ஸ்டார் ஓட்டலில் சிக்கிய அழகான "சிரிப்பு" நடிகை.. கென்னடி காலத்திலேயே அரசியல்வாதிகள் அராஜகம்: பிரபலம்
சென்னை: சினிமாவில் பல காரணங்களால் ஷூட்டிங்குகள் நின்றுபோவதுண்டு.. டைரக்டர்கள் திறமையாக இருந்தாலும், சிலசமயம், ஹீரோ, ஹீரோயின்களாலும் ஷூட்டிங் பாதிக்கப்படுவதுண்டு.. அட்ஜெஸ்ட்மென்ட் என்ற விஷயத்தினாலும் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதுண்டு என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.. கென்னடி காலத்திலேயே சில அரசியல்வாதிகள், நடிகைகளுக்கு தரப்படும் நெருக்கடி அதிகம் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த சபிதா ஜோசப் பேட்டி" சினிமா துறையிலும் அட்ஜெட்ஸ்ட்மென்ட் உள்ளது என்றாலும், எல்லாருமே அதுபோல் கிடையாது. அட்ஜெஸ்ட்மென்ட் கேட்ட நடிகர்கள் சிலர், இப்போது சினிமாவிருந்தே ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

உற்று கவனிக்கிறார்கள்
ஆனால், இப்போது சினிமாவில் நிலைமை மாறிவிட்டது. நடிகர், நடிகைகள் தெளிவாகவே இருக்கிறார்கள்.. அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.. படித்த புத்திசாலிகளாகவும் உள்ளதால், நல்லது கெட்டது அறிந்துள்ளனர்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால், இப்போது சினிமாவில் நிலைமை மாறியிருக்கிறது.. நடிகர், நடிகைகள் தெளிவாகவே இருக்கிறார்கள்.. அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.. படித்த புத்திசாலிகளாகவும் உள்ளதால், நல்லது கெட்டது அறிந்துள்ளனர்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அட்ஜெஸ்ட்மென்ட்
தற்போது அரசியல்வாதிகளிடம் நடிகைகளுக்கான அட்ஜெட்ஸ்ட்மென்ட் குறித்து Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் சபிதா ஜோசப்..
அதில், "அரசியல்வாதிகள் நடிகைகளுடன் தொடர்பு வைத்து கொள்வது கென்னடி காலத்திலிருந்தே இருந்தது.. மர்லின் மன்றோ, கென்னடி இருவரும் டேட்டிங் போனார்கள், கென்னடியின் கஸ்டடியில் மர்லின் மன்றோ இருந்தார் என்றெல்லாம் மர்லின் மன்றோ மரணத்தின்போது, பல்வேறு விஷயங்கள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை தந்தன..
ஜனாதிபதி - நடிகைகள்
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதிக்கும்கூட நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாகத்தான் விமர்சனங்கள் தேர்தலுக்கு முன்புகூட வலம்வந்தன.. அந்தவகையில், சில அரசியல்வாதிகளுக்கு நடிகைகளுக்கு தொடர்பு இருக்கத்தான் செய்யும். சிலசமயம் நடிகைகைளே, தங்களுக்கான ஆதரவு, அடைக்கலம் கேட்டு அரசியல்வாதிகளிடம் செல்வதுமுண்டு..
சிரிப்புக்கு பெயர் போன நடிகை
நம்முடைய தமிழகத்தை எடுத்துக் கொண்டால், அவர் மத்திய அமைச்சராக உள்ள, ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியின் மகன் ஆவார்.,.. "சிரிப்பு"க்கு பெயர்போன ஒரு நடிகை, குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பார்.. பார்ப்பதற்கு அழகாக இருப்பார்.. அந்த நடிகையின்மீது, அரசியல் வாரிசுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது.. இதன் அடிப்படையில் அட்ஜெஸ்ட்மென்ட் பேசப்பட்டது..
குறிப்பிட்ட ஓட்டலுக்கு அரசியல் வாரிசும், சிரிப்பு நடிகையும் வந்து செல்வார்கள்.. இதற்கு மிகப்பெரிய தொகை நடிகைக்கு தரபபட்டது. அப்போது திடீரென அந்த ஓட்டலுக்கு போலீஸ் ரெயிடு வந்துவிட்டது.. அறையில் நடிகையும், அரசியல்வாதி மகனும் சிக்கி கொண்டனர்.. போலீஸை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்..
அரசியல்வாதி மகன்
தான் ஒரு அரசியல்வாதியின் மகனாக இருந்தாலும், இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாத நிலைமை.. மீடியாவுக்கும் தெரிந்துவிடக்கூடாதே? அப்படி தெரிந்தால் அப்பாவின் அரசியலும் பாதிக்கப்படும், நடிகையின் சினிமா வாய்ப்பும் பாதிக்கப்படும் என்று வாரிசு பதறினார்..
பிறகு அப்போதைய முதலமைச்சரிடம் இந்த விஷயம் சென்றது.. இருவரையும் மன்னித்து அனுப்பி விடுங்கள் என்று உத்தரவிடப்பட்டதையடுத்து, இருவருமே விடுவிக்கப்பட்டனர். இப்படி பல்வேறு காலகட்டத்தில் பலமுறை, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நடிகைகளுடன் சிக்கியிருக்கிறார்கள்..
அதிகாரிகளால் டார்ச்சர்
பணம், ஆடம்பர பரிசு பொருட்கள், அல்லது வேறு ஏதாவது ஆதாயத்துக்காக இப்படியான அட்ஜெட்ஸ்மென்ட்கள் நடப்பதுண்டு...
தமிழகத்தில் சிலநேரத்தில் அதிகாரிகளால்கூட, நடிகைகளுக்கு தொந்தரவு வந்தது.. அட்ஜெஸ்ட்மென்ட்களுக்கு மறுக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிகாரிகளால் மிரட்டப்பட்டும் இருக்கிறார்கள். நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்..
நடிகைகள் தனியாக, துணையின்றி இருந்தால் இதுபோன்ற தொல்லைகள், பாதிப்புகள் வரத்தான் செய்யும்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications