சிவகுமார் ஓவரா பேசிட்டாரோ.. "எவன்டா, அவன்டா".. இதுக்கெல்லாம் காரணம் அந்த மேட்டர்தான்: யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' என்ற படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரெயிலர் நேற்றைய தினம் வெளியான நிலையில், சிவகுமார் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

நேற்று ரெட்ரோ டிரைலர் வெளியீட்டில் சிவகுமார் பேசும்போது, "தமிழ் சினிமாவில் உடம்பை வருத்திக்கொண்டு, சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யார் இருக்கிறார்? சூர்யாவுக்கு முன்னரே அதை செய்தவர் யார்?.. அவருக்கு பின்னால் செய்தவர் யார்? கார்த்தி செய்திருக்கிறாரா? ஆனால் அப்படி உடலை போட்டு வருத்திக்கொள்வது தவறு என்று அவரை டாக்டர் எச்சரிக்கை செய்தார்" என்றார்.

Television Sivakumar Surya

உடம்பை வருத்திக்கொண்டு

சிவகுமாரின் பேச்சு இன்று முழுவதும் ட்ரோல் ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு எப்போதுமே இந்த அளவுக்கு சிவக்குமார் பொதுவெளியில் புகழ்ந்து பேசியதில்லையே? அதிலும் மற்றவர்களை மரியாதைக் குறைவாக சிவக்குமார் பேசியதில்லையே? என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

சிவகுமாரின் இந்த பேச்சை பார்த்த தனுஷ், விக்ரம், சூரி உள்ளிட்டோரின் ரசிகர்கள் எல்லாம் சூர்யா மட்டும்தான் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் என்று விமர்சித்து வருகிறார்கள்.


ஓவரா இருந்தது

இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, "நடிகர் சிவக்குமார் மேடையில் பேசியது ஓவரா இருந்தது.. எப்போதுமே நிதானத்துடனும், கண்ணியத்துடனும் பேசக்கூடியவர் சிவக்குமார்.. ஆனால், நேற்றைய தினம் அதையெல்லாம் மறந்து பேசியதாக தெரிகிறது. தன் மகனை உயர்த்தி பேசுகிற தகுதியும், உரிமையும் சிவக்குமாருக்கு இருக்கிறது..

ஆனால், எவன்டா, அவன்டா என்று பேசுவதுதான் அதிர்ச்சியாக இருந்தது.. கங்குவா படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள்தான், சிவகுமாரை இப்படி பேச வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.. தன்னுடைய மகன், கங்குவா படத்துக்கு அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்தும்கூட, படம் ஓடவில்லையே? மோசமாக டிரோல் செய்கிறார்களே? என்ற கோபமும் சேர்ந்து சிவக்குமாரை இப்படி பேச வைத்திருக்கலாம். எப்படியிருந்தாலும் சிவக்குமார் பேசியது சரியான பேச்சு இல்லை.

அப்படி பேசியிருக்க கூடாது

சமூக ஊடகங்களின் தாக்கம் இன்று பெரிய அளவில் இருக்கும்போது, அப்படி அவர் பேசியிருக்க கூடாது. சிவகுமாருடன் பயணிக்கும் பத்திரிகையாளர்கள், அதை நாசூக்காக சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.. ஆனால பொதுமக்களுக்கு இப்படியான கனெக்ட் அவருடன் கிடையாது.. சிவக்குமாருடன் நேரடி பழக்கமும் இல்லை என்பதால், சிவக்குமார் பேசுவதை அப்படியே வெளிப்படுத்தி விடுவார்கள்.

எந்தவொரு பேச்சையும் பாசிட்டிவ்வாக பேச ஒரு கூட்டம் இருக்கிறது.. அதேபோல நெகட்டிவ்வாக பேச்சு அமையும்போது, அதை ட்ரோல் செய்யவும் ஒரு கூட்டம் உள்ளது.. எனவே பொதுவெளியில் பேசும்போது கவனமாக பேச வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+