“மீம்ஸ்ல சிரிக்க வைக்கும் முகம்… அந்த சிரிப்புக்கு பின்னாடி இத்தனை கஷ்டமா?” இந்த நபர் யார் தெரியுமா?
சென்னை: சோசியல் மீடியாவில் தினமும் நம்ம கண்ணில் படுற பல மீம்ஸ்களிலும் காமெடி வீடியோக்களிலும், ஒரு இளைஞன் டீ கப் பிடிச்சு சிரிக்கிற மாதிரி ஒரு காட்சி அடிக்கடி வரும். சில சமயம் கை சுட்ற மாதிரி நடிச்சு, உடனே குபீர்னு சிரிக்கிற அந்த வீடியோவை பார்த்து நாம சிரிச்சு கடந்து போயிருப்போம். ஆனா அந்த சிரிப்புக்குப் பின்னாடி இருக்குற வாழ்க்கை கதையை தெரிஞ்சுக்கிட்டா, கொஞ்சம் நெஞ்சே கனக்கும்.

சோசியல் மீடியா பிரபலம்
அந்த வீடியோவில் இருக்குற இளைஞனோட நிஜ பேர் அருண்குமார். தெலுங்கானாவை சேர்ந்தவர். இப்போ சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கானவர்களை சிரிக்க வைக்குற ஒரு முகமா மாறி இருக்கிறார். ஆனா இந்த பிரபலத்துக்கு பின்னாடி, ஒரு சாதாரண கிராமத்து பையனோட கஷ்டமான வாழ்க்கை மறைஞ்சு இருக்கு.
வாழ்க்கையை மாற்றிய லாரி டிரைவர்
அருண்குமார் படிச்சது நான்காம் வகுப்பு வரைக்கும் தான். குடும்ப சூழ்நிலை சரியில்லாத காரணத்தால, படிப்பை விட்டுட்டு ஒரு லாரி டிரைவரிடம் கிளீனர் வேலைக்கு போயிருக்கார். அப்போ அவரோட டிரைவர் நேரு, "படிப்பு தான் வாழ்க்கைக்கு அடிப்படை"ன்னு சொல்லி, அருண்குமாரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியிருக்கார். அருண்குமார் தான் முதல்ல "வேண்டாம்"ன்னு சொன்னாராம். ஆனா நேரு பிடிவாதமா, "படிக்கணும்"ன்னு சொல்லி, பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்திருக்கார்.
அந்த ஒரு மனிதர் காட்டிய அக்கறை தான், இன்றைக்கு அருண்குமாருக்கு வாழ்க்கையில பெரிய திருப்புமுனையா மாறி இருக்கிறது. "அன்னிக்கு அவர் படிக்க வச்சது தான், இன்னைக்கு எனக்கு தைரியமா யூடியூப் சேனல் தொடங்குற அளவுக்கு தன்னம்பிக்கை தந்துச்சு"ன்னு அருண்குமார் ஒரு பேட்டியில் உருக்கமாக சொல்கிறார்.
வைரல் வீடியோ பின்னணி
லாரி டிரைவர் ஒரு நாள் சொல்லிய ஒரு ஜோக்குக்கு, அருண்குமார் சிரிச்ச அந்த இயல்பான சிரிப்பை வீடியோவா பதிவு பண்ணி, அதை சோசியல் மீடியாவில் போட்டதுதான் இன்றைக்கு மீம்ஸ்களாக, ரீல்ஸ்களாக உலகம் முழுக்க பரவி இருக்கு. அந்த சிரிப்பு இப்போ பலருக்கு 'ரியாக்ஷன் வீடியோ' மாதிரி மாறி, கோடிக்கணக்கான பேரை சிரிக்க வைக்குது.
வாழ்க்கையை மாற்றிய தருணம்
இன்றைக்கு அருண்குமார் தெலுங்கு சோசியல் மீடியாவில் ஒரு பிரபல முகம். மில்லியன் கணக்கான பேர் அவரை பின்தொடர்றாங்க. அடிக்கடி மீம்ஸ் வீடியோக்கள், காமெடி கண்டெண்ட் போட்டு வர்றார். சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் கெஸ்ட் ஆக கூப்பிடப்படுற அளவுக்கு, அவரோட வாழ்க்கை முழுக்க மாறி இருக்கு.
ஆனா இந்த எல்லா வெளிச்சத்துக்குப் பின்னாடியும், ஒருகாலத்தில் லாரி கிளீனராக வேலை பார்த்த ஒரு பையனோட வலி, வறுமை, போராட்டம் எல்லாம் மறைஞ்சு தான் இருக்கு. நாம சிரிச்சு கடந்து போற அந்த ஒரு வீடியோ, ஒருத்தனோட வாழ்க்கையை மாற்றிய திருப்புமுனைன்னு நினைச்சா, சோசியல் மீடியா சில நேரங்களில் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வருது என்பதையும் புரிஞ்சுக்க முடியும்.
இந்த கதையில இருந்து தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, சிரிப்புக்குப் பின்னாடி எல்லாருக்கும் சந்தோஷம் தான் இருக்கும்னு இல்ல.சில சிரிப்புகள், வாழ்க்கையோட சுமையைக் கூட மறைச்சு வச்சிருக்கலாம். அதே நேரத்தில் சோசியல் மீடியா மூலம் சிலருடைய வாழ்க்கையும் எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications