சத்யா சீரியல் நடிகர் திடீர் திருமணம்.. வாழ்த்தும் ரசிகர்கள்..திருமணம் இவ்வளவு எளிமையாகவா..!!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலின் நடிகருக்கு தற்போது எளிமையான முறையில் திருமணம் முடிவடைந்திருக்கிறது.
சத்யா சீரியலில் சசி கேரக்டரில் நடிக்கும் இந்திரனுக்கு திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இந்திரனுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஜீ தமிழ் சத்யா சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்தியா சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக விஷ்ணு நடிக்கிறார். இவர்கள் இருவருடைய ஜோடி பொருத்தத்தை ரசிகர்கள் பலர் ரசித்து வருகிறார்கள். ரசிகர்களில் ஆதரவினால் தற்போது இந்த சீரியல் டிஆர்பி யில் முதன்மையான இடத்தில் தான் இருந்து வருகிறதாம்.

குள்ள பூதம்
சத்யா கேரக்டரில் கதாநாயகனை விடவும் ஹீரோயினியாக நடிக்கும் ஆயிஷாவுக்கு தான் அதிகமான முக்கியத்துவம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆயிஷா கதாநாயகர்களுக்கு டஃப் கொடுக்கிற வகையில் பல சாகசங்களை இந்த சீரியலில் செய்து வருகிறார். ஆண் கெட்டப்பில் அடிக்கடி வலம் வந்து கொண்டிருக்கும் ஆயிஷா அவருடைய ஏரியா பசங்களால் செல்லமாக சத்யா என்று அழைக்கப்படுகிறார். சத்யாவின் நண்பர்களின் ஒருவராக குள்ள பூதம் கேரக்டரில் நடிப்பவர்தான் இந்திரன். இவர் சத்யா சீரியலில் மட்டுமல்லாமல் செம்பருத்தி, இரட்டை ரோஜா, என்றென்றும் புன்னகை என பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
கதாநாயகர்களின் நண்பனாக பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இந்திரன். சத்யா சீரியலில் தான் கதாநாயகியின் நண்பனாக நடித்திருக்கிறார். அதுவும் குள்ள பூதம் கேரக்டரில் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்த வகையில் உள்ளது என்று கூறி வருகிறார்கள். சீரியலில் மட்டுமல்லாமல் பல ரீல்ஸ் வீடியோக்களிலும் இந்திரன் சமூக வலைத்தளத்தில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திடீர் திருமணம்
சின்னத்திரை நடிகர்கள் பலர் திடீர் திருமணங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நானும் ஒருவர் என்று இந்திரன் நிரூபித்துள்ளார். இவருடைய திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டதும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நிலையில் இவருக்கு திருமணம் எப்போது முடிந்தது என்று இவருடைய ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். திருமணத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இப்படி எளிமையாக முடித்து விட்டாரே என்று பலர் கூறி வருகிறார்கள். இவருடைய திருமணத்திற்கு சத்யா சீரியல் நடிகர்கள் மட்டுமல்லாமல், பல சின்னத்திரை நடிகர்களும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications