நான் செய்த “அந்த” செயலுக்காக வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.. எஸ்.ஜே சூர்யா எமோஷனல்
சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட எஸ்.ஜே. சூர்யா சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தான் செய்த செயல் இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் அதை நினைத்து நான் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு.. மனம் குமுறினேன் என்று தன்னுடைய கஷ்டத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ்.ஜே சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக வேண்டும் என்று அதற்காக பல முயற்சிகளை எடுத்திருக்கிறார். அதிலும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த எஸ்ஜே சூரியாவின் சொந்த பெயர் செல்வராஜ் ஜஸ்டின் பாண்டியன் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்புக்காக பல அவமானங்களையும், கஷ்டங்களையும் எஸ்.ஜே சூர்யா ஆரம்பத்தில் பட்டிருக்கிறார். ஹோட்டலில் பிளேட் கழுவி, டேபிள் துடைத்து சர்வராக வேலை செய்து என்று வேலை பார்த்தபடியே இயக்குனர் ஆவதற்கு பல முயற்சிகளை எடுத்த பிறகு தான் இவருக்கு துணை இயக்குனராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதல் முறையாக நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வாலி திரைப்படத்தில் தான் இவர் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு குஷி திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. ஆரம்பத்திலேயே இவருக்கு இயக்குனராக அங்கீகாரம் கிடைத்த நிலையில் நியூ திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்போது வில்லனாகவும், கதாநாயகனாகவும் இவர் பல முன்னணி நடிகர்களோடு மிரட்டிக் கொண்டிருக்கிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பிச்சி பெடல் எடுத்து விடும் இவருடைய நடிப்புக்கு இவரை எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது எதார்த்தமாக இவரை பாட சொல்லி இருந்தனர்.

அப்போது இவர் நடிப்பில் வெளிவந்த "அன்பே ஆருயிரே" படத்தில் இடம்பெற்ற "மயிலிறகே மயிலிறகே" என்ற பாடலில் "பொதிகை மலையை பிரிந்து" என்ற வரிகளை பாடியிருந்தார். இது இணையத்தில் பெரிய அளவில் கலாய்க்கப்பட்டு வருகிறது. பலர் இதுதான் கல்லூரி ஸ்கூல் விழாக்களில் பலர் பாடும் பாடலாக இருக்கிறது என்று எஸ்.ஜே சூர்யாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னை ரோல் செய்பவர்கள் குறித்து சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நான் எந்த ட்ரோலிலும் சிக்காமல் நல்ல பையனா சுத்திக்கிட்டு இருந்தேன் ஆனால் நான் கொஞ்சம் வசதியா இருந்த நேரத்தில் இன்டர்வியூவில் என்ன பாட சொன்ன போது என்னை அறியாமல் நான் பாடியதை வைத்து இணையத்தில் பாடாய்படுத்தி எடுத்து வருகிறார்கள்.
அன்னைக்கு நான் பாடியதை நினைத்து நான் பட்ட அவஸ்தை இருக்கே.. வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துக்கப்பட்டு துயர பட வச்சிட்டாங்க என்று வடிவேலு பாணியில் கிண்டலாக ஜே சூர்யா பேசியிருக்கும் நிலையில் இதுவும் இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications