மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே சூர்யா.. புது பட அறிவிப்பு.. ஹீரோயின் இந்த டாப் நடிகை! செம சம்பவம் இருக்கு
சென்னை: நடிகராகவும் இயக்குனராகவும் பிரபலமடைந்த எஸ்.ஜே சூர்யா சமீபகாலமாக நடிகராக மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் புதியதாக ஒரு திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருக்கிறார். அந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
"நடிப்பு அரக்கன்" என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி பல போராட்டத்திற்கு பிறகு தான் வாலி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. வாலி படத்தால் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துவிட்டார். அதை தொடர்ந்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் அந்த நேரத்தில் வித்தியாசமான கதை அம்சத்தோடு வந்ததால் இதுவும் பலராலும் பாராட்டப்பட்டது.

எஸ் ஜே சூர்யாவிற்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது என்று மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். முதல் இரண்டு படங்கள் கிட் அடித்ததை தொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கும் திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்து வந்தார். அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. அதற்கு பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் எஸ் ஜே சூர்யா அடுத்த ரகுவரன் என்றும் பலர் பாராட்டி வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதைக் கவர்ந்த எஸ்ஜே சூர்யா மீண்டும் எப்போது படம் இயக்குவார் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. எஸ் ஜே சூர்யா சில நாட்களுக்கு முன்பு கில்லர் என்ற படத்தின் கதையை எழுதி வைத்திருக்கிறேன். அதை நானே இயக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதோடு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எஸ் ஜே சூர்யா சொல்லி இருந்தார். இந்த நிலையில் அவர் சொன்னது போலவே இன்று சூர்யா இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தில் அயோத்தி படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

ப்ரீத்தி அஸ்ரானி சமீபத்தில் கவின் நடித்துள்ள கிஸ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, எஸ் ஜே சூர்யா இயக்கிய திரைப்படங்களில் கதாநாயகிக்கு கதாநாயகனுக்கு போல அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதனால் கில்லர் படத்தில் பிரீத்தியின் இன்னொரு பரிமாணத்தை பார்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications