நிக்கிறதே ரவிச்சந்திரன் அப்படித்தான்.. இந்த டான்ஸ் நடிகை மீது "குட்டி எம்ஜிஆருக்கு" காதல்?: பிரபலம்
சென்னை: மூத்த நடிகர் ரவிச்சந்திரன் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றாலும், ஷீலாவுடன் காதல் முற்றிக் கொண்டே போனது. ஒரு சமயத்தில் ஷீலாவையும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.. ஷீலா கிறிஸ்டியன் என்பதால், மதம் மாறி திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு ஜார்ஜ் என்ற மகன் இருக்கிறார்.. இவரும் நடிகர்தான்.. இப்போது டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர்" என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.. அதில், மறைந்த மூத்த நடிகர் ரவிச்சந்திரன் பற்றி விலாவரியாக கூறி, அவரது பெருமைகளை பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிக்க வந்த காலகட்டத்தில், ரவிச்சந்திரனின் ஸ்டைல்தான் அவருக்கு மிகவும் பிடிக்கும்.. ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பது, உட்காருவது எல்லாமே கிட்டத்தட்ட ரவிச்சந்திரனின் சாயலில் இருக்கும்.. இதை ரஜினியே ஒருமுறை சொல்லியிருந்தார். நடிகர் மோகனுக்கு முன்பு, ரவிச்சந்திரன்தான் வெள்ளிவிழா நாயகன்..

2 பரபரப்பான நடிகர்கள்
எம்ஜிஆர், சிவாஜிக்கு நடுவில் இளமையான நடிகர்கள் 2 பேர்.. அதில் ஒருவர் ஜெய்சங்கர், மற்றொருவர் ரவிச்சந்திரன். இருவருமே பரபரப்பாக இருப்பார்கள்.. வீட்டிலேயே இருப்பதில்லை.. நீண்ட காலத்துக்கு பிஸியாக நடித்து கொண்டிருந்தார்கள். கேஆர் விஜயா சொந்த படங்களை நிறைய எடுத்தபோது, அதில் அதிகமாக நடிக்க வைத்தது ரவிச்சந்திரன், ஜெய்சங்கரைதான்.
மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்தவர் ரவிச்சந்திரன் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர்.. 8வது படித்து மலேசியாவில் படித்துவிட்டு, திருச்சியில் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கி பிஎஸ்சி வரை படித்தார்.. மகனை டாக்டராக வேண்டும் என்று அப்பா நினைத்தபோது, எதிர்பாராதவகையில், நடிகராகிவிட்டார் ரவிச்சந்திரன்.
காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஹீரோ வேண்டும் என்று விளம்பரம் வெளியாகியிருந்த சமயம், டைரக்டர் ஸ்ரீதரின் உதவியாளர் மூலம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே வெள்ளி விழா.. அதுவும் கலர் படமாகும்.
கதையை எதிர்பார்த்து யாரும் வராதீர்கள்
"கதையை எதிர்பார்த்து யாரும் வராதீர்கள்" என்றுதான் அந்த படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டது. ராம் என்ற பெயரை, ரவிச்சந்திரன் என்று மாற்றியது ஸ்ரீதர்தான். அந்த பெயரே கடைசிவரை நிலைத்தும்விட்டது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, அடுத்தடுத்த படங்கள் வெளியாகின.. ஒரே வருடத்தில் 5 படங்கள் 100 நாள் ஓடியது.. ஜெய்சங்கரைவிட பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகம்.. வயதான பிறகும் நல்ல படங்களையே தேர்ந்தெடுத்து நடித்தார்.. அந்த படங்களும் நன்றாக ஓடின..
ஷீலாவுடன் நடந்த திருமணம்
"நான்" என்ற படத்தில் நடிகை ஷீலா அறிமுகமானார்.. ஆனால், மலையாளத்தில் தான் ஷீலா பிரபலமானார்.. செம்மீன் ஷீலா என்றால்தான் அனைவருக்கும் அவரை தெரியும்.. அப்போது ரவிச்சந்திரனும் மலையாள படங்களில் சென்று நடித்தார்.. அப்போது ஷீலாவுடன் காதல் ஏற்பட்டது.
ரவிச்சந்திரன் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றாலும் இவர்களின் காதல் முற்றிக் கொண்டே போனது. ஒரு சமயத்தில் ஷீலாவையும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.. ஷீலா கிறிஸ்டியன் எனபதால், மதம் மாறி திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு ஜார்ஜ் என்ற மகன் இருக்கிறார்.. இவரும் நடிகர்தான்.. இப்போது டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர்..
இந்த நடிகையுடன் காதல்?
ஷீலாவும், ரவிச்சந்திரனும் சேர்ந்து "அம்மா" என்ற படத்தை எடுத்தார்கள்.. ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை.. 2 வருடம் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள்.. அதற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் பிரிந்துவிட்டனர். தாயுடனே ஜார்ஜ் சென்றுவிட்டார்.
அதேபோல, ஜெயச்சந்திரனுக்கு நிறைய காதல் அப்போது இருந்தது.. பிந்துகோஷ் மீதும் காதல் இருந்தது என்பார்கள்.. அப்போது நடிகை பிந்துகோஷ் சூப்பரா இருப்பாங்க.. டான்சராக இருந்தார்.. ரவிச்சந்திரனும் அருமையாக டான்ஸ் ஆடுவார்.. அவர் நிற்பதே தனி ஸ்டைல்தான்" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications