சீரியலில் கதாநாயகனாகும் சினேகன்..! ஜோடி யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் தான்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பாடலாசிரியர் சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்திருக்கும் நிலையில் அவர் இப்போது சின்னத்திரையில் கதாநாயகனாக அறிமுகமாக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு ஜோடியாக செய்தி வாசிப்பாளராகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் பிரபலமடைந்த அனிதா சம்பத் தான் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
பல நடிகர்கள், நடிகைகள் வெள்ளி திரையில் பிரபலமாவதை விடவும் சின்ன திரையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலம் ஆகி விடுகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்கள் கூட வருடத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் சில காட்சிகளில் வந்து போவார்கள். அவர்களின் தாக்கம் ஒரு சில வாரங்கள் மட்டும்தான் இருக்கும்.

ஆனால் சீரியலில் நடிப்பவர்கள் தினமும் தங்களுடைய முகத்தை டிவியில் காட்டிக் கொண்டிருப்பதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்படுகிறார்கள். அதனாலேயே ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பும் இப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாடல் ஆசிரியராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் சினேகன் விரைவில் சீரியலில் கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே சினேகனின் மனைவியான கன்னிகாவும் சினிமா மற்றும் சீரியலில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு சரியான வாய்ப்பு இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதே நேரத்தில் ஹேர் ஆயில் பிசினஸ் செய்து வருகிறார். அதுபோல ரசிகர்களின் ஃபேவரைட்டான பல பாடல்களை சினேகன்தான் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில் அவருடைய பாடல்களை மக்களுக்கு தெரிய வைக்கும் விதமாக கன்னிகா ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவு நேரத்தில் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் அந்த சீரியலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இப்போது சினேகன் மட்டும் கதாநாயகனாக சீரியலில் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அனிதா சம்பத் தான் நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

அனிதா சம்பத் ஏற்கனவே செய்தி வாசிப்பாளராக பலருக்கும் பரீட்சயமானவர் தான். ஆனாலும் அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பெரிய அளவில் பேசப்பட்டார். அதற்குப் பிறகு சினிமாக்களிலும், சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சினேகன் மற்றும் அனிதா சம்பத் இருவரும் நடிக்கும் சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த சீரியலை யாரடி நீ மோகினி சீரியல் மற்றும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் போன்றவற்றை இயக்கிய பிரியன் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications