அழகன் அஸ்வினுக்கு ஆறுதலாக பிரபல இசை நிறுவனம்..வாழ்த்தும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஸ்வின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தற்போது சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இந்த செய்தி அஸ்வினுக்கும் ஆருதல் கொடுக்கும் விதமாக தான் இருக்கிறது.

இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய பேரும் புகழையும் ஒரு நாள் பேச்சில் பறக்க விட்டு விட்டாரே என்று ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வருகின்றனர்.

ஆறுதலான செய்தி

ஆறுதலான செய்தி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்று, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் ஆல்பம் சாங்கு களை வெளியிட்டு தன் கியூட்டான சிரிப்பாலும், அழகாலும் பெரும்பான்மை பெண் ரசிகைகளை கவர்ந்து ஜெட் வேகத்தில் புகழின் உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்த அஸ்வின்... எங்கேயோ போகின்ற ஓணானை எடுத்து வேட்டியில் உட்ட கதையாக.. ஓபனா பேசுகிறேன் என்று உளறிக் கொட்டி சென்ற வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் பெரிய அளவிலான விமர்சனங்களை எதிர்கொண்டர். அவருக்கு பிரபல சோனி மியூசிக் நிறுவனம் ஷேர் செய்துள்ள செய்தி கொஞ்சம் ஆறுதலாக இருக்கலாம்.

உளறிய வார்த்தைகள்

உளறிய வார்த்தைகள்

குட்டி குட்டி கேரக்டரில் நடித்தாலும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்த அஸ்வினின் சினிமா கேரியர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு செம ஸ்பீடில் முன்னேறி வந்தது. ஒருவருக்கு நேரமும் ராசியும் நன்றாக இருந்தால் அவர் தொட்டதெல்லாம் துலங்கும் என்பதுபோல், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு போகிற போக்கில் ஒரு ஆல்பம் சாங் போட்டால் கூட அஸ்வினுக்காகவே அந்த ஆல்பம் சாங்குகள் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதனால் பல இயக்குனர்கள் இவரை தேடி சென்று படங்களிலும் புக் செய்ய முயற்சித்து வந்தனர் .அப்படி கமிட்டாகி நன்றாக படப்பிடிப்பும் முடிவடைந்து சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடத்தப் பட்ட ஒரு படம்தான் என்ன சொல்லப் போகிறாய்.

 காண்டான நெட்டிசன்கள்

காண்டான நெட்டிசன்கள்

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வினை மேடையில் என்ன சொல்ல போகிறாய் என்று முதலிலேயே கேட்டு ட்ரெயினிங் கொடுத்து இருக்க வேண்டும். முன்னேற்பாடாக அப்படிக் கேட்காத விளைவை படக்குழுவினர் தற்போது அனுபவித்து வருகின்றனர். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது மேடை ஏறிய அஸ்வின் சமூக வலைதளங்களில் தனக்கிருக்கும் ரசிகர்களின் ஆதரவை மனதில் வைத்துக்கொண்டு கொஞ்சம் மமதையுடன் 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கி விட்டதாகவும், தான் அழகாக இருப்பதாகவும் சுய விளம்பரம் செய்தார் அஸ்வினின் நல்ல ஆட்டிட்யூட் க்கு அவருக்கு சப்போர்ட் செய்து வந்த இனையவாசிகள் இம்மாதிரியான போக்கை ஆதரிப்பார்களா..!? என்ன? சும்மா வெச்சு செய்து விட்டனர்.

செம ஹிட்

செம ஹிட்

அஸ்வின் இதற்கென்று தனியாக வீடியோ போட்டு வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு நெட்டிசன்கள் சிறப்பான சம்பவங்கள் பல செய்துவிட்டனர். பட வெளியீட்டு தேதியை படக்குழுவினர் மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு ஆகிவிட்டது. இதனால் பெருமளவு அப்செட்டில் இருக்கும் அஸ்வினுக்கு அவருடைய 'யாத்தே.. யாத்தே..'ஆல்பம் சாங் பிரபல சோனி நிறுவனத்தின் ரில்ஸ் சேலஞ்ச் இல் லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்டுகளைப் பெற்றுள்ளது குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தி கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+