என் குடும்பத்தை பற்றி சிலர் கற்பனை கதைகள் உருவாக்குகிறார்கள்! அவர்களுக்கு என் பதில் இதுதான்! விஜய் மகன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் இடையே விவாகரத்து பிரச்சனை சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. அதே நேரத்தில் அவர் மகன் இயக்கிய சிக்மா படத்தின் ப்ரோமோஷனில் விஜய் பற்றி பேசுவாரா? என்ன பேசுவார்? என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் விஜய் பற்றிய சர்ச்சைக்கு எல்லாம் அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

விஜய் மகன் பேட்டி

சமீபத்தில் பேட்டியில் ஜேசன் சஞ்சயிடம், உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் இணையத்தில் வரும் கருத்துக்களை படிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய படம் பற்றியோ அல்லது குடும்பத்தை பற்றியோ இணையத்தில் வரும் கமெண்ட்களை நான் படிப்பேன். அதில் என்னுடைய படைப்பை இன்னும் சிறப்பாக்கும் வகையில் இருக்கும் நல்ல விமர்சனங்கள், ஆக்கபூர்வமான கருத்துக்கள் இருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்.

ஏனென்றால் நாம உருவாக்குற கலை படைப்புகள் மக்களுக்காக தான். அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் என்னை தெரியாமல் சிலர் கற்பனையாக நிறைய கதைகளையும், ஒரு இமேஜையும் உருவாக்குகிறார்கள். அது நம்ம கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம். அதுக்காக நான் செயற்கையாக வேறு ஒரு இமேஜை உருவாக்கவோ, யாரையும் திருப்திப்படுத்துவதற்காக வேற மாதிரி நடிக்கவோ விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பொறுப்புணர்வு

அதோடு நான் உண்மையாகவும், நானாகவும் இருந்தால் அதை மக்கள் கண்டிப்பாக உணர்வார்கள். உண்மைக்கு எப்போதுமே தனி மதிப்பு இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே சில மாதங்களாகவே விஜய் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார், குழந்தைகள் விஷயத்தில் அவர் தலையிடுவதே இல்லை, பிள்ளைகள் எல்லோருமே அம்மா பக்கம் போய் விட்டார்கள் என்று பல வதந்திகள் பரவி வந்தது. அதற்கும் பதில் கொடுக்கும் வகையில் சஞ்சய் பேசி இருக்கிறார்.

Jason Sanjay Vijay Trisha

விஜய் பற்றிய வதந்திக்கு பதிலடி

எங்கள் குடும்பத்திற்காக மக்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது நான் ரொம்ப பாக்கியசாலி என்று உணர்கிறேன். அந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் தகுந்த மாதிரி வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று சஞ்சய் கூறியிருக்கிறார். அதோடு என்னுடைய அப்பா நான் சினிமாவுக்கு வருகிறேன் என்று சொன்னதும், நீ என்ன செய்யணும்னு நீயே முடிவு பண்ணு.. எந்த உதவி வேண்டுமானாலும் நான் இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தை தொடங்கிட்டா அதில் முழு அர்ப்பணிப்புடன் இரு என்று அட்வைஸ் பண்ணினாரு என்று சஞ்சய் கூறி இருக்கிறார்.

விஜய் மகன் பெருமை

அதுபோல நான் சினிமாவுக்கு வந்த காரணம் அப்பாவை காப்பி பண்ணனும், அவரை விட பெரிய ஆளாகணும் அல்லது அப்பாவின் பெயரிலேயே வாழனும் என்பதற்காக நான் வரவில்லை. எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கணும் என்பதற்காக தான் இந்த துறைக்கு வந்தேன் என்று அவர் போல்டாகவே பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் அரசியல் வெற்றி பெற்ற அவர் பேசும்போது, அப்பாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி எங்கள் குடும்பத்திற்கு பெருமை.

அப்பாவின் வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை மட்டும் கொடுக்கவில்லை அதே நேரத்தில் அதிக பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. மக்கள் அப்பா மீது வைத்திருக்கும் மரியாதையை பார்த்த பிறகு நாங்களும் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு வந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஜோசப் சஞ்சய் சிக்மா படத்தின் ப்ரோமோஷனில் என்ன பேசுவார்? விஜய் பற்றி பேசுவாரா? இல்லையா என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்போது அப்பாவை பற்றி அவர் பெருமையாக பேச அதை விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் அதிகமாக ஷேர் செய்து சஞ்சய்யை பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+