோட் படத்தில் விஜய்யிடம் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, இப்போது விஜய் பட ரிலீஸின்போதே, தன்னுடைய படத்தையும் சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்யலாமா? என்று சோஷியல் மீடியாவில் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஜன நாயகன் சபாஷ்

விஜய் மிகப்பெரிய ஹீரோ.. ஜன நாயகன் அவரது கடைசி படம்.. அப்படியிருக்கும்போது, அவரது படத்தை நாம் தொந்தரவு செய்யக்கூடாது என்று சிவகார்த்திகேயனுக்கு நன்றாக தெரியும்.. அதனால்தான், தன்னுடைய பராசக்தி ரிலீஸை சில நாள் கழித்துதான் வைத்து கொள்ள சொல்லிவிட்டார் சிவகார்த்திகேயன்.

பொங்கலுக்கு ஜன நாயகன் படம் வெளியாகிறது என்றால், ஜனவரி 26க்கு பராசக்தி வெளியாகும்.. விஜய்க்காக சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுத்த இந்த முடிவால், ஜனநாயகன், பராசக்தி ஒரே நாளில் மோதும் சூழல் இல்லை.. இது 100 சதவீதம் உறுதியான தகவல்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+