Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டார் ஓட்டலில் அழகான "சிரிப்பு" நடிகை.. மனைவியிடம் சிக்கி திணறிய நடிகர் யார்? போட்டுடைத்த பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற விஷயம் தவிர்க்கப்பட முடியாமல் இருந்தது. இன்று அப்படியான நிலைமை கிடையாது. படித்த பிள்ளைகள் சினிமாவுக்குள் வருகிறார்கள்.. தெளிவாக இருக்கிறார்கள்.. இப்போது கேரளாவில் ஹேமா கமிட்டி வந்தபிறகு, கூடுதல் அச்சமும், கலக்கம் திரையுலகில் வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

Realone Media என்ற யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "நடன இயக்குனராக இருந்து, வில்லன் நடிகராக மாறி, இப்போது ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் அவருக்கு, ஒரு நடிகை மீது ஆசை வந்தது.. இதனால் சில சிக்கலில் சிக்கியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.. ஆனால், சம்பந்தப்பட்ட நடிகர், நடிகை யாரென்று கடைசிவரை வெளியே வரவில்லை..

Television Smiling heroin Star Hotel

நகரப்பகுதியில் ஷூட்டிங்

எனினும், இந்த செய்தி ஓரளவு உண்மையானதுதான்.. அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சினிமாவில் இயல்பான ஒன்று.. அந்தவகையில் நகரப்பகுதிகளில் ஷூட்டிங் வைத்தாலே, சில டைரக்டர்களுக்கு, நடிகர்களுக்கு சிக்கல் ஆகிவிடும். எனவே, அவுட்டோர் ஷூட்டிங்குகளை பயன்படுத்தி கொள்வார்கள்.

அதுபோல நடன இயக்குனராக இருந்து வில்லனாகி, பிறகு ஹீரோவாக நடிக்கும் அந்த நடிகர், நகரப்பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் நடித்திருந்தார்.. பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டர்களிலேயே நடிக்கும் நடிகை, அந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.. அந்த நடிகையின் சிரிப்பு அனைவருக்குமே பிடிக்கும்.

மலேசியாவில் ஷூட்டிங்

அந்த நடிகையிடம் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேச முடியாமல் திணறினார் ஹீரோ.. நகரத்திலேயே படம் எடுக்கப்பட்டு கொண்டிருந்ததால், கடுப்பான ஹீரோ, மலேசியாவில் பாடல் ஷூட்டிங்கை எடுக்கலாம் என்றும், இதற்காக ஏற்படும் செலவை தன்னுடைய சம்பளத்தில் கழித்துவிடுங்கள் என்றும் டைரக்டரிடம் சொன்னார்.. ஓசியிலேயே பாடல் எடுக்கப்படுவதால் டைரக்டரும் இதற்கு சம்மதித்தார்..

மலேசியாவுக்கு அனைவரும் சென்று பாடல் காட்சிகளை 3 நாட்களுக்கு மேலாக எடுத்தனர்.. கிட்டத்தட்ட பாடலும் முடியும் தருவாயிக்கு வந்தது.. பிறகு காஃபி ஷாப்புக்கு
நடிகையை அழைத்து சென்று , தன்னுடைய விருப்பத்தை சொல்லி நடிகையின் சம்மதம் பெற்றார்..

கொந்தளித்த மனைவி

சென்னை சென்றதுமே, மேனேஜரை அனுப்பி பணம் பெற்றுக்கொள்ளுமாறு நடிகர் சொல்லவும், அதன்படியே நடிகையின் மேனேஜர், நடிகரின் மேனேஜரை சந்தித்து, செக் வாங்கி கொண்டு போனார்.

இந்த விஷயம், நடிகரின் மனைவிக்கு தெரிந்து கொந்தளித்துவிட்டார். இவ்வளவு பணம் அந்த நடிகைக்கு எதற்காக தரவேண்டும்? என்று குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது.. இறுதியில், மனைவியை சமாதானம் செய்து, வாக்குறுதி தந்து, அந்த பிரச்சனை மெல்ல ஓய்ந்தது என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

வாரிசு அரசியல்

கடந்த வாரம் சபிதா ஜோசப், வேறு ஒரு யூடியூப் சேனலுக்கு இதேபோன்ற ஒரு தகவலை சொல்லியிருந்தார்.. அதில், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரின் மகன், "சிரிப்பு"க்கு பெயர்போன ஒரு நடிகையின் மீது ஈர்ப்பு இருந்தது.. இதன் அடிப்படையில் அட்ஜெஸ்ட்மென்ட் பேசப்பட்டது..

குறிப்பிட்ட ஓட்டலுக்கு அரசியல் வாரிசும், சிரிப்பு நடிகையும் வந்து செல்வார்கள்.. இதற்கு மிகப்பெரிய தொகை நடிகைக்கு தரப்பட்டது. அப்போது திடீரென அந்த ஓட்டலுக்கு போலீஸ் ரெயிடு வந்துவிடவும், நடிகையும், அரசியல்வாதியும் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசியல்வாதி மகன்

தன்னுடைய அப்பாவுக்கு இது தெரிந்துவிடக்கூடாதே என்று மகனும், தன்னுடைய எதிர்காலம் சினிமாவில் என்னாகுமோ என்று நடிகையும் கலங்கினார்கள்.

பிறகு அப்போதைய முதலமைச்சரிடம் இந்த விஷயம் சென்றது.. இருவரையும் மன்னித்து அனுப்பி விடுங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிடப்பட்டதையடுத்து, இருவருமே விடுவிக்கப்பட்டனர். இப்படி பல்வேறு காலகட்டத்தில் பலமுறை, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நடிகைகளுடன் சிக்கி கொள்வது அடிக்கடி நடக்கக்கூடிய விஷயம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+