Maman vs DD Next level 1st day box office: சூரியின் மாமனை முந்தினாரா சந்தானம்? முதலிடம் யாருக்கு? வெளியான தகவல்
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் உருவான மாமன் திரைப்படமும், நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமா நேற்று மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படங்களில் எந்த திரைப்படம் முதல் நாள் அதிக வசூல் பெற்று இருக்கிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
சம்மர் விடுமுறை விட்டு குழந்தைகள் எல்லாரும் வீட்டில் அட்டகாசம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுப்பதற்காகவே இரண்டு படங்கள் நேற்று வெளியாகியிருக்கிறது. அதிலும் குழந்தைகள் விரும்பும் வகையில் பேய் கதையில் சந்தானம் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் பெற்றோர்கள் விரும்பும் செண்டிமெண்ட் கதையில் நடிகர் சூரி நடித்திருக்கிறார். ஆனால் நேற்று நடிகர் சூரி, சந்தானம், யோகி பாபு ஆகிய மூன்று நகைச்சுவை நடிகர்களின் திரைப்படங்களும் வெளியாக இருந்தது. ஆனால் யோகி பாபுவின் படம் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறது. இதனால் மாமன் படமும், டிடி நெஸ்ட் லெவல் திரைப்படம் மட்டும் நேற்று வெளியாகி இருக்கிறது.

சூரியின் மாமன் திரைப்படம்
கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்து வெற்றி கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். அதுபோல ராஜ்கிரண், பால சரவணன், ஸ்வாதிஹா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு கதை எழுதி இயக்கியது பிரசாந்த் பாண்டியராஜ். திரைப்படம் வெளியான நாளில் பலதிறை அறங்குகளுக்கு சூரி திடீர் விசிட் அடித்தார்.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்
அதுபோல டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும் காமெடி, காதல், செண்டிமெண்ட் திகில் எல்லாம் கலந்த கலவையாக உருவாகி இருக்கிறது. தில்லுக்கு துட்டு படம் ஹிட்டான பிறகு சந்தானம் தொடர்ச்சியாக காமெடி ஹரார் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் இயக்குனர் கௌதம் வாசுமேனன், மொட்ட ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் அனைவரையும் திகிலோடு சேர்ந்து சிரிக்கவும் வைத்திருக்கிறது.

மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல் வசூல்
அதே நேரத்தில் சந்தானம் நடித்து ஆர்யா தயாரித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் சுமார் 2.54 கோடி வசூலும், நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் முதல் நாள் 1.53 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாமன் திரைப்படத்தின் கதையில் முதல் பாகம் விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாவது பாகத்தில் சில சோர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வசூலில் முன்னணி
அதே நேரத்தில் டிடி நெஸ்ட் லெவல் திரைப்படத்தில் முதல் பாகம் டல்லாக போனாலும் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் போய்க்கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. முதல் நாள் நிலவரத்தில் மாமன் திரைப்படத்தை விட டிடி நெக்ஸ்ட் லெவல் முன்னணியில் இருந்தாலும் வார இறுதி நாளான இன்றும், நாளையும் எந்த திரைப்படம் அதிக வசூல் பெற போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications