For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. அதே வாத்தியாரா.. அச்சச்சோ தமிழ் தப்புமா?!!!

தமிழ்த்தாய் வாழ்த்தை சொதப்பிய சினேகன் தற்போது இந்த சீசனிலும் பாடம் நடத்த வருகிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக- வீடியோ

    சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்தை சொதப்பிய சினேகன் தற்போது இந்த சீசனிலும் பாடம் நடத்த வருகிறார். இன்று என்ன சொதப்ப போகிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. முதல் சீசனை போல் இன்னும் இந்த நிகழ்ச்சி சூடுபிடிக்கவில்லை. சுவாரஸ்யம், குடும்பத்துடன் பார்க்க முடியாத லூட்டிகள் என்பன உள்ளிட்ட காரணங்களால் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை பலரும் தவிர்க்கின்றனர்.

    டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க பிக்பாஸ் சீசன் 2 டீமும் எத்தனையோ வழிகளில் செல்கிறது. ஆனாலும் முடியவில்லை.

    பிக்பாஸ் வீட்டில் சூரி

    பிக்பாஸ் வீட்டில் சூரி

    பிக்பாஸ் வீட்டுக்கு அண்மையில் நடிகர் கார்த்தி மற்றும் நகைச்சுவை சூரி, இயக்குநர் பாண்டியராஜ் ஆகியோர் சென்றிருந்தனர். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் பட பிரொமோவுக்காக வந்திருந்தனர். வீட்டை தூய்மையாக வைத்திருக்காததை கார்த்தி கண்டித்தார்.

    சூரி அட்வைஸ்

    சூரி அட்வைஸ்

    இதையடுத்து கழிப்பறைக்கு மகத்தை கூட்டிச் சென்ற சூரி அவர் யாஷிகாவுடன் பழகும் விதம் குறித்து அறிவுரை கூறினார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருமே போலியாக நடிப்பதாக குறை கூறினார். இந்நிலையில் இன்று இரவு சினேகன் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் பிரொமோ வெளியாகியுள்ளது. அதில் அவர் பாடம் எடுப்பது போன்று காட்சிகள் உள்ளன.

    தமிழ்த் தாய் வாழ்த்து சொதப்பல்

    தமிழ்த் தாய் வாழ்த்து சொதப்பல்

    கடந்த சீசனின் போது தமிழ்த்தாய் வாழ்த்தை சினேகன் அங்குள்ள போட்டியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அப்போது ஒவ்வொருவராக பாடினர். ஜூலியின் சுற்று வரும் போது தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்றார் பாருங்க. நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. அதை விட ஜூலியின் தவறை பாடலாசிரியர் சினேகன் திருத்தவே இல்லை. பின்னர் தப்பும் தாளமுமாகவே பாடினார். இதுபோல் இன்று தமிழை எந்த வகையில் கொலை செய்ய போகிறார்களோ என்ற அச்சம் நேயர்கள் மத்தியில் உள்ளது.

    ஒன்னா சாப்பிடுங்க

    ஒன்னா சாப்பிடுங்க

    பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் போட்டியாளர்களுக்கு சினேகன் அறிவுரை வழங்கினார். அப்போது சரியோ தப்போ புடிக்கிறதோ புடிக்கலையோ சாப்பிடும்போதாவது எல்லாரும் ஒன்றாக உட்காருங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

    English summary
    Today Snehan is going to Bigg boss house as teacher. In the last season, he and his team tarnishes the image of the Tamil Thai Vazhthu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X