“இது நடிப்பு மேடம்” லாரன்ஸ் அப்படீன்னு வெளியான போட்டோ அத்தனையும் பொய்யா? புது ட்விஸ்டு!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் "மேடம் இது நடிப்பு மேடம்" என்ற டயலாக் மூலம் சமீபத்தில் இணையத்தில் அதிகமாக மீம்ஸ்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கும் லாரன்ஸ் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் சில தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் ஒருவர் வேலை செய்து கொண்டிருப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி இதுதான் லாரன்ஸ் என்று பலர் கூறி வந்தனர்.
ஆனால் அந்த நபர் நான் லாரன்ஸ் கிடையாது. என்னுடைய போட்டோ எப்படி இப்படி ட்ரெண்ட் ஆச்சுன்னு தெரியாது என்று பிரபல சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்து அதிகமான ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது அது குறித்து அதிகமானோர் கலாய்த்து கொண்டும் இருப்பர். அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்துக்கள் உண்மையானதா? அல்லது இது கண்டன்ட் படி நடித்துக் கொண்டிருக்கிறார்களா என்பது பலருடைய கேள்வியாக இருக்கும்..
ஆனால் இந்த நிகழ்ச்சியில் குடும்ப சண்டை, காதல் தோல்வி, விவாகரத்து, உறவினர்களின் சண்டை, அடிதடி போன்ற பல பிரச்சனையில் வருபவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் நல்ல படியாக தான் போய்க் கொண்டிருந்தது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பல பரபரப்பான சம்பவங்களும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது.

அதிலும் சில வருடங்களுக்கு முன்பு லாரன்ஸ் என்கிற ஒரு நபர் தன்னுடைய மனைவியை தன்னோடு சேர்த்து வைக்கும்படி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசிய வீடியோ பல வருடம் கழித்து இப்போது சில மாதங்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபர் "மேடம் இது நடிப்பு மேடம்..., மேடம் இது ஆக்சன் மேடம்" என்று மேடம் என்று சொல்லியே அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்.
அதோடு அந்த நிகழ்ச்சியில் சில சம்பவங்களை நடித்தும் காட்டி இருப்பார். இந்த வீடியோ மற்றும் அவருடைய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானதை தொடர்ந்து அவர் யார் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக சில சேனல் தரப்பினர் அவர் வேலை பார்த்து வந்த கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று விசாரித்து இருந்தனர்.

அப்போது அவரோடு வேலை பார்த்தவர்கள் கொரோனா காலகட்டத்திற்கு முன்பே லாரன்ஸ் இங்கு வேலை பார்த்தார். அதற்குப் பிறகு எங்கே போனார் என்று தெரியவில்லை. அவருடைய வீட்டிற்கு அதிகமாக போக மாட்டார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பிறகு இங்கே தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது சில வருடங்களாக அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை..
ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால், இங்கே அவர் வந்து இருப்பார் என்றும் பேசியிருந்தனர். இதனால் அப்போ லாரன்ஸ் உயிரோடு இல்லையா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான நிலையில் ஒரு புகைப்படம் ஒன்றும் வெளியானது. அது லாரன்ஸ் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆரம்பத்தில் வேலை பார்க்கும் போது எடுத்த புகைப்படம் என்று கூறப்பட்டது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் ஒரு youtube சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் நான் லாரன்ஸ் எல்லாம் கிடையாது. என்னுடைய போட்டோவை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் நான் தான் அந்த நபர் என்று சொல்லி பலர் என்னிடம் விசாரிக்கிறார்கள். இதனால் என்னுடைய வீட்டில் பிரச்சனை வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். அதில் நான் அவன் இல்லை என்கிற பாணியில் இவர் பேசுகிறார் என்று சொல்கின்றார்கள். அதுபோல இன்னும் ஒரு சிலர் இவரை பார்க்கும்போது அப்படியே லாரன்ஸ் போல தான் இருக்கிறார் என்றும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

காரணம் அந்த வீடியோவில் இருக்கும் நபர் தான் இப்போது வேலை பார்த்து வரும் மார்க்கெட்டில் 5 வருடமாக வேலை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த லாரன்ஸின் நண்பர்களும் இங்கே லாரன்ஸ் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் இங்கே வரவில்லை என்று சொல்லி இருக்கும் நிலையில் வீடியோவில் இருக்கும் நபர் கொடுத்த விளக்கத்தை வைத்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் எதற்காக அந்த நபர் இப்போ நான் அவன் இல்லை என்று சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை இப்போது இவர் நல்ல வாழ்க்கையில் இருப்பதால் பழைய பெயரை தனக்கு வைத்துக் கொள்ள விரும்பாமல் இப்படி பேசுகிறாரா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். எது எப்படியோ உண்மை என்ன என்பது புரிய முடியவில்லை என்று ரசிகர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications