லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் புது நிகழ்ச்சி.. இதுவும் சொல்வதெல்லாம் உண்மையா? குடும்ப பஞ்சாயத்து தொடக்கம்
சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிமுகமே தேவை இல்லை. நடிகை, வசனகர்த்தா, இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் என்று பல திறமைகள் வைத்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். சில வருடங்கள் இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் சின்னத்திரையில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் எந்த சேனல் எந்த நிகழ்ச்சி என்று விரிவாக பார்க்கலாம்.
சினிமாத்துறையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு என்று தனி அடையாளம் இருக்கிறது. எந்த திரைப்படங்களிலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார். நடிகையாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கடந்த 2008 ஆம் ஆண்டில் மலையாள நாடகத்தில் நடித்திருந்தார்.

பிரபலமான நிகழ்ச்சி
அதைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி 1500 எபிசோடுகளை இவர்தான் தொகுத்து வழங்கி இருந்தார். அதுபோல 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் இயக்குனரான அறிமுகமானார் இந்த திரைப்படம் உளநோய் தொடர்பாக கதை அமைந்திருந்ததால் பெரிய அளவில் பாராட்டு வாங்கியது.
சந்தித்த பிரச்சனை
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பலருடைய குடும்ப பிரச்சனைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் தலையிட்டு அவர்களுக்கு உரிய உதவிசெய்திருந்தார். இது அதிகமாக ட்ரோல்களையும் சந்தித்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் பலர் தங்களுடைய குடும்பப் பிரச்சனைகளை பேசி அதற்கு நியாயம் வாங்குவதற்காக வந்திருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே எங்களுக்கு பெரிய பிரச்சனை ஆகிவிட்டது என்று கூட சிலர் பேசியிருந்தனர்.
ட்ரோல் மெட்டீரியல்
அதனால் இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு சில வருடங்களை கடந்து விட்டாலும் இந்த எபிசோடுகள் இன்னும் சோசியல் மீடியாக்களில் அதிகமாக டிரண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் ட்ரோல் மெட்டீரியலாக மாறி இருக்கிறார்கள். இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி
ஆனால் இந்த முறை ஜீ தமிழ் இல்லை, கலைஞர் டிவியில் தான். கலைஞர் டிவியில் செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போலவே வாழ்ந்து காட்டலாம் என்ற தலைப்பில் நடிகை குயிலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தான் இனி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் சேனல் தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை.

ரசிகர்களின் கேள்விகள்
ஆனாலும் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் உங்களுடைய குடும்பப் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் இந்த நம்பரில் பகிரலாம் என்று ஒரு நம்பர் கலைஞர் டிவியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் குயிலிக்கு பதிலாக இனி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாரா? அல்லது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகிறதா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications