நடிகை கன்னிகா- சினேகன் வீட்டில் சந்தோஷமான செய்தி.. கடற்கரையில் கொண்டாட்டம்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சின்னத்திரை வெள்ளி திரையில் நடிகையாக இருக்கும் கன்னிகா தற்போது தன்னுடைய கணவரோடு கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
நடிகை கன்னிகா மற்றும் அவருடைய கணவர் பாடலாசிரியர் சினேகன் இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் இடங்களை வீடியோவாக வெளியிட்டு வரும் நிலையில் கடற்கரையில் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கன்னிகா மற்றும் சினேகன் தம்பதியினரில் கன்னிகாவின் பிறந்தநாளை எளிமையாக சினேகன் சர்ப்ரைஸோடு கொண்டாடி இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான "கல்யாணப்பரிசு" என்ற சீரியல் மூலமாக சின்ன திரையில் அறிமுகமான நடிகை கன்னிகா ரவி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் திறமைக்கு தகுந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காததால் அதற்காக காத்திருந்த நேரத்தில் தான் பாடல் ஆசிரியர் சினேகன் உடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது.
பல ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வந்தாலும் தங்களுடைய துறையில் சாதித்து விட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தங்களுடைய காதலை ரகசியமாக வைத்திருந்தனர். ஆனாலும் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் ஒரு கட்டத்தில் தங்களுடைய காதலை அனைவருக்கும் அறிவித்து இருந்தனர்.

அந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டு பிரபலமும் ஆகி இருந்தார். அதற்கு முன்பு பல பாடல்கள் இவர் எழுதியிருந்தாலும் அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருந்தது. பாடல்கள் ஹிட்டான அளவிற்கு இது சினேகன் உடைய பாடல்கள் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் கன்னிகா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் சினேகன் உடைய பாடல்களை எல்லாம் ரீல்ஸ் வீடியோவாக ரி கிரியேட் செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இது பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிற இந்த பாடல் எல்லாம் சிநேகன் பாடியதா? என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு பல ஹிட் பாடல்களை சினேகன் பாடியிருக்கிறார். இந்த நிலையில் கன்னிகா மற்றும் சினேகன் இருவருமே வெளியே செல்லும் இடங்களில் அடிக்கடி வீடியோக்களை எடுத்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்கள். அது அதிகமான ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வரும்.
அதுபோல கன்னிகாவின் பிறந்தநாளுக்கு சினேகன் கடற்கரையில் கேக் வைத்து கொண்டாடி இருக்கிறார். அந்த கேக்கில்," என்னை அழகாய் வரையும் தூருகைக்கு என் காதல் வாழ்த்துக்கள்" என்று வார்த்தைகளை வரைந்து இருக்கிறார். அது போல கேக் வெட்டி கொண்டாடிய கன்னிகா இரவு நேரத்தில் கடற்கரையில் இருக்கும் அனைவருக்கும் அதைக் கொடுத்து ஆசீர்வாதங்களை வாங்கி இருக்கிறார்.
கன்னிகா ஒரு நடிகை மட்டுமல்ல. பல திறமை உள்ளவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். சிலம்பாட்டம், ஓவியர், புத்தக ஆசிரியர், சமையல் கலைஞர், நீண்ட கூந்தலுக்கான அழகி பட்டம் பெற்றவர் என பல திறமைகள் இவருக்குள் இருக்கும் நிலையில் சினேகன் வாங்கி கொடுத்த கேக்கில் கூட ஒரு ஓவியருக்கு தேவையான கலரிங் பிரஸ் வாட்டர் கலர் என பல இருப்பது போல அதில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.
அதுபோல பிறந்தநாளுக்கு சினேகன் கன்னிகாவிற்கு அழகிய நெக்லஸ் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார். இந்த நிலையில் கன்னிகா மற்றும் சினேகன் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது போல எப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பலர் ஆசீர்வாதங்களை வழங்கி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சினேகனின் பிறந்த நாளுக்கும் கன்னிகா இதுபோல்தான் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications