எல்லாமே வதந்தி.. கிங்காங் வீட்டிற்கு கெத்தாக என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்! மகிழ்ச்சியில் குடும்பம்
சென்னை: காமெடி நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம் கடந்த வாரத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக சில மாதங்களாகவே கிங்காங் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஒரு சிலர் அதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சில விமர்சனங்களும் வந்தது இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு சென்று மணமக்களை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
குறைந்த உயரம் கொண்டிருந்தாலும், நடிகர் கிங்காங் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் தனது திறமையால் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அதிசய பிறவி திரைப்படத்தில் கிங்காங் ஆடிய பிரேக் டான்ஸை ரசிக்காதவர்களே கிடையாது. அந்த நேரத்தில் அது பலராலும் வியந்து பேசப்பட்டது. இப்போதும் காமெடி சேனல்களில் இந்த பாடல் மற்றும் நடனம் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதுபோல, கிங்காங் அந்த நேரத்தில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். கடைசியாக அவருடன் போக்கிரி, சுரா, கந்தசாமி போன்ற படங்களில் இணைந்து செய்த கலாட்டா பலரையும் ரசிக்க வைத்தது. கிங்காங்கிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சினிமா பிரபலங்களின் வருகை
அவருடைய மூத்த மகள் கீர்த்தனாவிற்கு கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றாலும், திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார். திருமணத்திற்கு முன்பு சில மாதங்களாகவே கிங்காங் பிரபலங்களுக்கு பத்திரிக்கை வைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. முதல்வர் தொடங்கி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்திருந்தார்.
அவர் பலருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்திருந்தாலும், சில பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகர் விஷால், ரோபோ சங்கர், ராதாரவி போன்ற சினிமா பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டது அனைவரையும் வியக்க வைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார். அப்போது கிங்காங் தன்னுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க, அனைவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு சிவகார்த்திகேயன் அங்கு இருந்து கிளம்பி இருக்கிறார்.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்றோர் கிங்காங் மகள் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது பற்றி பல விமர்சனம் எழுப்பி வந்தனர். பெரிய நடிகர்கள் அல்லது பிரபலங்கள் வீட்டில் பங்க்ஷனுக்கு இது போன்றவர்கள் போவார்கள் ஆனால் கிங் காங் போன்ற சின்ன நடிகர் வீட்டில் எல்லாம் இவர்கள் வர மாட்டார்கள் என்று சிலர் வசைப்பாடி வந்தனர். இன்னும் சிலர் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்றோர் இப்போது வளர்ந்து விட்டதால் சின்ன நடிகர்களை மதிக்கவில்லை என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் இப்போது கிங்காங் மகளை நேரில் சென்று வாழ்த்தி இருக்கிறார்.
அதோடு இது பற்றி ஏற்கனவே கிங்காங் பேட்டிகளில் பேசும்போது சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்றோர் வரவில்லை என்று சிலர் தப்பு தப்பாக பேசுறாங்க. ஆனா அவங்க சூழ்நிலை எப்படி இருந்தது என்று நமக்கு தெரியாது. நானே சில நேரங்களில் சூட்டிங் இருப்பதால் சில பங்ஷனுககு போக முடியாமல் இருந்திருக்கிறது. அதுபோல அவர்கள் அந்த நேரத்தில் எங்கு இருந்தார்களோ? அவர்களுக்கும் பெர்சனல் வாழ்க்கையும் இருக்கிறது, வேலையும் இருக்கிறது. அதனால் நாம் அவர்களை தப்பாக பேசக்கூடாது என்றும் கிங்காங் பேசியிருந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications