இப்போ கூட அப்பா இதைத்தான் சொன்னாரு.. அம்மாவுக்கும் சந்தோசம் தான்! விஜய் பற்றி மகன் ஜேசன் சஞ்சய் பெருமிதம்
சென்னை: முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் ஜேசன் சஞ்சய் அளித்த பேட்டிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுவரை விஜய் பற்றி பெரிதாக பொதுவெளியில் பேசாத ஜேசன் தற்போது தனது முதல் படமான சிக்மா படத்தின் ப்ரோமோஷனில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய அப்பா தனக்கு கொடுத்த அட்வைஸ் மற்றும் அம்மாவின் சப்போர்ட் போன்றவற்றையும் அவர் ஓபனாக பேசியிருக்கிறார்.
விஜய் மகன் பேட்டி
சமீபத்திய பேட்டியில் ஜேசன் சஞ்சய் பேசும்போது, நான் சினிமாவுக்கு வரப் போகிறேன் என்று சொன்னபோது அப்பா எந்த ஒரு வேலை செய்தாலும் சரி ஆனால் அதற்கு முழு முயற்சிகளையும் எடுக்க வேண்டும், உன்னுடைய முழு உழைப்பையும் அதற்காகவே போட வேண்டும் அந்த ஒழுக்கம் தான் முக்கியம் என்று அட்வைஸ் செய்தார். சமீபத்தில் கூட என்னிடம் உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு என்று சொன்னாரு.
ஆனால் அதோடு இன்னொரு விஷயத்தையும் சொன்னாரு, நான் எதையும் உன்னிடம் திணிக்க மாட்டேன் மாட்டேன். உனக்கு என்ன தேவை என்று நீயே சொல்லணும். ஏன்னா உனக்கு என்ன வேணும் என்ன வேண்டாம் என்று உனக்குத்தான் சரியாக தெரியும் என்று சொன்னாரு. இந்த வார்த்தைகள் தான் இன்று வரை எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

அம்மாவின் சப்போர்ட்
மேலும் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசும்போது, நான் சினிமாவிற்கு போகப்போகிறேன் என்று அம்மாவிடம் சொன்னபோது அவங்களும் எனக்கு மோட்டிவேஷன் தான் பண்ணுனாங்க. நீ எது செஞ்சாலும் பெஸ்ட்டாக செய்வாய் என்று சொல்லுவாங்க. எனக்கு என்னுடைய தங்கச்சியும் முழு சப்போர்ட். ஆரம்பத்தில் நாங்க ஒன்றாக இருக்கும்போது அடிக்கடி சண்டை போடுவோம். இப்போ என்னோட பெஸ்ட் பிரண்டுக்கு மேல அவ தான். எல்லா விஷயத்தையும் என் தங்கச்சி கிட்ட ஷேர் பண்ணுவேன்.
என்னோட தங்கச்சி ஒரு சினிமா விரும்பி. அதனால நான் என் படத்தின் கதையை கூட முதலில் அவளிடம் தான் சொன்னேன் என்று தன்னுடைய தங்கை பற்றியும் பேசி இருக்கிறார். அதுபோல ஜேசன் சஞ்சய் விஜயின் மகன் என்பதால் அவர் நடிகராக அறிமுகமாகவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் தன்னுடைய தாத்தா போல கேமரா முன்பு நிற்பதை விட கேமராவுக்கு பின்னால் இருந்து கதைகளை சொல்ல வேண்டும் என்பதையே தேர்வு செய்து இருக்கிறார்.
தங்கச்சி பாசம்
அதோடு தான் சினிமாவிற்கு வந்த விஷயத்தைப் பற்றி ஜேசன் பேசும்போது, நான் சினிமாவுக்கு வந்தது அப்பாவை காப்பி பண்ணவோ, அவரை விட பெரிய ஆளாகணும் என்றோ அல்லது விஜய்யின் மகன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவோ நான் சினிமாவுக்கு வரல. எனக்கான வேலையை நான் செய்யணும், இப்போதைக்கு எனக்கு சினிமா பிடிச்சிருக்கு. அதனால அதில் முழு கவனம் செலுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய அப்பாவின் அரசியல் வெற்றி பற்றி பேசும்போது, அப்பாவின் வரலாற்று வெற்றி எங்க குடும்பத்திற்கே பெருமையை கொடுத்திருக்கிறது. அப்பாவிற்கு மக்கள் கொடுக்கும் அன்பையும், ஆதரவையும் பார்க்கும்போது எங்களுக்கும் அதிகமான பொறுப்புகள் இருக்கிறது. பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு புரிகிறது என்றும் அந்த பேட்டியில் அவர் பேசியிருக்கிறார். சஞ்சய் எப்போது பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அவர் இவ்வளவு மெச்சூராக பேசுவது ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
