சிவாங்கியின் நீ என் உசுரு புள்ள பாடல் ...தேன் போன்ற குரலைக் கேட்டு திணறிப் போன ரசிகர்கள்
சென்னை: சிவாங்கி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நீ என் உசுரு புள்ள எனும் பாடலால் இளைஞர்களின் உசுரை களவாடி விட்டதாம் சிவாங்கியின் குரல்.
தேன் போன்ற குரலால் ரசிகர்களின் மனதை இதமாக வருடி விட்டார் என்று சிவாஜியின் ரசிகர்கள் உருகி வருகிறார்கள்.

இவர்களை கவர்ந்த குரல்
ஏர்டெல் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி பிரபல இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் உடன் இணைந்து "ஆனந்தம் விளையாடும் வீடு" படத்திற்காக பாடியுள்ள 'நீ என் உசுரு புள்ள' பாடல் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வருகிறது. மிகப்பெரிய இசையமைப்பாளரான ஜிவி.பிரகாஷுக்கு இணையாக இந்த பாடலை பாடியுள்ள சிவாங்கி குரலை தேன் குரல் போன்று மனதை வருடுவதாய்...இருப்பதாக அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

பிரபலங்களின் கூட்டணி
இயக்குனர் நந்தா பெரியசாமி, கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உடன் இயக்கி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு,பிரபல நட்சத்திர தம்பதிகளான டாக்டர்.ராஜசேகர்- ஜீவிதா தம்பதிகளின் மகள் சிவாத்மிகா கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார். மற்றும் இயக்குனர் சேரன், சரவணன், சினேகன், மதுமிதா போன்ற பல பிரபலங்களும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கதாநாயகன்-கதாநாயகி கெமிஸ்ட்ரியை விட இயக்குனர் சேரன் மற்றும் சரவணன் இடையே படத்தில் இருக்கும் கெமிஸ்ட்ரியை காணவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருந்த இவர்களது கதாபாத்திரங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதையும் அதில் எவ்வாறு இவர்கள் இருவரும் நடித்திருக்கிறார்கள் என்பதை காணவே ஆவலாக உள்ளனர்.

பாடலின் சிங்கிள் ட்ராக்
அவ்வப்போது இப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக தூண்டி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் 'நீ என் உசுரு புள்ள' என்ற பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. இசையமைப்பாளர் சித்தி குமார் இசையமைப்பில் ஜிவி.பிரகாஷ் சிவாங்கி இணைந்து பாடியுள்ள..நீ என் உசுரு புள்ள சிங்கிள் ட்ராக் ஆடலுடன் கேட்கக்கூடிய மெலடி ரகமாக இருப்பதாகவும், ஜிவி. பிரகாஷ் -சிவாங்கி குரல் பாட்டை வேறு லெவலுக்கு பீல் பண்ண வைப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் உடன் பாடல்
சிங்கராக அறிமுகமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சுட்டிப் பெண்ணாக மாறி அனைவர் மனதையும் கவர்ந்த சிவாங்கி, அவ்வப்போது குட்டி குட்டி ஆல்பம் சாங் பாடி வந்திருந்தாலும், ஜிவி. பிரகாஷ் உடன் இணைந்து தற்பொழுது இவர் பாடியுள்ள இந்தப் பாடல் மூலம் சிவாங்கி தன்னை முழு நேர பாடகியாக மாற்றி கொண்டதோடு,தன்னுடைய சிங்கர் லெவலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று சிவாங்கியை வாழ்த்தி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும்.. வரவேற்பயும் ..அளித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications