சரிகமப கிராண்ட் பைனலில் காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்.. சிவகார்த்திகேயன் என்ட்ரி.. மாஸான சம்பவம் இருக்கு
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக ஜீ தமிழ் தொலைக்காட்சி இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த சேனலில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்த வாரம் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருக்கிறார். இன்னும் பல ஸ்பெஷல் அப்டேட்டுகள் இருக்கிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி மிக பிரம்மாண்டமாக வரும் ஞாயிறு மாலை 4:30 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ் மற்றும் மஹதி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றில் மோதிக்கொள்ள உள்ளனர். சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற உள்ளது.
சிறப்பு விருந்தினர்
இந்த நிலையில் தற்போது இந்த சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிகமப 4 டைட்டில் வின்னர்
அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே திவினேஷ் பழைய பாடல்கள் மூலமாக எப்போதுமே இளைஞர்களையும் வியக்க வைத்திருந்தார். பழைய பாடல்களில் இத்தனை தத்துவமும், மகத்துவமும் இருக்கிறதா என்பது இந்த தலைமுறையினரும் கொண்டாட தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு திவினேஷ் தன்னுடைய குரலாலும், இனிமையான பாடல்களாலும் பலருடைய மனதை ஆக்கிரமித்து விட்டார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

குழந்தைகளின் பெரிய மனது
அதேபோல ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, அபினேஷ் மற்றும் மஹதி எல்லோருமே தங்களுடைய சிறப்பான பாடல்களையும் இனிமையான குரலால் பாடி அசத்தி இருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கிறது. இந்த குழந்தைகளுக்குள் பாடல் போட்டி இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது பார்ப்பவர்களையும் பீல் பண்ண வைத்திருந்தது. அதிலும் கடைசி வாரத்தில் புவனேஷ் வெற்றி பெறவில்லை என்றாலும் தான் பெற்ற வெற்றியை மஹதி புவனேசுக்கு அர்ப்பணித்தது பார்ப்பவரை வியக்க வைத்திருந்தது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications