கீழே போட்டு இருப்பது என்னது ட்ரெஸ்ஸா.. நாங்க வேற மாதிரி நினைத்தோம்.. கலக்கல் கேபி!
சென்னை: மஞ்சள் உடையில் மங்களகரமாக வெளியே கிளம்பியிருக்கும் கேப்ரில்லாவை வம்பிழுக்கும் ரசிகர்களின் கூட்டம் இன்ஸ்டாகிராமில் அலைமோதுகிறது.
ரசிகர்கள் அந்த மாதிரி கலாய்ப்பதற்கு கேப்ரில்லாவின் உடையும் ஒரு காரணம்தான் . அந்த அளவிற்கு உடையில் கண்ணாமூச்சி காட்டியிருக்கிறார்.
அடடா. ..அழகில்தான் இவர் வேற ரகம் என்று நினைத்திருந்தால், தற்போது உடையை தேர்ந்தெடுப்பதிலும் சும்மா கலக்கி விட்டாரே என்று கவிதை பாடும் ரசிகர்கள் சுற்றி சுற்றி வருகின்றனர்.

அது என்ன டிரஸாயிருக்கும்??
தோளில் பேக் போட்டு கொண்டு கலக்கலான உடையோடு வெளியே கிளம்பிய கேப்ரில்லா தன் அழகை தான் மட்டும் பார்த்தால் போதாது என்று தன்னுடைய ரசிகர்களுக்காக ஒரு சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். வெளியே செல்லும் நேரத்திலும் இவருடைய க்யூட்டான அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதுவும் இவருடைய லேட்டஸ்ட் உடையை பார்த்து தான் பல பேரின் கண்கள் அதையே சுற்றி வருகிறதாம். இது என்ன மாதிரி உடை என்றே புரியவில்லை. புரியாமல் பலர் தவிர்த்து வந்தாலும் இதுவும் வேற லெவல் தான் என்று கொஞ்ச தவறவில்லை.

சினிமாவைத் தாண்டி ரசிகர்கள்
என்னதான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அதையெல்லாம் தாண்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தான். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இவர் போடும் போஸ்ட்களை பார்ப்பதற்காகவே பலபேர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்து தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதுவும் யாருக்கும் கிடைக்காத ஆதரவு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு இவருடைய ரசிகர்கள் கொடுத்து வந்தனர்.

ரசிகர்களுக்கு கொஞ்சம் கோபம் தான்
ரசிகர்களின் ஆதரவினால் இந்த வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இவர் இருந்தாலும் ரசிகர்களை ஷாக் கொடுக்கிற வகையில் திடீரென்று 5 லட்சம் பரிசுத் தொகையை பெற்றுவிட்டு நிகழ்ச்சியை முழுவதும் முடிக்காமல் வெளியேறிவிட்டார். அதனால் சில ரசிகர்கள் மீது செம காண்டில் இருந்தனர். இதுவரைக்கும் இவருக்காக ஆதரவு கொடுத்து வந்த நிலையில் திடீரென்று இவர் இப்படி செய்துவிட்டாரே என்றுதான் பலர் புலம்பி கொண்டு இருந்தனர். ஆனால் இவர் வெளியே வந்த பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் போஸ்ட் போட்டு ரசிகரை கூல் செய்து விட்டார். அதனால் அவர் மீது இருந்த கோபங்கள் எல்லாம் பனி போல மறைந்து விட்டதாம்.

டான்ஸ் மட்டும் போதும்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அஜித்துடன் டான்ஸ் ஆடி தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்து வருகிறார். இவர் ஏற்கனவே ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு இருந்தாலும் தற்போது இவரும் சேர்ந்து டான்ஸில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். கேப்ரில்லா சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சைடு ரோலில் நடித்துக் கொண்டிருந்தார்.

அசத்தும் மஞ்சகலரு
தற்போது சூட்டிங்கிலும் பிஸியாக தான் இருந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் கிடைக்கும் நேரங்களில் ஷாப்பிங் செஞ்சு வருவது இவருடைய ஹாபிட்டாக இருக்கிறதாம். அந்த மாதிரி தான் தற்போது ஷாப்பிங் கிளம்பும் இவர் அப்படி, இப்படி போஸ் கொடுத்து ஒருசில போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுவிட்டார். இவர் போஸ்ட் போட்டதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் செம குஷியில் கொண்டாடி வருகின்றனர். எப்போதுமே இவருடைய போஸ்டுக்கு லைக்களையும் கமெண்டுகளையும் குவித்தாலும் தற்போதைய இவருடைய போட்டோவில் பலருக்கு கவிதைகள் நடனம் ஆடுது. அதுவும் மஞ்சள் கலரில் இவர் உடுத்தியிருக்கும் உடையை பார்த்து இது டிரஸ் தானா?? இல்லை டவலா!! என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறதாம். எப்படியோ ஒரு டிரஸ் போட்டு இருக்கிறாரே என்று சந்தோஷப்படாமல் இப்படியா சந்தேகங்களை கொட்டுவார்கள்!!!
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications