சாலமன் பாப்பையாவை உருவாக்கிய ரூ2.50 ! வாழ்க்கையை மாற்றிய கதை! இது பலருக்கு பாடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவினால் 90 வயதில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி காலமான செய்தி அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சமயத்தில் அவர் பேசிய பழைய பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சாலமன் பாப்பையா வாழ்க்கையில் 2 ரூபாய் 50 பைசா எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் பேசியது கேட்பவர்களுக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்கிறது.

இப்போ சாலமன் பாப்பையா என்ற பெயரை கேட்டாலே பட்டிமன்ற பேச்சாளர், மதுரை தமிழ், நகைச்சுவை, இலக்கியம் என்று நிறைய விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால் இத்தனை பெரிய பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தது ஒரு பெரிய வசதியான குடும்பம் கிடையாது. வெறும் ரூ 2.50 தானாம். படிப்புக்காக அந்த சின்ன தொகையை சமாளிப்பது அப்போது அவருடைய குடும்பத்திற்கு பெரிய சவாலாக இருந்திருக்கிறது.

Solomon Pappaiya

சாலமன் பாப்பையா குடும்பம்

சாலமன் பாப்பையா 12 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் 9வது பிறந்தவர். குடும்பத்தில் பொருளாதார வசதி அதிகம் இல்லாமல் வாழ்க்கையே கஷ்டமாக இருந்த காலம். இப்போது இருக்கிற காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தையை படிக்க வைக்கவே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இருக்கு. இதே கஷ்டம்தான் அந்தக் காலத்தில் இருந்து இருக்கிறது. ஆனால் இப்போ நாம லட்சக்கணக்கில் ஸ்கூல் பீஸ் கட்டினால் அப்போது 2. 50 ரூபாய் தான் ஸ்கூல் பீஸ் ஆக இருந்திருக்கிறது. அது அந்த நேரத்தில் பெரிய தொகை.

ஆரம்பகால கஷ்டம்

அதிலும் 12 பேர் ஒரு வீட்டில் இருந்தால் அந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகள் கூட எவ்வளவு கஷ்டம் என்று நமக்கே புரியும். அப்படி அவர் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த சமயத்தில் அவருடைய படிப்புக்கு உதவி செய்தது நண்பர்களும், சுற்றி இருந்தவர்களும் தான் என்று சாலமன் பாப்பையா அந்த வீடியோவில் நன்றி சொல்லி இருந்தார். அதுபோல அவர் இவ்வளவு படித்து அறிவார்ந்தவராக இருந்ததற்கு காரணம் அவரை நண்பர்கள் ஒதுக்கி வைத்ததும் என்று சொல்லி இருக்கிறார்.

நண்பர்கள் ஒதுக்கி வைப்பு

அதாவது அவர் ரொம்பவும் ஒல்லியாக இருப்பாராம். அதனாலயே அவருடைய நண்பர்கள் நீ எங்க கூட விளையாட வரவேண்டாம் கீழே விழுந்துடுவ என்று இவரை விளையாட்டு சேர்க்க மாட்டார்களாம். அதனால் ஒதுங்கி போய் உட்கார்ந்து இருப்பாராம். ஒரு கட்டத்தில் சும்மாதான உட்கார்ந்திருக்கிறோம் படித்துக்கொணடே இருப்போம் என்று புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கி இருக்கிறார். இப்ப இருக்கிற மாதிரி அப்போது சோசியல் மீடியா பயன்பாடு அல்லது வேற பொழுது போக்குகளோ எதுவும் இல்லாமல் இருந்ததால் அவர் படித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

படிப்பால் கிடைத்த வெற்றி

ஸ்கூல், காலேஜ் படிப்பை முடித்த பிறகு மதுரை அமெரிக்க கல்லூரியில் தமிழ் துறையில் பேராசிரியராக வேலை பார்த்திருக்கிறார். அங்கே ஒரு மாணவராக இருந்த வாழ்க்கை பின்னர் அதே கல்லூரியில் ஆசிரியராக உயரும் அளவுக்கு சென்று இருக்கிறது. அதற்கு பிறகு பட்டிமன்ற மேடை அவருக்கு இன்னொரு உலகமாக மாறியது. தமிழை பெரிய பெரிய வார்த்தைகளில் பேசாமல் நம்ம வீட்டில் உட்கார்ந்து ஒரு பெரியவர் கதை சொல்வது மாதிரியே பேசினார்.

சாலமன் பாப்பையாவின் திறமை

அதனால் தான் திருக்குறள், சங்க இலக்கியம், குடும்ப உறவு என்று அவர் எடுத்துச் சொன்ன விஷயங்கள் எல்லாம் சாதாரண மக்களுக்கும் நெருக்கமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் பட்டிமன்றம் என்றாலே பாப்பையா இருக்கிறாரா? என்று கேட்கும் அளவுக்கு அவருடைய பெயர் அந்த மேடையோடு இணைந்து விட்டது. படிப்பதற்கு ரூ2.50 கூட சவாலாக இருந்த அந்த மனிதருக்கு பல வருஷங்களுக்கு பிறகு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.

வாழ்க்கையில் ஆரம்பத்தில் நமக்கு கிடைக்காத வாய்ப்புகள் சில நேரங்களில் நம்மை உடைத்துவிடும். ஆனால் சாலமன் பாப்பையாவின் வாழ்க்கை இன்னொரு விஷயத்தை சொல்கிறது. வாய்ப்பு கிடைத்த போது அதை பிடித்துக் கொண்டு ஓட தெரிந்தால் ஒருநாள் நம்முடைய பெயரை அந்த வாய்ப்புக்கு அடையாளம் ஆகிவிடும் என்று அவர் நிரூபித்திருக்கிறார்.

இன்று 90 வயதில் இந்த உலகத்தை விட்டு அவர் பிரிந்து இருந்தாலும் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அவருடைய பேச்சும் அவர் எடுத்துச் சொன்ன தகவல்களும் பலருக்கும் பயன்பட்டு கொண்டே இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+