ரெக்கார்டிங்கிற்கு வராத இளையராஜா! சிச்சுவேஷன் தெரியாததால் சோக பாட்டை சிரித்தபடியே பாடிய எஸ்பிபி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா இசையமைத்த ஒரு சோக பாடலை, காதல் பாட்டு என நினைத்து சிரித்தப்படியே பாடினாராம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அது எந்த பாடல் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இந்த சுவாரஸ்யமான தகவலை அவருடைய மகன் சரண், ஒரு பாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஆந்திராவை சேர்ந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திரைத்துறையினரால் பாலு என அழைக்கப்படுகிறார். அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாள படங்களில் அதிகமாக பாடியுள்ளார். 1966 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் அவர் இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

sp balasubramaniam

அவர் பாடும் நிலா என்றும் அழைக்கப்படுகிறார். ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பிறகு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. அதை அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண் பெற்றுக் கொண்டார்.

16 மொழிகளில் அதிக பாடல்களை பாடி வந்த பாடும் நிலா, கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார். புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பார். இவர் மனோவுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவர் குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவருடைய மகன் பகிர்ந்துள்ளார்.

மவுன ராகம் படத்தில் வரும் நிலாவே வா பாடலை எஸ்பிபிதான் பாடினார். அவர் ரெக்கார்டிங்கிற்கு சென்ற போது அங்கு இளையராஜா இல்லையாம். இதனால் பாட்டின் சூழலை சொல்ல முடியவில்லை. இதையடுத்து நிலாவே வா பாடல் காதல் பாட்டு என கருதி சிரித்தபடியே பாடியுள்ளார்.

பிறகு இந்த படம் வெளியான போது திரையில் பார்த்தால் அந்த பாடல் ஒரு சோகப்பாடல் என தெரியவந்தது. சோக பாட்டை சிரித்தபடியே பாடினேனே என கூறினாராம். ஆனால் அந்த பாடலில் அந்தளவுக்கு வித்தியாசம் தெரியாது. இதை படித்த பிறகு அவர் சிரித்தபடியே பாடுவதாக இருக்கும். இந்த படத்தில் ரேவதி, மோகனிடம் விவாகரத்து வேண்டும் என்பார். அதற்காக இந்த பாடல் பாடப்பட்டது.

பாடலை சிரித்தபடியே பாடிய தகவலை அவருடைய மகன் சரண், ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனர். ஹீரோக்களுக்கு தகுந்தாற்போல் குரல்களை மாற்றி பாடுவதில் எஸ்பிபி கைத்தேர்ந்தவர். ஜானகியுடன் இணைந்து நிறைய பாடல்களை பாடியுள்ளார். அது போல் இவருடைய தங்கை எஸ்.பி.ஷைலஜாவும் பாடகிதான். அவருடைய கணவர் நாடக நடிகர் சுபலோக சுதாகர் ஆவார். இவர் தென்றல் சீரியலில் நடித்துள்ளார். குருதி புனல் படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

எஸ்பிபி சரணும் ஒரு சில படங்களில் பாடியுள்ளார். மேலும் இசைக் கச்சேரிகளிலும் பாடியுள்ளார். ஆனால் அவரால் அந்த அளவுக்க சோபிக்க முடியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+